ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778)

கல்வியென்பது பல தத்துவங்களினடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு ஒப்பந்தம். கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) போற்றப்படுகின்றார். இவர்
தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.....என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர்.

பிள்ளைகளின் சூழலில் பாதிதான் பாடசாலையில் கழிகின்றது. மிகுதி வீட்டில்தான். பெற்றோர் பிள்ளை பற்றிய உளவியலை அறியாதவர்களாக இருக்கும்போது பிள்ளையின் இயல்பான கற்றலை விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.

இதோ ரூஸோவின் சில கருத்துக்கள்

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார்.

பிள்ளை வேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை தானாகவே கற்றல் - கற்பித்தலின்போது
கற்றல் சாதனங்களினைப் பயன்படுத்தி பெறும் அனுபவம்சார் கல்விக்கு வலியுறுத்தும் ரூஸோவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு
முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனலாம்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை