எழுத்தணிக்கலைஇஸ்லாமிய எழுத்தணிக்கலை
-----------------------------------------

அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபிமொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபிமொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.

உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப்பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபு மொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன் மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவியமுறையாக வளர்ச்சியடைந்தது.

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

2 comments:

 1. வணக்கம்
  அறியாத தகவல் அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை