ரசிப்புக்கள்

என் முகநூலில் நான் பதிந்த பிறரது பதிவுகள்

மூன்றாவது இதயம்நான் இலக்கிய உலகில் காலடியெடுத்து வைத்தபோது அறிமுகமானவர்தான்  சகோதரர்  நாச்சியாதீவு பர்வீன்....எங்களுக்குள்   பத்து வருடங்களுக்கு மேலான  இலக்கிய நட்பு ! நான் எழுத்துலகில் இருந்து விலக நினைக்கும் போதெல்லாம் என்னை  எழுதத் தூண்டிய எழுதுகோல்களுள் பர்வீனும் ஒருவர்!

பர்வீன்......
யதார்த்தமான விடயங்களை  அழகாக , உணர்ச்சிபூர்வமாக ... வரிகளாக்கி அவற்றை நம்மிடையே  நகர்த்தி விடுவார் ரசிக்கும் விதமாக......
அவரின் இன்னொரு இலக்கிய பிரசவிப்பான "மூன்றாம் இதயம்"  - கவிதை நூல் நாளை வௌியிடப்படவுள்ள  நிலையில் இம்மூன்றாம் இதயத்தின் உணர்ச்சிப் பிழம்புகளை தரிசிக்க நானும் ஆவலாக உள்ளேன்....

இன்ஷா அல்லாஹ்....

நாளை பத்து மணிக்கு சீரீசி மண்டபத்தில் சந்திக்கலாம்...
வாழ்த்துக்கள் நாச்சியாதீவு பர்வீன்!

பெண் விடுதலைஉடலில் மட்டுமல்ல.........
உள்ளத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவதும்கூட
வன்முறைதான்..
எப்பொழுது எல்லா ஆண்கள் தம்மைச் சார்ந்த பெண்களைப் புரிந்தவர்களாக அவர்களின் உணர்வுளை மதித்து வாழ ஆரம்பிக்கின்றார்களோ அப்பொழுதுதான் பெண் விடுதலை ஆரம்பிக்கின்றது!

மனவரிகள்


நம் வலிகளை உறிஞ்சி - அவற்றை
புன்னகையாக மாற்றித் தரும் இதயம்
"அம்மா"

--------------------------------------------------------------
கோழி யுரித்துச் சிவக்கும்
உன் கைகளின் தழும்பாய்.....
எப்பொழுது மிருக்கட்டு மென் உதட்டுன் ஈரம்!
---------------------------------------------------------------
பொய்யோடு மோதும்
மெய்கூட.....
நோய் வந்து சாய்கையில்
மெய்யன்பு ஆரத்தழுவும்
தன் சேயாய்
----------------------------------------------------------------

நீ நீயாகவும்
நான் நானாகவும் இருந்தால்
நாம்.....
யாரோவாகப் போகின்றோம்
----------------------------------------------------------------

முகில்கள் தரை இறங்குகின்றனவோ...
முகம் மூடும் வயல்களில்
மெல்லக் குட்டுகின்றன பனித்துளிகள்!
---------------------------------------------------------------

கிழக்கின் மையலில்
ஒளிரும் ஒளிப்பொட்டின்
அழகை......
அம்பலப்படுத்தும் இரகஸியங்களோ....
ஐதரசனும் ஈலியமும்!
---------------------------------------------------------------

பொங்கி வரும் அலைகள்
தாங்கி வரும் சிற்பத்தில்
பொறிக்கின்றேன் என்
உதடு சுமக்கும் சினமதை!
---------------------------------------------------------------

சுயநலமான இவ்வுலகில்
எல்லோர்மீதும் வெறுப்பாய் உள்ளது!
--------------------------------------------------------------பெருமூச்சு

தும்புத் தோரணங்கள் - எங்கள்
குறுவீட்டின் சாளரங்கள்!

மூச்சைக் கோர்த்து விடும் காற்றில்
ஊஞ்சலாடும் தொட்டில்கள் அவை!

அவஸ்தைகள் தரவு மில்லை
எவர் குடியும் கெடுக்கவுமில்லை

சின்ன அலகு தேய்க்க
உணவும் கேட்கவில்லை...

விரட்டுகின்றீர்கள் எங்கள் இல்லங்களை
அறுக்கின்றீர்!

நிழல் தர எமக்கு மரங்களுமில்லை
நிம்மதியான மடமுமில்லை..

சிறகறுக்கும் உங்கள் முன் - எம்
உறவு  தொலைத்தோ டுகினறோம்!

இருந்தும்....

எம் குரல்ளை நெரிக்கு முங்கள்
கரங்களில்........
குருவிச் சப்தங்கள் அழைப்பொலிகளாக!
.

திருமறை