மோனா மோனாஎன்னைக் கிள்ளிக் கொள்கிறேன்
மென் மேனி நரம்புகள்
உன் பெயர்த் துலங்களில்
பாசம்  கொண்டதுவோ....
.
அதனாற்றான்.......
நீ அழைக்கும் போதெல்லாம்
களைக்காத என் வார்த்தைகள்
கலையாகிப் போகின்றதுவோ.....என்
கைபேசியில்.......
.
உருண்டு திரளும்- இந்துக்
கரையோர அலைகளினி - தினமும்
இரையாமல் ரசிக்குமெம்மை
நரையாகாத நம் அன்பை ருசித்தபடி......
.
திசை விரிந்தாலும்
உள்ளத்தோசையில்
இசைந்து போன நம் மன்பை.....
கரமசைத்து வாழ்த்தட்டும்
காலமும் நிறைவாய்............
.
உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை