About Me

2014/08/16

கைவிலங்கு


உன்னைச் சுற்றும் சிலந்தி
நான்....
சிறைபடுகின்றாய் தினமு மென்
பார்வைக்குள்...!

விடுதலை யுனக் கிருந்தும்
நீ ......
விரும்பிக் கிடக்கு மென் சிறையின்
கைவிலங்காய் என் அன்பு!

Jancy Caffoor

நாங்கள்

விடை தேடும் விடுகதையொன்று!

நாங்கள் 
தினமும் சண்டை பிடிக்கின்றோம்!

ஆனால்
நாங்கள் விரோதிகளல்லர்!

நாங்கள் 
அன்பாகவும் சில நேரங்களில்
பேசுகின்றோம்!

ஆனால் 
நாங்கள் நண்பர்களுமல்லர்!

நாங்கள் யார்?

உணர்வுகள்



நம் உயிர் வாழும் கூடு மெய்
இருந்தும்....
மெய் யன்பில் நாட்டமில்லா வாழ்வோர்தான்
அதிகம்...
இந்த பொய் உலகில்!
-------------------------------------------------------------------------------------

நாம் பெறும் அனுபவங்களே உணர்வுகளில் பதிந்து நமது செயல்களாய் இயக்குகின்றன. எனவே நாம் எவ்வாறு நம்மை நினைக்கின்றோமோ, அவ்வாறேதான் பிறரையும் நினைப்போம்..

நமது எண்ணங்களுக்கும், யதார்த்த சூழலுக்கும் இடையில் ஏற்படும் இடைவௌிகளே மனக்குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.....

எனவே................

நல்லதையே நினைப்போம்!
-----------------------------------------------------------------------------------

பல வருடங்களாக களிப்போடு
சிறகு விரித்த என் கல்விச்சாலை...இன்று
சிறைக்கூடமாய்!
யார் செய்த தவறிது!
----------------------------------------------------------------------------------
அன்று ன்னை
என் தனிமைக்குள் நிரப்பி வைத்தேன்

ஆனால்....

இன்று .....

தனிமையோ....
துணையின்றி!
---------------------------------------------------------------------------------

சில புதிர்களுக்கு இப்பொழுதுதான்
விடை கிடைத்திருக்கின்றது!

காத்திருந்து இற்றுப் போன இதயம்
காலனிடம் மண்டியிடாமல்...
காலம் காயம் ஆற்றட்டும்!
--------------------------------------------------------------------------------
எல்லாம் கடந்த பின்னர்தான்
வாழ்க்கை பற்றிய தேடல் ஆரம்பிக்கின்றது!
விளைவாய்..........
விரக்திக் கோடுகள்!
அவை...............
அழியா வரங்கள்!
-----------------------------------------------------------------------------
என் குடும்பம்
என் கணவன்
என் பிள்ளைகள்
எனும் "என்' பற்றிய சுயநலத்தினால் பொறாமையும், பாவங்களும், விரோதங்களும் உருவாகின்றன. இச்சுயநலம்தான் உறவுகளுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

- Jancy Caffoor -

WhatsApp



உணர்வுகளின்
அன்புப் பாலம்!

செல்லச் சண்டைகளின்
உஷ்ண கூடம்!

புகைப்படங்களைப் பரிமாற்றும்
கொடையாளி!

நம் மனதை மெஸேஜ்களாய்
வாசிக்கும் செய்திச்சாலை!

இரவும் பகலும்
நமக்குழைக்கும் தூதன்!

பேச்சொலி மறுத்து
மூச்சொலிக்குள் ஸ்பரிசம் சேர்க்கும்
காதல் பரிசு!

ஞாபகங்களைப் பதுக்கி வைக்கும்
களஞ்சியசாலை!

லாஸ்ட் ஸீனில் நம் வருகையைப்
போட்டுக் கொடுக்கும் துரோகி!

அட.....

இத்தனைக்குள்ளும்
எனக்குப் பிடித்தது..........

உன்னை தினமும் என்னுள்
அடையாளப்படுத்தும் பொக்கிஷ மது!