About Me

Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

2021/05/31

சந்தனப் பிழம்பு

இருளை உடைத்துக் கொண்டு

இமயம் தொடுகின்ற  சந்தனப் பிழம்பு 

கண்ணிற்கும் குளிர்ச்சிதானே!


- ஜன்ஸி கபூர் -

        31.05.2021

உணர்வுகள்

 நம்மை பற்றி அக்கறை  கொள்ளாதோர்  .....

தாமாகவே  விலகிச்  செல்கின்றார்  நம்மை விட்டு ...


அடுத்தவருக்கு  செய்யும்  உபதேசத்தை  வாழ்ந்து பார்த்தாலே  புரியும்  கஷ்டம் என்று


Jancy Caffoor -31.05.2021


2021/04/29

தன்மானம்

 


தன்மானத்தையும் சுரண்டுகின்ற மிகப் பெரிய ஆயுதம் வறுமையே. தன்மானம் இழந்து அடுத்தவரின் புறக்கணிப்பிற்கும் ஆளாகின்ற ஒவ்வொருத்தரின் சோகத்தின் வலி கண்களின் வழியாகிச் செல்கையில் அதனை தனது மொழியாகி உணருமோ உணர்வுகள்.  

நாவிலே பொய்யும் புரட்டும் இயல்பாகவே சரளமாகின்றபோது மெய்யும் மெய்க்குள் மௌனமாக அடங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 29.04.2021


2021/04/26

பிரார்த்தனை

இரவு பகல் இறைவனின் படைப்புக்களின் இரகஸியம்தான். நிச்சயம் இன்றைய இரவின் முடிவில், நாளைய விடியல் தொடரத்தான் போகிறது. 

ஆனால் வாழ்வில் ...............

கண்களை மெல்ல மூடுகின்றேன். ஈரத்தின் சுமையில் விழிகள் இன்னும் நனைந்தே இருந்தன.

வாழ்வா சாவா எனத் தெரியாமல் மூச்சுத் துவாரங்களை அழுத்தும் கடன் பற்றிய நினைவோடு மனம் மெலிதாக உரசியபோது பயம் பற்றிப் படர்ந்தது.

கண்களில் மரண பயம்!

நாளைய எதிர்காலம் நம்பிக்கையற்றுப் போனது.

நாளை விடிந்தால் கடன்காரர்கள் வீட்டைச் சுற்றுவார்கள். அவர்களைச் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை.

விரக்தியின் முன்றலில் அலைந்த மனம் மரணத்தை பற்றியே சிந்தித்தது.

விடியலைத் தர மறுக்கின்ற தொடர் சிக்கல்களின் அழுத்தங்களை தாங்கும் மனநிலை இனியுமில்லை.

வறுமையைச் சமாளிக்க வாங்கிய கடன், இன்று வாழ்வையே மூழ்கடிக்கும் பிரமை  .

கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீர், பெருமூச்சில் ஆவியாக்கி கொண்டிருந்தது.

"பெரியம்மா"

என்ற அழைப்போடு பிஞ்சுக் கரங்கள்   தோளைத் தொட்டன. திரும்பிப் பார்த்தபோது................

ஏழு வயது நிரம்பிய சின்ன மலர் சிரித்துக் கொண்டு நின்றாள்.

"உங்க கஷ்டம் தீர இப்போ தொழுதிட்டு வாரேன்"

எனச் சொன்னவளை அணைத்தபோது, எனது அழுகை இருளின் நிசப்தத்தையும் உடைத்தவாறு வெடித்தது.

ஜன்ஸி கபூர் - 26.04.2021



2021/04/23

இரவின் மடியினில்

 இதமான பாடல்கள்

அமைதியால் அழகு பெறுகின்ற ஒவ்வொரு இரவினையும் உரசிச் செல்கின்ற வானொலி இசையை செவிகள் உள்வாங்கும்நேரம் இரசிப்பின் உச்சத்துக்குள் மனம் நுழைந்து விடுகின்றது.

நிசப்தத்திற்குள் மலர்கின்ற அந்தத் தென்றல் இசையோசையில் விழிகள் உறக்கத்திற்குள் தாவுவதும் நமக்குத் தெரிவதில்லைதான்.

அழகான மென் இசைகள் நம்மைத் தாலாட்டும் நேரம் இரவும் மடியாகி நம்மைத் தாங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 23.04.2021



2021/04/21

அழகான அன்பு

 

நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற அழகான அன்பு வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ரசிக்க வைக்கின்றது. அன்பின் அதிர்வுகள் தருகின்ற இன்பங்கள் மனதில் வண்ண மயங்களாகின்றன. 

நமது எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும், கனவுகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் விழுங்கும்போது அமைதிக்குள் அடங்கி விடுகின்றோம். வலுவான மௌனத்தின் பிடிக்குள் நம்மைச் சிறை வைக்கின்ற அத்தருணங்களில்கூட,  அழகான அன்பின் பிம்பங்கள் நம் மனதை மகிழ்வூட்டுகின்றதென்பதே யதார்த்தம்.

ஜன்ஸி கபூர் - 21.04.2021


2021/04/09

மனதின் குரல்

  

எப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤

சின்னச் சின்ன விடயங்களுக்காக அச்சந்தோசங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றது👎👎👎 

ஜன்ஸி கபூர் - 9.4.2021


2021/04/08

வீழ்தலில் எழுக

                    💧💧💧💧  வீழ்கின்ற மழைத்துளிகள்  💧💧💧💧

🌺🌻🌼🌷 தவழ்கின்றன மலர்களில் பனித்துளிகளாக  🌺🌻🌼🌷

கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் நமது தேடலுக்கான விடைத் தளங்களாகவும் இருக்கலாம்.

ஜன்ஸி கபூர் - 08.04.2021



தோல்வி

 தோல்வி  நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி  தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் எண்ணத்தைத் தருகின்றது.  

                           தோல்வி  நிரந்தரமல்ல. 👆👆👆👆

                           வழியும் கண்ணீரும் நிரந்தரமல்ல. 😊😊😊😊

எனவே ஓவ்வொரு தோல்வியிலும் நாம்  வாழ்வைக் கற்றுக் கொள்கின்றோம். 


 ஜன்ஸி கபூர் - 08.04.2021

2021/04/07

பயணம்


கசக்கப்பட முடியாத காலடித் தடங்களின்
களைப்பின்றிய பயணம் இலக்கினை நோக்கி....✍✍✍✍

ஜன்ஸி கபூர் - 07.04.2021


 

2021/04/06

தாய்மை

ஒவ்வொரு பெண்ணிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட மிகப் பெறுமதியான பொக்கிசம்தான் இந்தத் தாய்மை. தாய்மையின் விம்பத்திற்குள் தெரிகின்ற அம்மாவின் அன்புக்கு நிகராக இவ்வுலகில் எதுவும் இல்லைதானே. தன் இருதயத் துடிப்புக்குள் நமது நலத்தையும் பிணைத்து நமக்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தூய்மையான உறவுக்குள் இந்த உலகமே அன்புடன் அடங்கித்தானே கிடக்கின்றது. 

தன் கண்ணீருக்குள்ளும் பிள்ளைகளை பன்னீரால் நீராட்டும் இந்த இரத்த ஆன்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற ஒவ்வொரு மகவும் தாயின் மடியில் சுவர்க்கத்தை சுவாசிக்கின்ற உத்தமமான உயிர்க்கூடு தானே....

 - ஜன்ஸி கபூர் - 06.04.2021

2020/01/08

வலி களைந்து வாழ்வதும்

 கசக்கி எறிந்த காகிதமாய் கடந்த காலம் எட்டிப் பார்க்கின்றது. நம்மை விட்டுப் போகின்ற ஒவ்வொரு விடயங்களுமே காலத்தின் மடியில் பெறுமதி அற்றுத் தான் போகின்றன.
கடந்த 2019 ....................

எதுவுமே ஞாபகத்தில் படியாத மடிப்புக்களாய் மனசோடு மண்டிக் கிடக்கின்றன. காலத்தின் இயந்திர ஓட்டத்தில் நான் என் இயல்பான என்னை இழந்தேனோ? வுpயப்புடன் என்னை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றேன். வாழ்க்கைசார் கடமைப் போராட்டத்தில் மூழ்கி இற்றுப் போன மனதை மெல்ல மெல்ல மீளத் திருப்ப முயற்சிக்கின்றேன் இந்த 2020 இல்!

இனி எல்லாம் கடந்து போகும். பல அனுபவங்களை உச்சத்தில் தொட்டு பாதாளம் வரை வழுக்கி மீள எழுந்து நடை பயின்று இந்த சுவாரஸியமான பயணமே வித்தியாசமான அனுபவம்தான். அடுத்தவரை காயப்படுத்துவோர் வார்த்தைகளையெல்லாம் வலி களைந்து வாழ்வதும் வாழ்வின் முக்கிய எல்லைதானே!

2020/01/01

புத்தொளியுடன் 2020

ஒவ்வொரு ஆண்டும் ...........

காலச்சுழற்சி வேகத்தில் சுழன்று மாற்றம் காண்கின்றது. 
வருட தொடக்கத்தில் ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படுகின்ற தன்னம்பிக்கை நேர்ச்சிந்தனை போன்ற பல நல்ல விடயங்கள் காலப்போக்கில் வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு அவநம்பிக்கைகள் சவால்கள் இன்னல்களால்  காணாமல் போகின்றன. 

எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் ஒரே நேர்கோட்டில் மையங் கொள்ளும் போக்கில் மீண்டும் ஒரு புதுவருடத்தின் தொடக்கம் இன்று!

ஒவ்வொருவர் மனதிலும்   எதிர்பார்ப்புக்களும்....நம்பிக்கைகளும் மீண்டும் இன்று துளிர்விடத்  தொடங்கியிருக்கும். 

அத்தளிர்..............

ஆரோக்கியமான மாற்றங்களால் அனைவர் வாழ்விலும் ஏற்றங்களை உருவாக்கி வாழ்வில் மகிழ்ச்சிகளும் பொங்க இனிய புதுவருட வாழ்த்துக்கள்........ !!


அன்புடன் ஜன்ஸி கபூர்

2019/06/16

வசந்தத்துளிகள்


எப்பொழுது நாம் பிறரால் மறுக்கப்படுகின்றோமோ, அன்றுதான் நாம் நமது ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கின்றோம்!
----------------------------------------------------- 


சனியில் நாங்கள் சட் செய்தோம்
ஞாயிறில் என் ஞாபகத்தில் நீ
திங்களில் முத்தங்களாய் தித்திப்பு தந்தாய் 
செவ்வாயில் திருமண உறுதி தந்தாய்
புதனில் கனவுலகில் புதுமணத் தம்பதியராய் நாம்
வியாழனில் வீட்டுக்கு வந்தாய் திகதி குறிக்க
வெள்ளியில் ........ உள்ளம் திருடிச் சென்றாய்!
----------------------------------------------------- 

ஆடம்பரமான ஹோட்டலில் புரியாணி சாப்பிட்டாலும் கூட, வீட்டுல குடிக்கிற கஞ்சிக்கு ஈடாகுமா

நாம் அடுத்தவருக்காக ஆடம்பரத்துல நாட்டம் காட்டினாலும் கூட, எளிமையிலதான் அதிகமான மகிழ்ச்சி இருக்கிறது.

---------------------------------------------------------- 
பெண்ணின் அழகும் இளமையும் தான் ஒவ்வொரு ஆணிணதும் உணர்ச்சியைக் கிளரச் செய்து அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கின்றன!

ஆனால் அவளின் அன்பே அவன் வாழ்வை என்றும் முழுமையடையச் செய்கின்றன!
------------------------------------------------------ 



காதல் ஒரு வார்த்தைதான். ஆனால் அன்பின் முழு இராய்ச்சியமும் அதில்தான் அடங்கிக் கிடக்கின்றது!
------------------------------------------------------- 

பாம்பாட்டி மகுடி ஊதும்போது, பாம்பும் ஆடும்.
அது மகுடிக்காகவா!
இல்லையென்கிறது ஆராய்ச்சி!
பாம்பாட்டியின் உடல் அசைவைப் பார்த்துதான் பாம்பும் ஆடுதாம். என்ன உங்களுக்கும் பாம்பு போல ஆட ஆசை வந்திருக்குமே!

நான் சொல்ல வந்த விசயம் இதுதான்
ஒருவருடைய வீட்டுச் சூழலும், சமுகப் பின்னணியும் தான் அவருடைய முழு செயல்களையும் செய்கிறது. நீங்க தப்பு செய்தா உங்கள ஏசக் கூடாது. ஏனென்றால் அது பலனளிக்காது. அதனால உங்க அம்மா, அப்பாவத்தான் ஏசணும், நீங்க வளர்ந்த சூழலைத்தான் ஏசணும்.

ஆக நல்லவங்க தன்னை சுற்றியிருக்கிறவங்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தரமாட்டாங்க..தவறுகளும் செய்ய மாட்டாங்க. அறியாம செய்தா திருந்திடுவாங்க.


- Ms. Jancy Caffoor -
   16.06.2019

அன்பே மகிழ்ச்சி




எனக்கொரு நண்பர் இருந்தார். அவரும் ஆசிரியர்தான். இலக்கிய ஈடுபாட்டுடன் கூடிய வேடிக்கைப் பேச்சுக்கு அவர் சொந்தக்காரர்.

அவர் அழகானவர்...நடிகர் சரத்பாபுவின் சாயல் ஆனால் மூக்குக் கண்ணாடி அவரிடமில்லை. ஒருநாள் செமினார் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது , அவர் சின்னத்தாடி வைத்திருந்ததைக் கண்டேன்.

"என்ன, தாடியெல்லாம் வச்சிருக்கிறீங்க, காதல் தோல்வியான்னு கேட்டேன்"

சிரிச்சுக் கொண்டே கவிதையொன்று சொன்னார்
(இது அவர் இயற்றினதா இல்லையான்னு தெரியல)

'ம்ம் 
இதயத்தை தாடி என்றேன்
தர மறுத்தாள்....
அந்த தாடியோ இப்ப என் கன்னத்தில
ஒட்டிக்கிட்டுது"

அவர் பதில் சொன்ன விதத்தைக்கேட்டு நானோ சிரிக்க, அவரும் என்னுடன் சேர்ந்து சிரிக்க

அன்று ..............
அவர் சொன்ன விசயம் ஒன்று இன்னைக்கும் மலைப்பா இருக்கு. அந்த இலட்சிய இளைஞர் செய்த தியாகம் என்ன தெரியுமா.

அப்போது அவருக்கு வயது 25, அழகில்லாத, வறுமைப்பட்ட திருமண வாய்ப்பே இல்லாத 45 வயதுப் பெண்மணியைத்  துணிந்து திருமணம் செய்தார்.

வாழ்க்கையை  ஈஸியா நினைக்கிற இந்த மனசு எத்தனை ஆண்களுக்கு வரும்! இன்று வரைக்கும் அந்த தம்பதியினர் ரொம்ப சந்தோஷமாக வாழுறாங்கள்.

அன்பே மிகப் பெரிய மகிழ்ச்சி!

- Jancy Caffoor-
   16.06.2019

சின்னக் குறும்பு





நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ, எங்கட ஊர்ல (யாழ்ப்பாணம்) சுவீப் டிக்கற் விக்க ஒருத்தர் வருவார். அவர வைரமாளிகைன்னு சொல்லுவம். அப்படி ட்ரெஸ் எல்லாம் போட்டு ராஜ கம்பீரமா குரல் கொடுத்திட்டு போவார்.

இதில என்ன விசேசம் என்றால் அந்த உருவத்துக்கு என்ர தங்கச்சி ரொம்ப பயம். நான் எங்கேயாவது விளையாட வெளிக்கிட்டா அந்த வாலும் ஒட்டிக் கொண்டு என் பின்னாலேயே வருவா. கொஞ்ச தூரம் போனதும்,

 "இந்தா உன்ன பிடிக்க வைரமாளிகை வாரார்"

 என்று கத்துவேன்.

அழுது கொண்டு தலை தெறிக்க வீட்ட ஓடுவாள் அவள்!

  இதை இப்ப நினைச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!







- Jancy Caffoor-
   16.06.2019

கனவுகள் சொல்வதென்ன

Image result for கனவு கவிதை

கனவுகள் என்பது உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடா என்பது பற்றி பல நாட்களாய் சிந்தித்திருக்கின்றேன். ஏனெனில் நம்மையுமறியாமல் ஆழ்மனதுள் பதிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தான் கனவாகி கசிந்து வெளிப் பாய்கின்றன.

நான் அண்மையில் கண்ட கனவொன்று இன்னும் என்னுள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அது அதிகாலைக் கனவு. அதிகாலையில் காணப்படும் கனவுகள் பலிக்குமென்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்கள் வேறுதான்.

கனாக்கள் அழகானதுதான் நாம் விழிக்கும் வரை!

- Jancy Caffoor-
   16.06.2019