முகநூல்
வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்..........
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு ...............
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே,,,,,,,
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்,
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்,,,,
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்,,,
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா,,,,,,,
வீழ்கின்றனவே கவிதைகளாய்,,,,
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே....,
பிரியம்.வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா..
இல்லை
அழகான அன்புக்கா..
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன..
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி....
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்,,,,

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்........
------------------------------------------------------------

தனிமை....
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை..
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை....
எதிர்பார்ப்புக்கள்தான்.
நம்மை ஏமாளிகளாக்குகின்றன..
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்..........
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை......
அதனால்தானோ....
என்னவோ....
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ....
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை.........
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்..........
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்......

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை