About Me

2020/07/04

தென்பொதிகைத் தென்றல்

கவியரங்கம் 222
தமிழ் வணக்கம்
--------------------------
உணர்வுகளில் அழகு சூட்டி அமிர்தமாய் இனிக்கும் என் அன்புத் தமிழே உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்

தலைமை வணக்கம்
----------------------------------
இன்றைய நிகழ்விற்கு தலைமை தாங்குகின்ற நீதி வழுவா மதிப்புமிகு தலைவருக்கு என் பணிவான வணக்கங்கள்

சபை வணக்கம்
------------------------------
தத்தம் தலைப்பிற்கே செந்தமிழ்ச் சுவையினில் எழில்க் கவியிசைக்கும் நிலாமுற்றக் கவிஞர்கயுக்கு என் அன்பான சபை வணக்கங்கள்

தலைப்பு
-------------------
தூது செல்வாய்
துணைத் தலைப்பு
------------------------------
தென்பொதிகைத் தென்றல்
-------------------------------------------

தென்பொதிகைத் தென்றலே
தெற்குத் திசையில் எந்தன் தெய்வமகள்
தெவிட்டா நினைவுகளுடனே
தொலைவான என் தேவதையிடம்
தொல்லையின்றி நீயும் தூது செல்லு 

கானமிசைத்த கானக் குயிலாள்
காந்த விழியால் கட்டிடுவாள் அன்பாலே
காணும்போதெல்லாம் தேனிடுவாள்; வார்த்தைகளில்
காணாம லின்று வலி சுமக்கிறேன்
கண்ணீருக்குள் உறைந்தே உயிர் ஏந்துறேன்

வண்டே துளைக்கா அமிர்த மவளுள்
வந்தமர்ந்ததோ வைரஸ் முட்கள்
வனப்பெல்லாம் துயரால் கரைய
வருந்தி வீழ்கிறாள் வாழ்வை வெறுத்தே
வலிக்கின்றதே எந்தன் நெஞ்சும் பிரிவால்

கொரோனா என்றனர் பிரித்தனர் எம்மை
கொளுத்தும் வெயிலால் மகுடம் சூட்டினர்
கொடி யிடையாள் ஒடிந்தே போனாள்
கெஞ்சிக் கேட்கிறேன் சேதி சொல்லு 
கெட்டி மேளம் கொட்டும் நாள் அருகென்றே

தனிமையே மருந்தாக துடிப்பவளுக்கே
தங்கையாய் நீயும் துணையாய் இரு
தடையெல்லாம் உடைந்ததும் தாவி வருவேன்
தரணியும் நலம் செழித்து வாழட்டும்
தங்கத் தென்றலே அதுவரை அன்பூற்று

ஊசித் தீண்டலுக்கும் அஞ்சும் மென்மலரில்
ஊட்டிவிடு நீயும் அன்பைக் குலைத்து
ஊரெல்லாம் மரண ஓலம்
ஊர்வசி யவளின் அச்சம் பிடுங்கி
ஊஞ்சலாட்டு நீயும் சுகம் மனதை வருடட்டும்

பல மைல் தொலைவினில் பாவை யவள்
பாதை யிருந்தும் பயணத் தடை
பறந்து செல்ல வழியுமுண்டோ
மதி யறியும் உணர்வின் முகவரி
விதிக் கொடுமையோ நுண்ணுயிர்க் காவலிது

கண்மனி காத்திருக்கிறாள் நாட்களை எண்ணியபடி
கண்ணீரை உலர்த்தவே விரைந்தோடு தென்றலே
கண்ணன் எந்தன் மனதைக் கூறிடுவாய்
கன்னிமகளும் காத்திருப்பாள் நம்பிக்கை பூக்க
காலங்கள் கூடுமெங்கள் கரங்களும் சேர

நன்றி நவிலல்
------------------------
நிலாமுற்றத்து 222 ஆம் கவியரங்கினில் கவிபாட வாய்ப்பளித்த தலைமைக்கவிஞர் அவர்கட்கும் முற்றத்து சொந்தங்களுக்கும் பெருநன்றியை மகிழ்வுடன் முன்வைக்கிறேன் கவிஞர்களுக்கு வந்தமர்ந்ததே

- ஜன்ஸி கபூர் -





2020/07/03

வாழ்ந்து காட்டு

சொல்லுக்குள் செதுக்கும் இலக்கணச் சுவையால்/
தொல்காப்பியம் முகிழ்த்ததே பசும் தமிழாய்/
முத்தமிழின் முத்திரையில் அகமும் எழிலாகி/
தித்திக்குமே அமிர்த வாசம் பரப்பி/
திக்கெட்டும் உயிர்த்தெழட்டும்; காவியங்கள் வாழ்வாக/
எழுத்தாகி நீயும் வாழ்ந்து காட்டு/

ஜன்ஸி கபூர்

நிழல்கள்

எத்தனை இரவுகள் எரிமலை வெடித்தன
எரிந்த கனவுகளும் எரிவாயுவில் கசிந்தன
சத்தங்களின் முழக்கங்களே சதியுடன் ஆண்டன
சந்ததிகள் சரிந்தன சகதித்திரையில்

யுத்தம் என்றனர் யுகத்தை அழித்தனர்
நித்தமும் துயரை நினைவோரம் விதைத்தனர்
சத்திய மாந்தர் சடுதியில் மறைந்தனர்
சித்தம் கொன்றனர் சிரிப்பும் தொலைந்தது

அழகான வாழ்வும் அழிந்தேதான் போனது
அகதி என்றனர் அவலம் நிரப்பினர்;
அகில  இருப்பிற்குள் அடைக்கலம் தேடியே
அனாதையானோம் சோகம் சுமையாய் தொடருதே

கண்ணோரக் கனவின் கண்ணீர்க்கதை தானே
காயம்பட்ட வடுவாய் காலத்தோடு வாழும்
நிழலாய்த் தொடரும் நினைவுகள் யாவுமே
பழகிய சுவடுகளைப் பக்குவமாய்க் காட்டுமே 

ஜன்ஸி கபூர்

2020/07/02

வேட்டை

குட்டிக் குளம்
எட்டிப் பார்க்கிறது தவளை
வேட்டைப் பாம்பு வெளியே

 

மர்ம முடிச்சுக்கள்

என்னதான் நடந்ததுவோ ஏனிந்த மாற்றங்களோ
கண்பட்டுப் போனதுவோ நெறியும் பிறழ்ந்ததுவோ
எண்ணங்களில் திட்டமில்லை ஏற்றிவிடத் துணிவுமில்லை
வண்ணக் கனவுகளுமே கானலாய் பூக்குதிங்கே

பெற்ற அறிவும்தான் விலையாகுது வெளிநாட்டில்
கற்ற கல்வியோ சான்றிதழால் எடை கூடுது
தொற்றைப் பரப்புகிறது விஞ்ஞானம் அஞ்சாது
காற்றும் மாசோடு கலந்தே மகிழ்கிறது

''சீ' தனமே மேடை முழக்கம் வெடித்திடும்
சீதனத் திமிரும் சீர்திருத்தம் தானென்றே
வேதனமாய் பூமிக் அளிப்பார் முதிர்கன்னியரை
சாதனைச் சிரிப்போடு பாவங்கள் சுமந்திடுவார்

தெய்வம் வாழ்ந்த மனிதங்களெல்லாம் தன்னலம்
தெறிக்க மாக்களாகி மறைந்தே போகின்றனரே
இப்புவி வாழ்க்கையின்  மர்ம முடிச்சுக்களே
அவிழத்து விடுமோ போதிமரத்துப் பறவைகள்

ஜன்ஸி கபூர்   

நோயெனும் தீயில் நோகிறோம்

விஞ்ஞானம் விண் நோக்கிப் பாய
அஞ்சாமல் மனிதனோ இயற்கையை வேட்டையுமாட
பிரபஞ்ச ரேகையெல்லாம் நுண்கிருமிக் கூடுகள்
தஞ்சமாகி வாழுதே மனித தேகங்களில்

கொரோனா பிரகடனப்படுத்தும் தேசங்களில் பீதி
இறுமாப்புடன் எரிகிறது உயிர்களை உறிஞ்சி
வெற்றுக் கண்ணறியாத தொற்றுக்களின் விவேகமதை
உற்று நோக்குது விஞ்ஞானம் வியந்தபடி

நாசிக் கண்கள் மூச்சை அறுக்கையில்
நாடித்துடிப்பும் உடைந்தே கதறுதே முகத்திரைக்குள்  
மரணங்கள் உயர்கையில் உணர்விழக்கும் உறவுகளும்
உறைந்து போகின்றன மௌனக் குமுறலுக்குள்

ஊரடங்கும் கையுறையும் முகப்புச் செய்திகளாய்
ஊரெங்கும் அலைந்தே உரைக்கின்றதே அவலத்தை
பாரெங்கும் தீயாகும் தீரா நோய்களை
விரட்டிடத் துடிக்கிறதே எந்தன் மனம்  

ஜன்ஸி கபூர் 

சின்னச் சின்ன ஆசை

பட்டாம்பூச்சி பறக்குதே சிறகெல்லாம் துடிக்குதே/
எட்டுத்திக்கெங்கும் பரப்புதே மகரந்தங்களின் உயிர்களை/
பட்டுடல் தொட்டதுமே கரங்களிலும் வானவில்லாம்/   
வட்டமிட்டு பறக்கையில் பிடித்திடத்தான் ஆசையே/

ஜன்ஸி கபூர் 

மூச்சின் முகவரிகள்

mopahJ tho;e;jplNt topNjLk; Vf;fj;JlNd
tpop nkhopapd; fhjYld; tpUl;rq;fspq;Nf    
mopf;fhjPu; czu;NthLk; capNuhLk; gpize;j
mfpyj;jpd; %r;rpw;Nf Kftupahk; kuq;fis

khup nga;jpUf;F thrk; G+j;jpUf;F 
Vupj; Jbg;gpdpNy kdpj efu;tpUf;F
thup aizj;njLj;j gRikr; nropg;gpdpNy
G+upg;gpd;; jpj;jpg;ghk; Nrhfk; njhiye;jpUf;F

,ize;j kdq;fis ,ilapy; mWj;jpl
,q;Fk; jilapy;iy ,d;gf; FiwTkpy;iy
,iwtd; nfhilapJNth ,jak; epiwe;jpUf;F
,g;Gtp tho;e;jplNt tsu;j;jpLNthk; kuq;fisNa

[d;]p fG+u;

2020/07/01

நாட்டிய நாடகம்


அருமைக் கரங்கள் விதி செய்யும்
வெறும் நூலில் உயிர்த் துடிப்பாம்
திரை மறைவில் கொண்டாட்டம்

ஜன்ஸி கபூர் = 02.07.2020



மாண்பான சேவை

மருத்துவர் அகத்தினில் சிரித்திடுவார் மனிதமாய்/
மருந்தாகும் அன்பினாலே குணமும் தருவார்/
தருமமாம் பிணி தீர்த்தே காத்திடல்/
விருப்போடு வாழ்த்திடலாம் மானிட நேசகரை/

ஜன்ஸி கபூர் 

பழைமை வாசம்

இளமை அமிர்தம் வடியும் சோலை/
இரம்மியம் பூத்தே நனையும் காதலால்/
பேசும் காற்றோடு மோதும் மேகங்கள்/
பேரெழிலாய் வீழ்ந்தே ஓடுமே தன்னாலே/

கண்களின் வியப்பில் மங்கள வானம்/

வண்ணச் செழிப்போடு மரங்களின் கானம்/
எண்ணமோ குவிக்குது மகிழ்வின் ஈரம்/
விண்ணின் விடியலாய் அற்புத வரம்/

தென்றல் தழுவுகையில் நீரோடை நாணும்/

தெவிட்டா அன்போடு காத்திருக்கும் ஈருருளி/
இணையும் வாலிபங்களோடு உலா வரும்/
இயற்கை வெளியோ உல்லாசப் புன்னகையுடன்/

சோலை வீதியினில் சோர்வும் மனதறியா/

சோம்பல் களைத்தேதான் சோடியாய் உலாவிடலாம்/
தூய்மைக் காற்றில் நலம் தேடும்/
துணிந்த பயணமிது பழைமையின் வாசமிது/

ஜன்ஸி கபூர்

வாழ்வின் நலம்

விழிப்புணர்வு தினம் வேண்டும் மாந்தருக்கே/
விழிக்கும் உணர்வுகளும் கற்றறியும் மெய்தனை/
ஆழ்மனதின் அறியாமை அகற்றும் விழிப்பால்/
வாழ்வும் நலமாகும் உரிமைகளும்  நமதாகும்/

ஜன்ஸி கபூர் 


2020/06/30

விழித்திடு


,d;Dnkd;d kaf;fNkh ,isQNd tpopj;jpL
,k;ir Nkhfj;jpy; ,d;Dapu; tUj;jp
,d;gNk NjbLk; ,t;Tyf tho;it
,oe;jplhky; tho;e;jpl Vdpd;Dk; jhkjk;

[d;]p fG+u;  



வாழ்க்கைச் சுமை

வாழ்க்கைச் சுமை!
தள்ளாடி வீழ்கின்றது மலர்!!

ஜன்ஸி கபூர் 

2020/06/29

இன்ப அதிர்ச்சி - நுண் கதை

அன்று அவள் பெயருக்கு வந்திருந்த தபாலை விரித்துப் படித்தாள் சுகன்யா. ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து துடித்தன.

' அம்மோய்'  எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் வந்திருக்குது.

அவளின்  உற்சாகம் அம்மாவுக்குள்ளும் மகிழ்ச்சியை ஊற்றியது. தான் ஆசிரியராக வர வேண்டுமென்ற அவளின் கனவு நிறைவேறியதை எண்ணி அந்தத் தாயுள்ளம் மகளை வாரி அணைத்தது.

'மகள்................ நல்ல உடுப்பு வேணுமல்லா போட்டுக்கொண்டு போக'

அம்மா தனது கவலையை வெளிப்படுத்தினார்.

'அம்மா............உங்ககிட்ட இருக்கிற சாறில ஒன்னு தாங்கம்மா. அது போதும்.'

தன்னடக்கத்துடன் கூறிய மகளை பெருமிதத்துடன் பார்த்தார் தாய். வறுமையிலும் வாழப் பழகிய தனது மகள் தனக்குக் கிடைத்த பொக்கிசமாகவே தெரிந்தாள்.

'அம்மா லாட்டரி டிக்கற்'

லாட்டரி சீட்டுக்காரன் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டினான். எப்போதாவது ஒரு நாள்  இவர்கள் வீட்டுக்கு பக்கம் எட்டிப் பார்ப்பான். எவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையுடன் இருபது ரூபா சுரண்டல் லாட்டரி சீட்டினை வாங்குவார்கள். இன்றும் இருபது ரூபாவுக்கு வாங்கிச் சுரண்டினாள் சுகன்யா. 
ஒரே ஒரு நொடி.......கண்கள் மலர்ச்சியுடன்.................. அம்மாவைப் பார்த்தாள்.

'அம்மா ...ஆயிரம் ரூபா பரிசு கிடைத்திருக்கு'

அவள் வார்த்தைகள் அறுந்து கண்கள் நனைந்தன. அவளுக்கு கிடைக்கவுள்ள தொழில் ஓன்றுக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசாகவே அப்பணத்தை நினைத்தாள்.

ஒவ்வொரு துன்பத்திற்கும் தீர்வாக இன்பம் காத்திருக்கும். ஆனால் அதை நாம் கண்டறிவதற்குள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன்ஸி கபூர்

- 29.06.2020

 

Comments


நானிலம் வாழ்த்தும்

 நல்லெண்ணம் நகை அணிந்தோர் அகம்/
வெல்லுமே மனங்களை அன்பால் ஈர்த்தே/
வல்லோனாய் அறத்தில் வாழ்தலே சிறப்பு/
நல்லோரை நானிலம் நாளும் வாழ்த்துமே

ஜன்ஸி கபூர்  


2020/06/28

நாளைய எதிர்காலம்

வெஞ்சினம் அண்டா வெள்ளை மனதால்/
வெற்றிக் குழைக்கும் வெஞ்சுடர் இளையோர்/
வெளிநாடும் மெச்சும் ஆற்றல் கண்டே/
வெற்றுக்கல்வி நாடார் அனுபவமாய் வாழ்ந்திடுவார்/

தடைகளை உடைத்திட தயங்கா கரங்களும்/
தன்னம்பிக்கையுடன் எழுமே தற்றுணிவும் வரமே/
தன்னலம் துறந்து தலைவராய் தொண்டாற்றும்/
தனித்துவச் சிற்பிகளாய் தரணி ஆள்வார்/

சர்வாதிகாரம் தீண்டா சத்திய மாந்தராய்/
சதியும் விரட்டி சகுனிகள் வீழ்த்தி/
சட்டங்கள் காத்தே சந்ததி;கள் வாழ்த்த/
சரித்திரம் படைப்பார் சகியாய் இளைஞர்/

நற்றமிழின் அமிர்தம் நானிலமே சுவைக்க/
நயப்பார் காவியங்கள் நற்கனவுகளும் மெய்ப்பட/
நற்பண்புகள் மூச்சோடு நலமாகிச்  சிரிக்க/
நாளைய மன்னராய் எதிர்காலம் சிறப்பார்/

ஜன்ஸி கபூர் 

காணாமல் போன சைக்கிள் (தந்திரக்கதைகள்)

மனசு ஏனோ வலியால் துடித்தது.. அவள் பேச்சை அப்பா பாலா கேட்பதாக இல்லை. வெளியே போவதற்கு ஆயத்;தமாக செருப்பை அணிந்து கொண்டிருந்தார். பவானி பின்னால் ஓடி வந்தவளாக,
"இப்ப நீங்க போகத்தான் வேணுமாப்பா, சரியான வெயிலப்பா"
வயது போகப் போக வைராக்கியமும் கூடி விடுகின்றது போலும். மகளின் வார்த்தைகளை காதில் ஏந்தாதவராக வெளியேறினார்
'அம்மா ..............அம்மா'
விசும்பிக் கொண்டிருந்தான் ஆறு வயது மகன் தனுஜன். அவனது பிறந்தநாளைக்காக போன கிழமைதான் அப்பா வாங்கிக் கொடுத்த குட்டிச் சைக்கிள் காலையில் காணாமல் போயிருந்தது. அந்தச் சைக்கிள் மகனின் கனவு என்பதும் அதனை வாங்குவதற்காக அப்பா கஷ்டப்பட்டு பணம் சேர்த்ததும் ஞாபகத்தில் விழ கண்களை கசக்கிக் கொண்டாள். யாரோ களவெடுத்து விட்டார்கள். எடுத்தவர்களுக்கு அது வெறும் பொருள் தான். ஆனால் அவள் மகனுக்கு அதுதானே உயிர். விபத்தில் கணவனை இழந்து வாழ்பவளுக்கு இருக்கும் சொத்து மகனும் அப்பாவும்தானே. வேதனை அதிகரிக்க கண்ணீர் கன்னத்தில் உறைந்தது.
"கடைசியாக வீட்டிற்கு வந்து போன கோபி மீது அப்பாக்கு சந்தேகம் வர, அவனது வீட்டுக்குத்தான் போறார். ஒருவேளை அவன் எடுக்காட்டி பிரச்சனையாகுமே.' பயந்தாள்.
கோபி அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவான். அக்கா....அக்கா...என்று வளைந்து வீட்டுவேலை யெல்லாம் செய்து கொடுப்பான். தனுஜன சைக்கிளில் வைத்து உருட்டுவான்.
"இந்த குடிகாரப் பயல வீட்டு வாசல்ல எடுக்காதே'
என்று அப்பா அவனைக் காணும் ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவார். கோபியின் வீடு அடுத்த தெருவில்தான் இருக்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் அவனது வீட்டுக்குத்தான் பாலா சென்றிருந்தார். கதவைத் தட்டினார். கதவைத் திறந்த கோபியின் மனைவி கலவரத்துடன் அவரைப் பார்த்தாள்.
சப்தம் கேட்டு உள்ளேயிருந்த கோபியும் வெளியே ஓடி வந்தான். தந்திரமாக தனுஜனின் குட்டிச் சைக்கிளை வீட்டுக்கு கொண்டு வந்ததை மோப்பம் பிடித்து விட்டாரோ எனும் பீதியில் அவன் முகமெல்லாம் பேயறைந்த பீதியில் கறுத்தது.
அவனைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த கதிரையொன்றை தானே இழுத்துப் போட்டவராக பாலா உட்கார்ந்தார்.
"ஐயா திடீரென்று வீட்டுப் பக்கம்'
எதுவும் தெரியாதவன்போல் கோபி; வார்த்தைகளை இழுத்தான்.
"உன்னப் பாக்கத்தான்"
என்றவாறு எல்லாப் பக்கமும் நோட்டமிட்டார். வீட்டுத்தோட்டத்தின் ஓர் மூலையில் அவர் பேரனின் குட்டிச்;சைக்கிள் தெரிந்தது.
"அதைக் கண்டதும் அவர் கண்கள் விரிய உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்'
ஒரு சில கணங்கள்தான் அந்த உற்சாகம் கரைய, கோபத்துடன் பாய்ந்து அவனது பெனியனைப் பிடித்து உலுக்கினார்'.
'உன்ன பொலிஸில புடிச்சுக் குடுக்கிறன். என்ட பேரன்ட சைக்கிள களவெடுத்தியா' கத்தினார்.
'ஐயா மன்னிச்சிடுங்கய்யா. தெரியாம கஷ்டத்தில எடுத்திட்டார்'
அருகில் அவனது மனைவி கெஞ்சி அழுதாள்.
"குடிகாரப் பயல். குடிக்கத்தான் களவு எடுத்திருக்கிறான்.. தர்ம அடி கிடைச்சாத்தான் திருந்துவான்"
அவர் கோபம் குறையவில்லை. தலையைக் குனிந்து கொண்டிருந்த கோபியோ மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கோபி மனைவியின் கண்ணீர் பாலாவின் தீர்மானத்தை மாற்றவும் கோபியை எச்சரித்தவாறே பேரனின் குட்டிச் சைக்கிளுடன் வெளியேறினார்.
ஜன்ஸி கபூர்