About Me

2020/09/05

பனைமரம் - பழமொழிக் கவிதை

 


தென்னையை வைத்தால் பலன் கண்டு  செல்வார்கள்

 பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்

 

நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/

தலையால் தருமே நுங்காகி இனிக்க/

மடி பூக்கவே பல ஆண்டுகள்/

இடி தாங்கியே மழையும் பூக்கையில்/

கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/

காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/


ஜன்ஸி கபூர் 



 


வலிமைக் கழகு செயல்

 


சிறகை வருத்தி உடலும் வருந்த

பறக்கின்ற கழுகைத் துரத்துகின்றதே காகம்

துறந்திடாத பகைமையினில் வான் தாக்குதலோ

அறமில்லா பழி வாங்கல் ஆகாயத்தினில்


வலிமைக் கழுகு இலக்கின் பற்றே

எளியோர் செயலுக்கும் சினமது வீணே

உயர்ந்த வானும்   காகத்திற்கு ஒவ்வாதே

உயரப் பறந்ததே கழுகும் வென்றிட


உடலும் அறிவும் கொண்ட வலிமை  

உயர்த்திடுமே வாழ்வினில்  துரத்திடுமே இன்னலையும்

விரட்டிடுமே பகைமைதனை மதியின் நுட்பமே

விழைந்திடும் வெற்றியின் தடத்திலும் வீரமே


ஜன்ஸி கபூர்  



  •  

சமுதாயச் சிற்பிகள்

 சமுதாயச் சிற்பிகள்

-------------------------------

எண்ணும் எழுத்தும் சிந்தையில் பிசைந்து/

பண்பிலும் நடத்தையிலும் அழகினைப் பதிந்து/

கற்பித்தலுடன் தானும் இற்றையுடன் கற்றே/

தன்னம்பிக்கையுடன் ஆற்றலையும் மாணவருள் பதிக்கும்/

ஏணியாகும் ஆசான்கள் சமுதாயச் சிற்பிகளே/


ஜன்ஸி கபூர் - 05.09.2020



நிலாச்சோறு

 அலைகள் பூக்கும்

நுரைகள் சிரிக்கும்

மகிழ்ச்சி


அவனும் அவளும்

ரசித்தே நடந்திடும் 

பொழுது


கண்கள் சிரிக்கும்

கனவுகள் ரசிக்கும்

ஏக்கம்;


எண்ணம் ஏங்கும்

இதயம் துடிக்கும்

தயக்கம்


கரங்கள் இணையும்

உறவும் மலரும்

காதல்



ஜன்ஸி கபூர் - 04.09.20


தொடர்கவிதை

 மகிழ்ந்திடும் மலர்களின் இதழ்களில் பனித்துளிகள்

மொய்த்திடுதே பருக்களாக பருவத்தில் மலர்களோ

தென்றலும் வருடுகையில் வெட்கத்தில் சிவந்திடும் 

அழகினை ரசிக்கையில்  மனதுக்குள் பரவசமே


ஜன்ஸி கபூர் 

2020/09/04

அந்தாதிக் கவிதை

 உயிரில் கலந்து உதிரத்தில் செதுக்கி/

செதுக்கி எடுத்தாரே அன்னையும் அன்பாலே/

அன்பாலே மனங்களை ஆள்கின்றார் நிதமும்/

நிதமும் நினைவுகளில்  வாழ்கின்ற உறவே/

உறவே உயர்வாகும் தாய்மையின் நிழலிலே/

நிழலிலே ஒதுங்குகையில் துயரமெல்லாம் இன்பமே/

இன்பமே இதயத்தில் இணைந்திருக்கின்ற வாழ்விலே/

வாழ்விலே கண்டெடுத்த அன்பின் சொர்க்கமே/

சொர்க்கமே என்பேனே தாயின் மடியும்/

மடியும் துடைத்திடும் எந்தன் துன்பத்தை/


ஜன்ஸி கபூர் 

அனுபவப் பாடம்

வகுப்பறையே வரம்தானே ஆளுமைகள் சிறந்திடவே/ 

வாழ்க்கையின் அனுபவங்களை பாடங்களாய் கற்கையிலே/

வெற்றியின் வழியினில் சாதனைகள் நமதாகும்/

கற்கண்டாய் திறமைகளும் காண்பவரைக் கவர்ந்திடுமே/

கல்வியினால் பெற்றிடும் நடத்தை மாற்றங்களே/

சிறந்த மனிதர்களை சமூகத்தினில் உருவாக்கும்/

ஜன்ஸி கபூர் 



வாழ்க்கைத் துணைநலம்


திருக்குறள்-4

#தற்காத்துத்_தற்கொண்டான்_பேணித் #தகைசான்ற_சொற்காத்துச்_சோர்விலாள்_பெண்.


கற்பின் அழகி 

வாழ்தலும் சிறந்திட மங்களமான இல்லாள்/

வாழ்க்கைத் துணையின் உணர்வோடு இசைவாள்/

கற்பின் ஒழுக்கத்தினில் கருத்துடன் கலந்தே/

கட்டிய துணையுடன் புகழையும் காப்பாள்/

வல்லமை மனமே வனப்போடு மனையாள/

வார்த்தை அழகுடன் சோர்வின்றி வாழ்ந்திடுவாள்/

ஜன்ஸி கபூர்  


2020/09/03

பெண்ணின் பெருமை

 

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக/

பாரையும் ஆள்கின்ற அற்புத சக்தியவள்/


அறிவின் தடத்தினிலும் ஆளுமையோடு பயணிக்கையில்/

அண்டத்தையும் அளந்திடுவாள் மதி நுட்பத்தால்/

சந்தர்ப்பங்களைச்  சாதனைகளாக மாற்றிடும் சுவடெல்லாம்/

சந்தோச வாழ்வும் ஆளும் தினமும்/


விழிகளில் மொய்க்கின்ற அன்பிற்கே இலக்கணமாம்/

விட்டுக்கொடுத்தே தேய்கின்ற தாய்மையின் விளைநிலமாம்/

விருந்தோம்பலும் உயிர்த்திடுமே மங்கையவள் பண்பினிலே/

விளைகின்ற பொறுமைக்குள் மலருமே பெருமையும்/


ஜன்ஸி கபூர்  


 

நீதியும் தீர்ப்பும்

திக்கின்ற ஏழ்மைக் கனவுகள்/

நியாயமின்றி மகண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின்/ 

எண்ணத்திலும் புண்ணாகும் சட்டத்துள் துளையிருந்தால்/

அநீதிகள் ஆளப்படுகையில் நீதியும் கூண்டுக்குள்/

அதிகார வதையினில் அனலுக்குள் நேயமே/  


நீதிமன்றம் மிறைந்திடும் கல்லறைக்குள் கலிகாலமே/

சூழ்நிலைச் சாட்சிகள் சூது பரப்புகையில்/

ஆழ்நிலைச் சிந்தனைகள் நெறிக்குள் தெறித்திடுமே/


கைவிலங்குகள் அரணாகும் நொடிப் பொழுதினில்/

நம்பிக்கையும் அறுந்திட விடுதலையாவார் கணத்தினிலே/

மனிதத் தீர்ப்புக்கள் வேடத்தினால் வெளிறுகையில்/

மனசாட்சியாக ஒலித்திடுமே இறை தீர்ப்புமே/


ஜன்ஸி கபூர்

நாட்டுப்புறக் கலை

கலைகளே செதுக்கிடும் பண்பாட்டின் உணர்ச்சிகளை/ 

உணர்ச்சிகளை வடித்திடுவார் ஆடல் பாடல்களாய்/

பாடல்களாய் ஒலித்திடுமே சமுதாயத்தின் வாழ்வியல்/

வாழ்வியலின் அழகியலே நாட்டுப்புறக் கலைகளே/


ஜன்ஸி கபூர் - 03.09.2020




மழைக் காலக் காதல் ஒன்று

தரையில் நொருங்குகின்ற மழைப் பூக்களும்/

கரைகின்றதே மேனியில் உறவின் ஏக்கத்தினில்/

திரை போடா மோகத்தின் சிலிர்ப்பினில்/

வருடுகின்றனவே கரங்களும் இடைத் தளிரை/


விரைகின்ற தென்றலும் அசைக்கின்ற குடைதனில்/

வரைகின்றதே நீரும் வசந்தத்தின் ஈர்ப்பினை/

மயங்கிடும் உள்ளங்களின் மகிழ்வுப் பயணமதில்/

தயங்கிடுமோ கால்களும் தனிமைக்குள் நனைந்திடவே/


விழி அழகின் விருந்தோம்பலாய்க் காதலை/

சுவைக்கின்றதே அன்றில்களின் ஆனந்த இதயங்கள்/


ஜன்ஸி கபூர் - 03.09.2020



தாய்மை

அன்பிற்கும் உயிரூட்டுகின்ற அற்புத துடிப்பிது

துடிப்பிது படர்ந்தே துணையாகி வழிகாட்டுதே

வழிகாட்டுதே பாசமாக எதிர்காலமும் சிறந்திடவே

சிறந்திடவே எமக்குள் பாதைகளை வகுத்தாரே

வகுத்தாரே ஒழுக்க விழுமியத்தின் மரபுகளை

மரபுகளைப் பேணியே மாண்புகளைக் காத்திடவே

காத்திடவே வேண்டுமே அகிலமும் போற்றவே

போற்றவே வாழ்கின்றோம் அன்னைக் ஈடேது

ஈடேது வையகத்தினில் தாய்மை அன்பிற்கும்


ஜன்ஸி கபூர்  - 03.08.2020



நினைவு

 


சடசட மழையில் நனைந்த தேகத்தினுள் /

 சிலுசிலு காற்றும் அணைக்குதே காதலில் /

 படபட வென துடிக்கும் நெஞ்சுக்குள் நீயே/

 கலகலக்குதே நினைவும் உன்னை அணைத்தபடி/

ஜன்ஸி கபூர் - 02.09.2020

2020/09/01

ஆசான்

கற்கும் கல்வியும் கண்ணியம் காத்திட

சொற்கள் பழக்கும் சொல்வளம் அவரே


அறியாமை நீக்கி அறிவைப் பெற்றிட

நெறியாய் விளங்கி நெடுநாளும் வாழ்த்துவாரே

 

ஏணியாய் மாறி ஏற்றத்துடன் வாழ்ந்திட

பணி செய்திடும் பண்பாளரும் அவரே 


மழையாய் பொழிந்து மனங்களில் நிறைந்து

ஏழையும் வாழ்ந்திட எந்நாளும் உழைப்பாரே


இருள் வாழ்வும் இன்னல்கள் அகற்றிட

அருள் புரிந்திடும் ஆசானும் நிறைவாரே


ஜன்ஸி கபூர் - 01.08.2020



மோகனப் புன்னகையில்

 கன்னத்தில் உரசுகின்ற கருங்கூந்தல் வளைவும்

இன்பத்தில் நனைகின்ற கூர்விழி அழகும்

புன்னகைத் தித்திப்பில் கரைந்தே வழிகையில்

வெண் முத்துக்கள் இதழுக்குள் வழுக்குகின்றதோ


மோகத்தை வருடுகின்ற வெண்சங்கு கழுத்தினில்

மெல்லிய வருடலாய் துளிர்க்கின்ற மச்சமும்

அல்லி பிழிந்தெடுத்த அற்புத தேகத்தினுள்

மென் கீற்றாய் வெட்கத்தின் வாசமும்


மின்சாரம் பாய்ச்சுகின்ற மோகனப் புன்னகையில்

என்னிதயம் அடிக்கடி நழுவி வீழ்கிறதே

உந்தன் இமைக்குள் காந்தத்தின் ஈர்ப்போ  

உயிரோடு வருடுகின்ற பேரன்பும் நீ  


சந்தனம் வழிகின்ற தேகத்தின் துடிப்பினில்

சர்க்கரையாய் மொய்க்கின்றதே மயக்கிடும் விழிகள்

சாய்கின்றாய் தென்றலில் சரிகின்றேன் நானும் 

சரமாக்கி  சூடுகின்றாய் அன்பை  என்னுள் 


தொலைகின்றேன் நானும் தனிமையுடைத்து உன்னுலகில்

அலைகின்றாய் எனக்குள் நீங்காத நினைவாக  

கலைகின்றதே சோகங்களும் சலங்கைச் சிரிப்பினில்

கனவுகளும் உயிர்க்கின்றதே எனையும் அணைப்பதனால்  


காத்திருக்கிறேன் தினமும் காதலும் மொய்த்திருக்க

கசங்கிடாப் பூவே உந்தன் நுதலினில்

எந்தன் ரேகைதனைப் பதித்திடும் நாளுக்காய்

உறைகின்றேன் ஏக்கத்தினில் காலத்தை எதிர்பார்த்தபடியே


ஜன்ஸி கபூர்  




சிகரம் தேடி

முயற்சியும் பயிற்சியும் உயர்வின் படிகளே/

முன்னேற்றம் கண்டிலாம் இலக்கின் பாதையினில்/

கடக்கின்ற மணித்துளிகள் உழைப்பிற்கே தடமானால்/ 

உடைந்திடுமே தடைகளும் ஊக்கத்தின் விளைவினிலே/


செல்கின்ற பாதைக்குள்ளே தோன்றிடுமே முட்களும்தான்/

வெல்கின்ற எண்ணமிருந்தால் சோர்வில்லா வலிமையெழும்/

தன்னம்பிக்கை தீட்டுகின்ற ஆளுமைப் பாதையினை/

கண்டிலாம் சாதனைகள்தான் ஏற்றத்தின் வாழ்வினிலே/


இறையும் மறையும் இணைந்திருக்கும் ஒழுக்கத்தினில்/

இதயமும் தொழுதிடும் விழுமியப் பயணத்தினில்/

நல்வாழ்வும் நமதாகும் நாடியதோ நலமாகும்/

நல்லவற்றை பெற்றிடவே நாளும் முயன்றிடலாம்/


இன்ப மனநிலையில் உழைத்திடும் ஆசையெழும்/

இவ்வுலக வாழ்க்கைக்குள்ளே வெற்றியின் வாடையே/

தற்பெருமை அழிந்திடுமே பேராற்றல் முகட்டினிலே/

தன்னார்வ நீட்சிக்குள்ளே சிகரமும் தொடுமே 


ஜன்ஸி கபூர் - 01.08.2020





2020/08/31

இயற்கையின் சீற்றம்

 


மேக மழையின் மோக எழுச்சி

தேகமும் நனைந்திட  விளைச்சலாய் வெள்ளமே

வேக நீரின் ஊற்றினில் கரைந்திடும்

பாதக வாழ்வுக்குள் தாழ்ந்திடுமே பாரே


ஆழிக்குள் திமிரெடுக்கும் பேரலைப் புரட்சியும்

அழித்திடுமே வாழிடம் அண்டத்தின் சுவடுகளையும்

வெட்டிடும் மின்னலும் வேரறுக்கும் பசுமையை

திட்டிடுமோ இயற்கையும் தீங்கிழைத்த மாந்தருக்கே


பனிப்பூக்கள் சிதறுகையில் உருகிடுதோ தென்றலும்

தனிப் பாதையோரம் பனியின் ஆவேசம்

மனித வேட்கையினில் மாறியதோ இயற்கையும்

மறந்த விழுமியம் அழிவின் உச்சத்தில்


நெகிழி தடையின்மை வருத்திடும் ஓசோனை

நெஞ்சமும் பிழிந்தூற்றும் இயற்கைச் சீற்றங்களை

நெருடட்டும் மண்வாசனையும் நெடுங்கால வாழ்வுக்கே

பெருந்துன்பம் வேண்டாமே என்றைக்கும் தலைமுறையினருக்கும்


ஜன்ஸி கபூர் 



மழலை இன்பம்

மழலை மொழி செவியின் நாதமே/

அழகுச் சொல்லில் தமிழும் தித்திக்குமே/

பழகும் மாந்தரும் மகிழ்வார் கொஞ்சி/

தவழுமே காற்றினில் மனமும் ரசித்திட/


ஜன்ஸி கபூர் - 31.08.2020


நாவினால் சுடாதே

நெஞ்சத்து உணர்வே உதிரும் வார்த்தைகளாய்

வஞ்சனை சொல்லாடல் வதைக்குமே நமக்கே

சினமும் சுட்டெரித்தால் விழிநீர் பொங்கிடுமே

அனலின் வடுவாகுமே பண்பில்லாச் சொற்களே

தினம் பேசிடலாம் பயன் அறிந்தே

ஆறாதே நாப் புண் வலிதான்


ஜன்ஸி கபூர் - 31.08.2020


ஓவியங்கள் ஒளிமயமாகுமா

 


இயற்கை செழிப்பினை விழிகளும் ஏந்திட

இதயமும் மகிழுதே பசுமையின் ஆட்சியில்

விளைந்திட்ட வயலின் உழைப்பெல்லாம் முத்தாக

விருப்பினில் வேளான்மை தருகின்றதே மனநிறைவை


உரல் இடிக்கையில் உளத்திற்கும் ஆரோக்கியமே

உடல் உழைப்பினில் மாசுக்கள் இல்லையே

கூட்டுறவின் குதூகலம் கிராமத்தின் எழிலாகும்

கூடிடுமா ஒளிமயமாக்கம் ஓவியம்போல் நிசத்தினிலே


ஜன்ஸி கபூர் - 31.08.2020





 

 

நெகிழிப் பூதம்

மாற்றம் வேண்டுமே நெகிழிப் பாவனையில்

சீற்றத்தினில் இயற்கையும் சிக்காமல் காக்கவே

காற்றினில் நழுவுகின்ற மாசினை சுவாசிக்கையில்

பற்றுதே மரணமும் பறக்குதே ஆரோக்கியமும்

ஏற்றது நமக்கு உக்கும் துணிப்பைகளே

கற்றிடுவோம் பண்பாட்டை காத்திடலாம் நானிலத்தை 


ஜன்ஸி கபூர் - 31.08.2020




நீரோடு அலமரும் கண்

காதல் மனதில் உறைந்திட்ட மன்னவன்/

காத்திருக்க வைத்தான் கடலலைகள் தாண்டி/

சொத்தாய் நானிருக்க பொருளீட்டப் போனான்/

சொந்தம் என்னுள்ளே சோகத்தின் பேரலையே/


கண்ணே கலங்காதே காரினுள் வந்திடுவேன்/

என்றானே தலைவனும் ஏக்கத்தில் மனதாட/

வெய்யோன் இளைப்பாற பசுமையான முல்லையும்/ 

வெட்க முடைத்து மலர்ச்சியினில் சிந்திய/


நறுமணத்தில் வண்டுகள் மயங்கின காதலில்/

தேனின் களிப்பினில் மகிழ்ந்தாடின கூடலில்/

நானோ பிரிவின் தவிப்பினில் துடிக்கிறேன்/ 

வெம்மை தணிந்த மாலைக் குளிர்ச்சியினில்/


கொண்டல்  கூடியே கொட்டிய பெருமழையும்/

எந்தன் கண்ணிலே காட்சியாய் ஊறுகையில்/

விழிநீரும் வடிகின்றதே காரிலும் காணாத/

அழகிய தலைவனின் திருவுருவம் கண்ணிலே/

வெம்மினேன் நானும் தொலைவிலோ மன்னவன்/


சிந்திய மழையினில் கண்ணாளன் நினைவெழ/

சிந்துகின்றேன் கண்ணீரை விழிக்குள்ளும் காரே/

எந்தன் துயர் எனையே வாட்டுதே/

அன்புத் தோழியே அல்லலுறுகின்றதே உயிரும்/

என்றாளே பிரிவின் வலியில் தலைவி/


ஜன்ஸி கபூர் - 30.08.2020




2020/08/30

தொடர்கவிதை

காத்திருந்தேன் நானும் பூத்திருந்தேன் மானே/

கருவறைப் பூமிக்குள் திருவுரு  காட்டிடும்/

உந்தன் தளிர்த் தேக அசைவினில்/

எந்தன் தாய்மைக்குள்ளே இன்பத்தின் தேனூற்று/


ஜன்ஸி கபூர்

திருக்குறள் - 642

 ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு   


உதட்டின் வார்த்தைகளே உள்ளத்தின் கண்ணாடி

உரைத்திடும் நற்சொற்கள் நன்மையில் கூடிடுமே

வருந்திடுமே மனமும் நாசச் சொற்களால்

அருமையான வாழ்விற்கு விழிப்பான சொல்லாடல்


புண்படுத்தும் நெஞ்சினை பண்படுத்தும் நல்வார்த்தை 

துண்டாடுமே மனதினையும் தீதான பேச்சொலியே

பண்பாடு காத்திடுமே சிந்தனை உரையாடல்

எண்ணம்போல் வாழ்ந்திடவே வேண்டுமே பயனுரைகள் 


பேசும் ஆற்றலால் பெருமைகள் தேடி

பேணிடுவோம் நாவினை மகிழ்வும் கோடி


ஜன்ஸி கபூர்

தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்

 விழுமியத்தின் விழுதுகள் தாங்கட்டும் பூமியை

அழுகையின் ஓசைகள் கரையட்டும் ஆழிக்குள்

எழுகின்ற அதிர்வுக்குள் அமைதி ஒலிக்கட்டும்

வாழுகின்ற வாழ்வினை நிம்மதியே ஆளட்டும்


ஒரே வானம் ஒன்றித்த பூமிக்குள்

ஒருங்கிசையும் சிந்தனைகளே ஏற்றத்தினுள் உயிர்க்கும்

வருங்காலம் சிறந்திடவே துறந்திடலாம் சுயநலத்தை

விரும்பிடுவார் யாவரும் அன்பின் வருடலை  


பேதங்களும் வாதங்களும் முரண்பாடுகளாய் வெடிக்கையில்

பேரிடியாய் ஓலமிடும் இனவாதத்தின் அக்கினியே

சாந்தியில்லா நெறிமுறை அறுக்கும் தலைமுறைகளை

வெந்தணலில் அகத்தினையும் முழுதாகப் போர்த்திடுமே


வேதங்கள் மொழிவது மேன்மையான வாழ்வையே

வேதனைகளும் விரண்டோட மனிதமாக மாறிடலாம்

வேற்றுமையேது தரணியெல்லாம் எங்கள் தாயகமாம்


ஜன்ஸி கபூர் - 30.08.2020



வாராயோ பிறைக் கீற்றே

நிலவைத் தொட்டுவிட ஏங்கும் கரங்களிலோ

இலக்கின் துடிப்பிருக்கு வெல்லுகின்ற ஆசையிருக்கு

துலங்கிடும் முயற்சிக்கு துணையும் அருகென்றால்

மலருமே இதயத்தினில் ஆகாயமும் வசப்படுமே

 

சிறு மலர்களின் எண்ண அசைவினில்

இறங்கிடுமோ பிறைக் கீற்றும் தரையினில்

உள்ளத்தின் ஊக்கத்திற்கு வெற்றியோ உச்சத்தில்

உயரமும் தாழ்ந்தே வாழ்த்திடுமே தன்னம்பிக்கையை  


ஜன்ஸி கபூர் 

விடையில்லாத முள்மரம்

ஏடெடுக்கா கரத்தினில் வன்மத்தின் ரேகைகள்/

ஏழ்மையின் ஏக்கத்துக்குள் எரிமலைப் பூக்கள்/

தோற்றுப்போன வாழ்வில் தொடாத வசந்தங்களும்/

பற்று வைத்ததோ பாலகன் வாழ்வினில்/


இனிமையான வாழ்வோ இரும்புத் திரைக்குள்/

தனிமைக்குள் தள்ளாடுதே அறியாத வயதும்/

கனிந்திட்ட மனதுக்குள் கறைகளே குற்றங்களாய்/

மனிதம் துறந்ததனால் மலராதே எதிர்காலமும்/


விழி நீருக்குள் வீழ்ந்திட்ட கனவெல்லாம்/

அழிகின்றனவே நெறி துறக்கும் வாழ்வினால்/

வழி தவறுகையில் சட்டம்தான் பிணைத்திடும்/

பழித்திடுமே வையகமும் பாதகங்களை நினைவுறுத்தியே/


பாசமில்லா மாந்தரும் வகுத்திட்ட விதியால்/

வாசனை அறியாத பூவோ வெயிலுக்குள்/

பழகிய நண்பரும் பழக்கிய பாதகங்களால்/

அழகிய வாழ்வும் சிதறுதே வெறுமையில்/


ஜன்ஸி கபூர் 



  •  

     

தேநீரும் நானும்

உரு மாறும் மேகங்களின் ஊற்றால்/

திரு மேனிக்குள் நடுக்கப் புரட்சி/

தருகிறாள் இல்லாள் சூடான தேநீர்/

விருப்பின் விருந்தாய் ஊறுகின்றது நாவுக்குள்/

பருகும் பானம் படர்கின்றது உணர்வினுள்/

 

உறைக்கின்ற வடையும் உற்சாகத்தில் புரள/

குறைகின்றதே தேநீரும் வெறுமைக்குள் மனசும்/

மறைகின்ற நீராவிக்குள் உறைகின்றதே சுவாசமும்/

நிறைந்திருந்த சோர்வும் அறுந்தோடுகிறது தானாய்/

புத்துணர்ச்சித் துள்ளலோடு அன்றைய பொழுதுகள்/


ஜன்ஸி கபூர்- 30.0/8.2020