About Me

2015/08/25

சிறகுகள் வேணாம்

நம்மைச் சுற்றி புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை
நாம் தனிமையுலகில் வாழும் அனாதைகள்தான்
-------------------------------------------------------------------------------------------

சிறகுகள் வேணாம்
சிறு கூடே போதுமெனக்கு
-------------------------------------------------------------------------------------------

தினமும் ஒர் சொட்டுக் கண்ணீர் சேமிக்கிறேன்
என் விழிக்கோப்பையில்
ஓர் நாள்
நான் அடையாளமற்றுப் போகும்போது
உலர்ந்து போன
என் இருப்பினைக் காட்டும் சுவடுகளாக
அவை இருக்குமென்பதால்
-----------------------------------------------------------------------------------------

அரசியல் எனக்கு பிடிக்காது, ஆனால்,,,
இப்போதெல்லாமே முகநூல் அரசியல் மேடை ஆகிற்று
தவிர்க்க முடியவில்லை தரிசித்து போகிறேன் சில சுவாரஸ்யங்களை
-----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒர் சுவாரஸ்யமான கலை, ஏனென்றால் பல உணர்ச்சிகளின் உள்ளடக்கமே நாம்
அதனால்தானோ என்னவோ
ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற ஆர்வம், ஆசை, பதற்றம், எதிர்பார்ப்பு அதனை முடிக்கும் தறுவாயில் வருவதில்லை காரணம்
அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற அனுபவங்கள் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , நிதானப்படுத்தி நம்மை முழுமையடையச் செய்கின்றன.
-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் பேருக்கு கூஜா தூக்குவதை விட ஒரு சிலருக்கு ராஜாவாக இருக்கலாம். அப்போதுதான் நம் நல்ல சிந்தனைகளுக்கு அங்கீகாரமும்
செயல் வடிவமும் கிடைக்கும்
------------------------------------------------------------------------------------------

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கும்போது வெறுக்கும் மனசு, அவங்க நம்மை விட்டு பிரிய போறாங்க என்று உள் மனசு சொல்லும்போது மறைஞ்சிருந்த அந்த பாசம் கண்ணீராய் கரைய ஆரம்பிக்கிறது, பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்தான் இழப்பின் வலி.
-------------------------------------------------------------------------------------------

தேர்தல் பரீட்சை முடிஞ்சாச்சு பாஸ் ஆனவங்க பார்ளிமெண்ட் போவாங்க
பெயில் ஆனவங்க அடுத்தவங்க கேலிப் பேச்சுக்குள்ள கொஞ்சக் காலம்
விழுவாங்க ஆனா பள்ளிக்கூட புள்ளைங்கட பரீட்சை இன்னும் முடியலியே

ம்.ம்.....

லீவு முடிஞ்சு நாளைக்கு மீண்டும் ஸ்கூல் பயணம். ஆரம்பிக்குது

- Jancy Caffoor-

     25.08.2015

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!