முகநூல்---------------------------------------------------------
ஒருவர் புகழடையும் போதுதான்,,,,,
அவர்மீதான அடுத்தவர் பார்வையும்
தீவிரமடைகின்றது,,,
ஆக்கினையும்
ஆதரவும்,,,,
அவருக்கான கொடுப்பனவாகின்றன,!
-------------------------------------------------------------
தன் தவறுகளை உணராதவர்கள்,,,,
அடுத்தவர் தவறுகளை விமர்சிப்பதற்கு தகுதியானவர் அல்லர்,,,,
--------------------------------------------------------------

கடலோரம்,,,,,
வெண் மணல் துளைத்து
சங்கெழுதும் இரகஸியமதை,,,,
துள்ளி வரும் அலைகள்
மெல்லதை அள்ளி,,,
கால்களைக் கிள்ளி
என்னுள் சொல்கின்றதே!

-----------------------------------------
அமைதியான தேர்தல்
சாமர்த்திய தீர்ப்பு
ஆனால்,,,,,,
அட்டகாசமான மந்திரி பதவி
ஆர்ப்பாட்டங்கள்,,,
அட!
நாடு எங்கேயோ போகுது !
-------------------------------------------
ஆயிரம் நிமிட வேலைப் பழுவின் மத்தியில்,,,,,,,,
அறுநூறு நிமிடம் நினைப்பது காதல்
அறுபது நிமிடம் நினைப்பது பாசம்
ஆறு நிமிடயாவது நினைப்பது நட்பு
ஆரோ எவரோ
நினைப்பதே யில்லை,,!
-----------------------------------------------

azka


விமர்சனம்

ஓகஸ்ட் 06. - 12, ,2015.....
தினமுரசில் என்னைப் பற்றிய தகவல்களை நசீரா ஏ அஸீஸ் , யாழ் மருதாணி கலை இலக்கிய வட்டத் தலைவா் பதிந்துள்ளாா்,,
நன்றி

உன்னன்பு


உன் அன்பு அழகிய பூ...
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!

இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்!

மலர்கள் மனங்களின் ஈர்ப்பில் உள்வாங்கப்பட்டவை. அதன் நிறமும் அழகும் நறுமணமும் நம் உணர்வின் வருடல்களில் கலந்து நம்மை அடிக்கடி வாசித்துச் செல்பவை. அந்தவகையில்....

இந்தப்பூ.....

தொட்டாற்சுருங்கிப் பூ...........

இந்தப்பூவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் எழுதிய கவிதையும், அதற்கான சந்தர்ப்பமும் ஞாபகத்தில் நிரம்புகின்றது.

தொட்டாற்சுருங்கிப் பூவை யாரும்  கண்டு கொள்வதில்லை. ஆனால் வீதியோரங்கள் , கவனிப்பாரற்ற இடங்களில் இப்பூக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறுதான் எனக்குள்ளும் அந்த அன்பு அடுத்தவர் பார்வைக்கு பெறுமதியற்றுப் போனாலும், விழிகள் வாசிக்கும் உன்னுருவுடன் கசியும் என்னன்பு ரொம்ப உயர்வானது.

இப்பூ......ஊதா நிறம். அழகானது. ரசிக்கத்தக்கது. அவ்வாறுதான் உன்னுடனான என்னன்பும் உணர்வுபூர்வமாக அழகானது.

இப்பூவைச் சூழ மரத்தின் முட்கள் தலைநிமிர்ந்திருக்கும். அப்படித்தான் உன்னன்பும் சினத்தின் தொடுகையுடன் இன்னுமின்னும் அன்பை கூட்டிச் செல்கின்றது

இதுவும்..............


இடம் ..யாழ்ப்பாணம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி தமிழ் மக்களுடன்... இனிமையான இடைக்கால தமிழ்ப் பாடல்கள்....
ஆனால்..
வவுனியா வந்ததும் சிங்களப் பாடல்கள் ஒலிக்கின்றன.....
.
இடம் ...அநுராதபுரம்
பஸ் பயணிக்கின்றது
கொழும்பை நோக்கி சிங்கள மக்களுடன்..
சிங்கம் 1 தமிழ்ப்படம்
.
இதுவும் இன ஒற்றுமைதான்.....

--------------------------------------------------------------------------------

நாம் சந்திக்கும் ஏமாற்றுக்காரர்கள்தான் நமக்குள் எச்சரிக்கை உணர்வுகளை விதைக்கின்றார்கள்....
இடம் .. கொழும்பு காலிமுகத்திடல்
வீடு திரும்பும் நேரம்...
அருகில் ஓர் ஆட்டோ நிறுத்தப்படுகின்றது..
போக வேண்டிய இடம் சொன்னோம்
ஏறுங்களென தமிழில் சொன்னான்..
ஓ முஸ்லிமா...
பயமின்றி ஏறினோம்...
ஆட்டோ புறப்பட்டது...
இலகு பாதை இருக்க வேறு திசைகளில் ஆட்டோ ஓடியது
காரணம் கேட்ட போது....
தனக்கு வீதி தெரியாது என போடு போட்டான்...
கடைசியில் எப்படியோ வீடு சேர்த்தான்..
ஆட்டோ வாடகை 700 என்றான்...
நான் கொடுக்க வில்லை..
உன் தவறுக்கு நாம்.பணம்.தர முடியாதென்றேன்..
சரி..500ரூபா தாருங்களென்றான்..
1000 ரூபா கொடுத்தேன் மிகுதியை தரும்படி...
மிகுதி பணத்தை கையிலெடுத்தான்...
ஆனால்....
கண்ணிமைக்கும் நேரத்தில் மிகுதிப் பணத்தை தராமல் ஆட்டோ பறந்தது..
சீ...இதெல்லாம் ஒரு பொழைப்பு. அந்த ஆட்டோக் கள்ளனை சபிக்கத்.தான்.முடிந்தது. அவனது நம்பிக்கைத் துரோகம் சிறந்ததோர் படிப்பினை எனக்கு....

ஈத் முபாரக்.

அல்ஹம்துலில்லாஹ்..............
பல வருடங்களின் பின்னர் யாழ் மண்ணில் நோன்புப் பெருநாள்.....
மண் வாசனை கமழ....
மனதிலோ சந்தோசக் கீற்றுக்களி்ன் வருடல்.....................
ஈத் முபாரக்.... July 18, 2015முகநூல்உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


முகநூல்
வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்..........
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு ...............
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே,,,,,,,
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்,
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்,,,,
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்,,,
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா,,,,,,,
வீழ்கின்றனவே கவிதைகளாய்,,,,
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே....,
பிரியம்.வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா..
இல்லை
அழகான அன்புக்கா..
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன..
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி....
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்,,,,

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்........
------------------------------------------------------------

தனிமை....
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை..
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை....
எதிர்பார்ப்புக்கள்தான்.
நம்மை ஏமாளிகளாக்குகின்றன..
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்..........
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை......
அதனால்தானோ....
என்னவோ....
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ....
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை.........
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்..........
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்......

ரோசாப்பூ !

இன்று எங்கள் வீட்டில் பூத்த ரோசாப்பூ !

மேகம் பிழிந்து
மழை விரல்கள் தீண்டுகின்றன,,,,
மேனியோ
செல்லமாய் முறைத்தபடி
சிலிர்க்கின்றதே
.
நீர்த்துளிகளின் ஊர்கோலம்
உடைகின்றதா - பூமிப்
படையில் உருண்டு.......
குடைத் திரைகளும்
மருள்கின்றதே
.
மேகம் பிழிந்து
சாளரம் வழியே வீசும்
தூவானம்.......
குளிர் மாலையாய் என்னுள்
அழகு சேர்க்கும்
அதிசயம் சொல்லவா..
.
அடடா....
இருண்ட திரைக்குள்ளும்
ஓரு கவிதை
உருவாகின்றதே
சிறிதாய்....

தேர்தல் தீர்ப்பு
நேற்றைய
வெற்றிக் கோஷங்கள்......
இன்றைய
நிசப்தத்தின் அழகுக்குள்...
.
தேர்தல் தீர்ப்புக்களின்
எழுதுகோல்கள்
வரைந்த சரிதமின்று...
.
காலத்தின் புது
சரித்திரம்....
ஜனநாயகத்தின் மந்திரம்..
அதுவோ .....
மதவாதிகளின் தரித்திரம்..
.
இனவாதத்தில் தீக்குளித்த சில
மதவாதிகளின்
மயானத்தில்.......
இனி.............
சுவடுகளாய்
அஹிம்சை பயணிக்கட்டும்..
.
பிரதமரே.......
உங்கள்
பொறுமைக்குக் கிடைத்த வெற்றியில்
சிறப்பான நல்லாட்சி
பெருமை கொள்ளட்டும்...மன
நிறைவோடு வாழ்த்துகின்றேன்....

முகநூல்"அலை அடிச்சா கரைக்கு வரணும் - அது
தரைக்கு வந்தா ........
மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு கடலுக்குப் போகணும்........"
.

இந்த சுழற்சி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்..
தேவைகள் ஏற்பட்டால் அது நிறைவேற ரொம்ப முயற்சிக்கிறோம். ஏனோ அவை நிறைவேறினாலும் மனதில் திருப்தி வருவதில்லை... மாறாக எமது எதிர்பார்ப்பு இன்னும் விரிந்து சென்று வேறொரு தேவையைத் தொட்டு நிம்மதியின்மைக்குள் சுருண்டு கொள்கின்றது,,,,,
------------------------------------------------------------------------------------------------------உருகும் பனியும்
திரவமாகும் வெப்பங் கண்டால்....
உதிரும் சருகும்
எருவாகும் மண் பற்றிக் கொண்டால்..
முயற்சியும் பயிற்சியுமிருந்தால்
உயர்ச்சியும் வாழ்விலுண்டாகும்...........


சிறகுகள் வேணாம்

நம்மைச் சுற்றி புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை,,,,,
நாம் தனிமையுலகில் வாழும் அனாதைகள்தான்,,,
-------------------------------------------------------------------------------------------

சிறகுகள் வேணாம்
சிறு கூடே போதுமெனக்கு,

-------------------------------------------------------------------------------------------

தினமும் ஒர் சொட்டுக் கண்ணீர் சேமிக்கிறேன்
என் விழிக்கோப்பையில்,,,,
ஓர் நாள்
நான் அடையாளமற்றுப் போகும்போது,,,,,
உலர்ந்து போன
என் இருப்பினைக் காட்டும் சுவடுகளாக
அவை இருக்குமென்பதால்,,,

-----------------------------------------------------------------------------------------

அரசியல் எனக்கு பிடிக்காது, ஆனால்,,,
இப்போதெல்லாமே முகநூல் அரசியல் மேடை ஆகிற்று,,,
தவிர்க்க முடியவில்லை தரிசித்து போகிறேன் சில சுவாரஸ்யங்களை,,

-----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒர் சுவாரஸ்யமான கலை, ஏனென்றால் பல உணர்ச்சிகளின் உள்ளடக்கமே நாம்,,
அதனால்தானோ என்னவோ,,,
ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற ஆர்வம், ஆசை, பதற்றம், எதிர்பார்ப்பு அதனை முடிக்கும் தறுவாயில் வருவதில்லை,,,, காரணம்,,,,,,
அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற அனுபவங்கள் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , நிதானப்படுத்தி நம்மை முழுமையடையச் செய்கின்றன..

-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் பேருக்கு கூஜா தூக்குவதை விட,,
ஒரு சிலருக்கு
ராஜாவாக இருக்கலாம்,,
அப்போதுதான் நம் நல்ல சிந்தனைகளுக்கு அங்கீகாரமும்
செயல் வடிவமும்
கிடைக்கும்

------------------------------------------------------------------------------------------

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கும்போது வெறுக்கும் மனசு, அவங்க நம்மை விட்டு பிரிய போறாங்க என்று உள் மனசு சொல்லும்போது மறைஞ்சிருந்த அந்த பாசம் கண்ணீராய் கரைய ஆரம்பிக்கிறது, பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்தான் இழப்பின் வலி....

-------------------------------------------------------------------------------------------

தேர்தல் பரீட்சை முடிஞ்சாச்சு....
பாஸ் ஆனவங்க
பார்ளிமெண்ட் போவாங்க
பெயில் ஆனவங்க அடுத்தவங்க
கேலிப் பேச்சுக்குள்ள கொஞ்சக் காலம்
விழுவாங்க.............
ஆனா.......
 பள்ளிக்கூட புள்ளைங்கட பரீட்சை இன்னும்
முடியலியே..........
ம்.ம்.....
லீவு முடிஞ்சு
நாளைக்கு மீண்டும் ஸ்கூல் பயணம்...............
ஆரம்பிக்குது
”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!Farook Rizkan's photo.”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10 (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10) என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரம், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமை தாங்கவுள்ளார்.
பிரதம அதீதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறப்பு அதீதிகளாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், மாவை சேனாதிராஜா எம்.பி. – செயலாளர் – இலங்கை தமிழரசு கட்சி, கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கௌரவ அதீதிகளாக மௌலவி எம். முபாரக் – அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி, , எம்.எஸ். ஜலீல் – பணிப்பாளர் – யாழ் கல்வி அலுவலகம், சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் – பிரதிமேயர் – யாழ் மநகர சபை, மௌலவி எம்.பீ.எம். சுபியான் – யாழ் மாநகர சபை உறுப்பினர், டாக்டர் ஹிஜாஸ் – மஹரகம தேசிய வைத்தியசாலை, டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் – அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை, எம்.எம். இமாம் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்
1. கவிமணி மௌலவி புஹாரி – காத்தான்குடி,
2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி – மாபோல,
3. ஏ.எல்.எம். சத்தார் – பாணந்துறை,
4. ரீ.எல். ஜவ்பர்கான் – காத்தான்குடி,
5. கவிஞர் ஜன்ஸி கபூர் – அநுராதபுரம்,
6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் – மூதூர்,
7. கவிமணி நீலா பாலன் – வெலிமடை,
8. ஏ.எம்.எம். அலி – கிண்ணியா,
9. நவாலியூர்க் கவிராயர் – யாழ்ப்பாணம்,
10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் – புத்தளம்,
11. கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் – சாய்ந்தமருது
சிறப்பு விருதுபெறும் மூத்த படைப்பாளிகள்
1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம்
2. கலைவாதி கலீல்
3. முல்லை முஸ்ரிபா
முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ள, சிறப்பு பிரதியை சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ் பெற்றுக்கொள்வார்.
கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளிப்பதுடன், கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைப்பார்.

திருமறை