தேர்தல் வந்து விட்டால்.........தேர்தல்கள் வரும்போது
ஆரத்தி வன்முறைகளால்!

தலைமைகளுக்காக
தலைகள் உருள்கின்றன!

வேஷம் கிழிக்கும் மேடைகள்
ஆவேச முழக்கங்களால்!

தொண்டர்கள் அடிதடி
மண்ணாழ்வோர் கூண்டுக்குள்!

வோட்டுக்களின் முரசறைவில்
வெற்றியாளர் கரமசைக்க.....

காலம் கடந்து செல்கின்றது
அமர்க்களமாய்
செல்வங்களைக் குவித்தபடி!

ஆனால் ......

தோற்றுப் போகும்
வாக்குகளின் நம்பிக்கைகள் மட்டும்.........

நிரப்பப்படாத
வெற்றிடமாய் அடுத்த தேர்தலைத் தேடி!

அஸ்கா - சித்திரம் பேசுதடீ


சின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்தமான கலை சித்திரம் வரைவதுதான் ..பேப்பரும் கலரும் கிடைத்து விட்டால் போதும்.......கைகளில் வர்ணங்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து விடும். எங்க வீட்டு அஸ்காக்கும் இது பொருந்தும். இன்று ஆசையோடு அவள் வரைந்த சில சித்திரங்கள். 


இது மயில் தோகையாம்.....


wow..Super Man...............


அல்லாஹ்வின் அருட்கொடை


ரபியுல் அவ்வல் பிறை 12
அவனியெங்கும் பூத்தூறல்
அண்ணல் நபி பூ முகங் காண!

இருளின் வெம்மையில் மானிடா்
மருண்டெழுந்த நேரம்....................
திருமறையின் வாசகங்கள்
மாநபியின் மாண்பின் சுவாசமாய்!

ஜாஹிலியா  துகிலுரித்த நாட்களில்
அருள் மொழியின் சுவடுகளாய்
ஔிப் பிராவகம்..........
அரபுத் தேசமதில்!

வஹி............
அஹிம்சையின் ஆதாரம்!
அகிலத்தின் வாழ்க்கைக் கையேடு!.
இவ்வுலகின் அறியாமை
பிழிந்தழிக்கும் அதிசயம்!

இஸ்லாம் ....
முஸ்லிம்களின் முகவரிகள்..
தீன் அமுதூட்டலில்
இவ் வையகத்தை நிமிர்த்திட
உம்மி நபியின்  உன்னதங்களை
உரைக்கும் உரைகல்!

எம் பெருமானார் அவதரித்த
இந்நாளில்.........
முழங்கட்டுமெங்கும் அவரற்புதங்கள்!
சந்தனம் கமழும் நம் ஸலாம்
மொழிவில்.........
எந்தன் நபியின் கண்ணியம் மிளிரட்டும்!

அல்லாஹ்வின் அருட்கொடை
அண்ணல் நபியவர்கள்.............பிறந்த
இன்னாளில்
நல்லமல்கள் செய்தே
வல்ல அல்லாஹ்வின் அருள் பெறுவோமே!

ஆரோ வருகினம்


நேற்று காலையில இருந்தே வாசல்ல காகம் கரைஞ்சிட்டே இருந்தது.

"சூ  சூ"

துரத்தினாலும் போகல. அதப் பார்த்து அஸ்கா கேட்டாள்.

"ஏன் காகம் நம்ம வீட்டப் பார்த்து கரையுதுனு"

நானும் பதில் சொல்லனும் எனும் கடமை உணர்ச்சியில சொன்னேன்

"காகம் கரைஞ்சா யாரும் வீட்டுக்கு வருவாங்களாம்"

யாரோ நான் சின்னப்புள்ளயில சொன்னது இன்னும் ஞாபகத்தில கரைய சொன்னேன்...
இந்தக் காலத்து புள்ளங்கள சமாளிக்கிறதே ரொம்பக் கஷ்டம்...
பட் பட்டுனு அடுத்தடுத்த கேள்விகள்....
யாரு? எப்போ? அப்படினு தொடர்ந்த கேள்வி கடைசிக் கேள்வியோட முடிஞ்சுது இப்படி...

"அப்ப யாரும் வராட்டி................"

சந்தேகத்தோடு கேட்டாள்...
நானும் சொன்னேன்..

" யாரும் வராட்டி  இனி காகம் கரைஞ்சா யாரும் வரமாட்டாங்க என்று நினைப்போம் சரியா"

நான் சொன்னதைக் கேட்டு மெல்லத்  தலையாட்டினாள்...

பி.கு
-------
இனி யாரும் காகம் கரைந்தால் யாரும் வருவாங்க என்று சொன்னால் நம்பவே மாட்டேன்....நீங்க!

(என்னதான் நாம் விஞ்ஞான உலகத்தில நம்மைப் பதித்தாலும்கூட இப்படியான மூடநம்பிக்கைகள், எதிர்வுகூறல்களை மனசும் நிராகரிக்காமல் நம்பிக் கெட்டுப்போகுது)

திருமறை