முகநூல்
ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை,,,,
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல,,,,
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு,,,,
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று,,,


ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்,,,,
இழப்புக்கள் வரும்போதுதான்,,,
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன,,சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன,,,
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்,,,,
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்,,,நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்,,,,
மெளனம் சிறந்தது,,,,
ஏனெனில்
அம் மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை