About Me

2020/10/03

கவிதைச்சாரல் கவிதைகள்

  திறமையே   திறவுகோல்

போராடும் வாழ்விற்குள் வலிமையே அழகே

வேரோடும் தன்னம்பிக்கையால் வெற்றியும் அருகே

அறிவின் ஆட்சிக்குள் திறனையும் ஊற்றுகையில்

அகிலமும் புரட்டுமே சாதனையின் பக்கங்களை


உறுதி நெஞ்சினில் முயற்சியின் பலத்தில்

உயர்ந்த வானையும் உருக்கிடலாம் அறிவியலில்

திறம்பட செயலாற்ற பயிற்சியே தளமாகும்

திறமையே திறவுகோலாம்;; ஆளுமையை வளர்ப்பதற்கே



 
 ஏக்கம்
 
ஏக்கத்தில் பூத்தன காதலர் விழிகள்/
விழிகளின் மொழியில் கலந்தன உயிர்கள்/

உயிர்களும் பிணைந்தே மகிழ்ந்தன ஓருயிரில்/
ஓருயிரும் எழிலானதே அன்பின் புன்னகையில்/

புன்னகையில் கசிந்த இதழ்களும் மயங்கின/
மயக்கத்தில் வீழ்ந்தன காதல் நெஞ்சங்கள்/

நெஞ்சின் அலைவினில் நெருடின உணர்வுகள்/
உணர்வின் சங்கமத்தில் பூத்ததே சுகமே/

சுகத்தின் வருடலில் செழித்ததே மோகம்/
மோகத்தின் வாசமும் பரவியதே ஏக்கத்தில்/

 


 அன்பின் மடியினில்
 
மானுடம் பூத்த விழிகளின் நேசத்தில்/
மயங்குமே வலிமையும் சுருங்குமே சீற்றமும்/

புரிந்துணர்வின் ஓசைக்குள் பறந்தோடும் முரண்பாடும்/
பரிவின் அணைப்பில் அடங்கிடுமே சிங்கமும்/

வெஞ்சினமும் கரைந்திடும் தாய்மையின் இதத்தினில்/
வெறித்தனமும் முறிந்திடும் வெள்ளைச் சிரிப்பினில்/

உலக உருண்டையின் அச்சாணி அன்பே/
உணர்வின் மொழியினை உளமும் புரிந்திடும்/

கருத்தினில் உயர்விருந்தால் மதித்திடும் உயிர்களே/
மிருகத்தின் ஐந்தறிவும் தலைவணங்கும் பாசத்திற்கே/

ஜன்ஸி கபூர் - 11.10.2020


 காலம் காத்திருக்காது
இயந்திர வாழ்வினில் இல்லையே நேரங்கள்/
இழக்கின்றோம் நன்மைதனை  ஒத்திசையாத் தாமதத்தால்/

பொன்னான நேரத்தினுள் பொக்கிசமே நொடிகளும்/
கண்ணான காரியத்தினை கருத்தோடு செய்திடுவோம்/

காலம் காத்திருக்காது  சுழல்கின்றதே ஞாலத்தில்/
கடந்தவை மீளாது இழப்பினில் எதிர்காலம்/

உதிர்கின்ற நொடிக்குள் நன்மைதனைப் பற்றிட/
உழைத்திடல் வேண்டும் உரிய காலத்தினுள்/ 


  மூங்கில்
குழலுக்குள் அலைகின்ற காற்றை/
துளைகளில் நசிக்கின்றதோ விரல்களும்/
அதிர்வின் புன்னகையை/
ரசிக்கின்றதே மூங்கிலும் இசையாக்கி/

















7. துணிவு
 
தளரா முயற்சியினால்// 
தடைகளை உடைக்கின்றேன்//
வெற்றி இலக்கை நோக்கி//
முன்னேறுகின்றேன் நானும்//


 இலக்கின் பயணம்
 
வறுமையும் தடைதானோ 
     கற்றலைத் தொடர்ந்திடவே/
சிறுமையும் சிதைந்திடுமே
     பெற்றிடும் அறிவினால்/

கனவுகள் மெய்ப்பட 
     கல்விதானே தீர்வாகும்/
கற்றோருக்குச் சென்றவிடம் 
     சிறப்புத்தானே யென்றும்/

இரவினைக் கிழித்திடும் 
     விளக்கின் ஒளியிலே/
இழந்திடாதே சிந்தையும் 
     பகுத்தறிவின் ஆழத்தை/

மங்கிய ஒளியிலும் 
     பிரகாசிக்குமே வருங்காலம்/
மங்கையவள் பெற்றிடும் 
     கல்விக்குள் சமூகமே/

மாண்பான முயற்சிக்குள் 
     இலக்கினை எய்தவே/
பயணிக்கும் வெற்றிக்கான 
     தளமே இது/

ஜன்ஸி கபூர் - 16.10.2020


 வலிகள் மறந்த காலம்
 
வறுமையும் கண்டிராத வனப்பான காலமது/
அரும்புகின்ற குறும்புகள் நிறைத்திடுமே இன்பங்களை/

சிறகடிக்கின்ற ஆசைகளைப் பிடித்திடவே துடிக்கின்ற/
சில்வண்டுகளாய் முத்திரையிடும் குதூகலத்தின் சிலிர்ப்புகள்/

கவலைகளைக் கண்டிராத இளமையின் தித்திப்பில்/
கரமதும் இணைந்திடும் களிப்புறும் நட்பினிலே/

பேதங்கள் கலைந்து வாதங்கள் மறந்து/
பேரூற்றாம் ஆனந்தத்தில் தம்மையும் பதித்தே/

அன்பையும் பகிர்ந்துண்ணும் கொஞ்சிடும் நினைவுகள்/
என்றுமே வலிகள் மறந்த காலமே/


 

 முகமூடிகள்
 
அகம் மறைத்தே முகமதில் முகமூடிகள்/
முகமூடிகள் மறைக்குமே பொங்கிடும் உணர்வுகளை/

உணர்வுகள் தானே ஆளுமிந்த வாழ்வினை/
வாழ்வும் சிறக்கவே வாழ்ந்திடல் வேண்டுமே/

வேண்டுமே நல்லெண்ணம் வென்றிடலாம் மனங்களை/
மனங்களின் அன்பே நீக்குமே வலிதனை/

வலிதனைக் களைந்திடவே விரட்டிடுவோம் இடரினை/
இடரும் வேரூன்றத் தயங்குமே வெற்றிகள்/

வெற்றிகளைச் சூடிடவே பயணிப்போம் நல்வழியில்/
நல்வழிப் பயணத்தில் ஏற்கின்றோம் வேடங்களை/


  கரம் கொடுப்போம்
 
வறுமை தொலைத்ததே 
     வனப்பான வாழ்வை/
வாழ்விடம் நிழலாக 
     வடிவமானதே தெருவோரம்/

வயிற்றுப் பசி 
     வருத்தும் அவலத்தில்/
வழியும் மாறியது 
     வழிப்போக்கரிடம் கையேந்த'

வெயிலும் மழையும் 
     வெறுத்திடாத் தேகம்/
வெட்டவெளியும் சூளும் 
     வெப்பக் குடைக்குள்/

வெறுத்திடுவாரோ தெருப்பூக்களை 
     வேகின்றதே உணர்வுகளும்/
வெள்ளை மனங்களைத் 
     தாலாட்டுதே அனலும்/

உறவுகள் தொலைவானதில் 
     உதவிகள் மறைவானதே/
உயிர்வாழும் அன்றில்கள் 
     உருக்குலைகின்றன சிந்தையினில்/

உருவம் பார்க்காத 
     உள்ளத்தின் அன்பினாலே/
உயிரைக் காத்திட 
     உருகி நிற்கின்றனர்/

பச்சிளம் பிஞ்சுகளின் 
     பாதையோரக் கதறல்கள்/
படருதே நெஞ்சினில் 
     வலியதைத் தடவுதே/

பரிவும் நேசமும் 
     பாசமும் கொண்டே/
பாதையைக் காட்டிட 
     கரம் கொடுப்போம்/
 

ஜன்ஸி கபூர் 
 

 



 






கற்றை நோட்டு

 க ச ட த ப ற இடுபடக்கவிதை

 கற்றை_நோட்டு

#ற்றை நோட்டையே எதிர்பார்க்குது மனமே/

வ # தி வாழ்க்கையைத் தேடியும் ஓடுதே/

திட் # ம் போடாத செலவின் ஏற்றத்தால்/

வருத் #த மே வனப்பழிக்கும் உள்ளத்தின் உணர்வுகளை/

இட்டப் #ப டி கையூட்டுப் பெறுவோர் எல்லோருமே/

கருணையற் #ற மாந்தராக உருவெடுக்கின்றனர் நானிலத்தில்/

ஜன்ஸி கபூர் 

 

 

என்னதான் இரகசியமோ

 


மனது மெல்ல 

..... வழுக்குகின்றதே உன்னில்/

தனிமைக் கணங்கள் 

...... நிரப்பப்படுகின்றனவே நீயாக/


உனதான நினைவுகளை

...... வருடி உடைக்கின்றேன்/

உணர்வுகள் நசிகின்றனவே 

....... உனதான காதலில்/


பரவுகின்ற உன் 

........ வாசனைச் சுவாசத்தில்/

பனித் துளிகளும் 

........ கரைகின்றனவே இதமாக/


நீ சூடும் 

....... விழிப்பார்வைத் தழுவலிலே/

நீவுகின்றதே புன்னகையும் 

....... கன்னத்தைக் கிள்ளியபடி/

 

தென்றலின் சேமிப்பாய் 

........ உருமாறும் நிலாவே/

என்னதான் இரகசியமோ 

........ தேடுகிறேன் உனையே


ஜன்ஸி கபூர் - 03.10.2020






 

 
 


 



 


 

நம்பிக்கை

ஏழ்மைத் தணலுக்குள் வேகின்றதே வாழ்வும்/
ஏக்கங்களின் சிதைவுக்குள் நகர்கின்றதே நாட்கள்/
கொழுத்தும் வெயிலும் கொட்டுகின்ற மழையும்/
அழுக்குக் காகிதம் பொறுக்குவதற்குத் தடையோ/

சில்லறைப் பணம் தேடும் ஓட்டத்தில்/
சிதைகின்றதே வாழ்வின் வனப்பான கனவுகள்/
வறுமையும் தடுத்திடாதே அறிவினை ஏற்றிடவே/
வாட்டத்தை நீக்க ஏட்டினைப் புரட்டுவேன்/

தொட்டதும் துலங்கும் பொன்னாகும் வருங்காலம்/
தொடர் கற்றலால் போற்றுமே சுற்றமும்/   
நாளை என்பது நம்பிக்கைத் தேடலில்/
நானும் பற்றுவேன் கனவின் வெற்றிகளை/

ஜன்ஸி கபூர் - 11.10.2020




 
 




பூஞ்சோலை கவிதைகள்


  கவியுலகம் 

கவியுலகம் அணைக்கின்ற கவியுறவுகள் அகத்தினிலே/

களிப்பும் தழுவுகின்றதே கவிகளை வார்க்கையிலே/

சிந்தைக்குள் உணர்வூட்டி சிந்துகின்ற படைப்பினிலே/

வந்தமரும் கற்பனைகளின் மடியிந்தப் #பூஞ்சோலை/


 விழியே கவியெழுது

 விழியே என்னில் மொழிகின்றாய் உன்னையே/

நழுவுகின்றாய் நாணத்தால் நினைவினை வருடியபடி/


தழுவுகின்றாய் மனதினை நீயென் உயிராகி/

அழகியே அன்பால் எனக்கும் கவியெழுது/  

 

 ஆதியும் அந்தமும்
 
நீ வருவாயென தவிப்புடனே காத்திருந்தேன்/
விழிகளும் சோர்ந்தன உன்னுருவைக் காணாமல்/
உன்றன் நினைவினில் சுழன்றது மனமே/
ஏன் மறந்தாயோ சோகத்துடன் நானிருந்தேன்/
 
 ஆதியும் அந்தமும்
 
அன்னை தந்த அழகிய வரமாக/
மாண்பான வாழ்வை மனமது காணும்/
இடரினைக் கலைத்தே இன்பத்தை நிறைத்திடும்/
அன்பு உறவினைப் போற்றியே வணங்குவோம்/

 
 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
 வான்இன்று அமையாது ஒழுக்கு
 
காண்கின்ற உலகும் நிலை பெற்றிட/
வான்மழை வேண்டும் உயிர்களும் உயிர்த்திட/

பெய்திடும் மழையால் பெருகிடுமே வளங்கள்/  
தோன்றிடும் நல்வாழ்வில் சேர்ந்திடுமே நல்லொழுக்கமும்/  


 
 ஆதியும் அந்தமும்  
 
பள்ளி தந்த அழகிய அனுபவங்கள்/
துள்ளி வருமே வாழ்நாள் முழுதும்/
அள்ளியணைத்தால் நெஞ்சும் இனித்திடும் நினைவுகளால்/
அந்த வாழ்வுக்குள் இணைந்திடத்தானே ஆசை/
 
 
 

 






நடுவர் பயணம்

 
 


1.

மனவிழிகளில் பருகிய இயற்கையின் எழிலோடு இசைந்திட வாருங்கள் கவித் தோழமைகளே 
கவியுறவுகளே விரைந்து வாருங்கள். இயற்கை எழில் சிந்தும் மகிழ்வினை கவி வரிகளாக்கலாம். ரசிப்பும் கற்பனையும் எழுத்துக்களின் கலவையாக்கி வடித்திடலாம் கவிகளையும். 
------------------------------------------------------------------------------------------------------------

  




2.

மழைத் தோரணங்கள்
..................அழகின் ஆபரணங்கள்/
தவழுதே தரணிப் பந்தலின்
...................அலங்காரங்களாய்/

பருகிடும் விழிகளில்
...................எழிலின் கலவை/
பரவசத் துடிப்பினில்
................... ஈரத்தின் சாயல்/

இன்ப ரசிப்பினில்
...................களிக்கின்ற விரல்களும்/
இதமாக அசையட்டுமே
...................இங்கு கவியாத்திட/

காத்திருக்கின்றோம் உங்கள்
...................கற்பனைக்குள் ஊற்றெடுக்கின்ற/
அனுபவங்களையும் சுவைத்திடவே/
....................வாருங்கள் கவியுறவுகளே
கவியெழுதலாம் அழகாக/
----------------------------------------------------------------------------------------------------

  



3.

 அப்பா......!

அற்புத உணர்வின் 

............கலவை நமக்குள்

சொற்கள் போதுமோ 

............பாசத்தைப் பகிர்ந்திட


கற்கண்டாய் இனித்திடும் 

............ அன்பின் வருடலை

கவிதையாக்குவோம் அழகுத் 

............. தமிழைக் குலைத்து


குறுகிய வரிகளுக்குள் 

............ குதூகலத் துள்ளலை

அருமையான வரிகளில் 

.............. யாத்திட வாருங்கள்


தாருங்கள் உங்கள் 

............. கவிதனை இங்கு

காத்திருக்கின்றோம் நாமும் 

.............யதார்த்தத்தை சுவைத்திட


வாருங்கள் கவித் தோழமைகளே!

--------------------------------------------------------------------------------------------------------

4. 


அஞ்சாதே மனமே அற்புத வாழ்வினில்/
நெஞ்சத் துணிவுனக்குள் கொஞ்சிடும்போது/
வஞ்சத்  சூழ்ச்சிதனை அறுத்திட வருக/
கொஞ்சும் தமிழில் தழுவிடும் வரிதனைச்/
சுவைத்திடும் காத்திருப்பில் நாமும் இங்கே/

ஒவ்வொரு மனதுக்குள்ளும் துளிர்க்கின்ற எண்ணங்கள்/
ஓராயிரம் உணர்வினை அற்புதமாக வருடும்/
அனுபவ விரல்களும் வடித்திடும் வாழ்வியலைப்/
படைத்திடலாம் கவி நடையைச் சுவைத்திடலாம்/
வாருங்கள் உங்கள் கவிதனைத் தவளவிடுங்கள்/

அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்/
நெறியாளர் நீதன் மற்றும் நிறுவுனர் உள்ளிட்ட/
குழுமத்திற்கும் எனது மகிழ்வான நன்றிகள்/

15.10.2020

-----------------------------------------------------------------------------------------------------

5.


 உங்களுடன் ஒரு நிமிடம்.........!

எல்லோரிடமும் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதோ......
என் கவி நட்புக்களுக்காக ஒரு சந்தர்ப்பம்...

உரிய குழுமத்தில் இணைந்து உரிய விதிகளுக்கமைவாக கவிதனைப் படைத்திட அன்போடு அழைக்கின்றேன். இயலுமானவர்கள் இணையுங்கள்..முயற்சியும் பயிற்சியுமே வெற்றிக்கான வழிகள்
வாருங்கள்.....

நிசப்த இரவினை வருடுகின்ற இருளும்
நீண்ட வானில் ஒளியுமிழ்கின்ற நிலாவும்
தேகத்தை வருடும் தென்றலின் இதமும்
சொல்லிடும் உணர்வுகள் சொர்க்கமே மனதிற்கே
துயிலும் விழிகளில் துள்ளிடும் கனவுகளைத்
தழுவிடும் இரவின் மடியினில் இளைப்பாற

வாருங்கள் கவியுறவுகளே காத்திருக்கின்றோம் கவிதைகளுக்காக

01.11.2020
------------------------------------------------------------
Azka Sathath
 
ஏதோ நினைவுகள்
********************
உதிர்கின்ற ஒவ்வொரு நாட்களிலும் வீழுகின்றதே/
உணர்வுகளுடன் கலந்துவிட்ட இனிய நினைவுகள்/
பள்ளி நாட்களைப் பகிர்ந்த தோழமைகள்/
உள்ளத்தின் சேமிப்பினில் சுகமான சுவடுகள்தானே/

கண்ணீர் ஈரத்தினை ஒற்றியெடுக்கின்ற அன்பும்/
அடங்கிக் கிடந்த தருணங்களும் அழகானவை/
மனதைச் சுவைக்கின்ற ஒவ்வொரு நினைவுகளையும்/
தனிமைக்குள் திறந்தே உயிர்க்கின்றேன் தினமும்/

அஸ்கா சதாத் - 14.11.2020
 


ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் நினைவுகள்
அடிக்கடி வருடி பொழுதுகளுடன் உறவாடும்
சில தித்திக்கும் சிலவோ வலித்திடும்
மனதில் உயிர்த்திடும் அந்த நினைவுகளை
கவிகளால் அழகுபடுத்தலாம் வாருங்கள் கவியுறவுகளே 

------------------------------------------------------------------------- 
26.11.2020
 வாழ்வெனும் மையத்தில்
வந்தமரும் போராட்டங்களை
வரிகளாகப் புனைந்திட
வாருங்கள் கவியுறவுகளே
வாழ்வியல் போராட்டங்களை
வண்ணக் கவிகளில் செதுக்கிடலாம்


--------------------------------------------------------------------------------------------------


உணர்வுகள் பேசுகின்ற அழகான மொழியிது
உறவாகின்ற உள்ளத்தின் அதிர்வுகளுக்கு வரிகளிட்டு வனப்பான கவிதனைத் தாருங்கள். 


----------------------------------------------------------------------------

 
வாய்மையே வெல்லும் எனும் கவித் தலைப்பிற்கு என்னை நடுவராகச் செயற்படுத்துகின்ற நெறியாளர் ஆண்டியூர் நிதன் அவர்களுக்கும் நிறுவுனர் அவர்களுக்கும் கவிதையினைப் படைத்த படைக்க விருக்கின்ற கவிச் சொந்தங்கள் உள்ளிட்ட குழுமத்திற்கு எனது அன்பான இனிய நன்றிகள்.

மெய்யினை சிந்தையில் பொருத்தி
மேன்மையுடன் வாழ்ந்திடும் உணர்வின் பிம்பங்களை
அழகு வரிகளால் செதுக்கிட வாருங்கள்
இனிய கவியுறவுகளே......25.12.2020
------------------------------------------------------------------------------- 
கிழக்கு வானில் எழுச்சி கொள்கின்ற ஆதவனாக உங்கள் விரல்கள் படரட்டும் அழகிய கவிதை வரிகளில். வாருங்கள் கவித் தோழமைகளே... கிழக்கின் விடியலில் வடியட்டும் கவித் துளிகள்.



2020/10/02

பூக்கள் விடும் கண்ணீர்

 

இயற்கை மடியினில் தவழ்கின்ற பூக்களின்

இறகினைக் கொய்திடுவார் இதயம் அற்றோர்

பசுமைக்குள் தீயினை ஊற்றும் மாந்தர்

பறித்திடுவார் மகரந்த உயிர்ப்பினைப் பாரினில்

சூழல் மாசுக்குள் ஊறிடும் மலர்கள்

சூடுதே கண்ணீரை தன் அழிவுக்காக


ஜன்ஸி கபூர் - 02.10.2020

-----------------------------------------------------------------------

2. உறவுகளோடு உரையாடுவோம்

---------------------------------------------------------

இதயத்தின் உணர்வுகள் உதயமாகும் உறவினில்/

இன்பமும் படர்ந்திடும் இன்னலைத் துரத்தியே/


இயந்திர மொழியினில்  வேண்டாமே தனிமையும்/

இழைந்தோடித் தழுவட்டும் அன்பான சொல்லாடல்/


பேசிடும் வார்த்தைகள் நீக்குமே பேதத்தை/

பேணுவோம் உறவுகளை மகிழ்ந்திடலாம் உரையாடி/


ஜன்ஸி கபூர் - 07.10.2020


-------------------------------------------------------------------
3. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அனுபவம்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020

---------------------------------------------------------
4. தமிழை அரங்கேற்று தமிழா
----------------------------------------------------
நாவும் மொழிந்திடும் இனிமைத் தமிழை/
நானிலம் போற்ற அரங்கேற்று தமிழா/

சுருங்கிடும் உலகின் உணர்வின் வழியாக/
வருங்காலம் ஏந்தவே செதுக்கிடுவோம் அழகாக/

தாய்மையை மதிக்கும் பண்பாட்டின் சுவடாய்/
வாயும் உதிர்க்கட்டும் செந்தமிழைத் தினமும்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020



----------------------------------------------------------------------- 

5. கனவிலும் கவி பாடு
--------------------------------- 
கனவிலும் கவி பாடு நிதமும்/
கற்பனைச் சுவையுடன் யதார்த்தமும் பிசைந்தே/

சொற்களை அழகில் கோர்த்தே தினம்/
வடித்திடு கவிதனை வனப்பை ரசித்திடு/

தூரிகை நீயேந்தி துடித்திடும் உணர்வால்/
உயிர்த்திடு உலகமும் விரும்பிச் சுவைத்திட/

ஜன்ஸி கபூர் - 13.10.2020


------------------------------------------------------------------------------------- 
6. தாயே தெய்வம்
------------------------------
பத்துத் திங்கள்  பக்குவம் காத்து/
பண்பான வாழ்வுதனைக் கற்றும் தந்து/

பாசம்தனை தினமும் உறவிலே கோர்த்து/
உயிரினைப் போர்வையாக்கி 
 உள்ளத்தைத் தொட்டிலாக்கி/

உணர்வுக்குள் வலியினை மெல்ல உறிஞ்சும்/
உன்னத தாயே அன்பின் தெய்வம்/

ஜன்ஸி கபூர் - 15.10.2020

------------------------------------------------------------- 
7. வானம் எழுதிய கவிதை
-----------------------------------------
வெம்மையும் கிழித்ததே
.......... தரையினில் கோடுகள்/
வெந்ததே வாழ்வும்
.......... பஞ்சத்தின் கோரத்தில்/
புண்பட்ட மனங்களில்
........... இன்பத்தினை வார்க்கவே/
விண்ணெங்கும் பூத்ததே
............ கார்மேகப் பூக்களும்/
எண்ணமும் சிலிர்த்திட
.......... பொழிந்ததே பூமழை/
இரசித்தேனே நானும்
........... மழைக் கவிதையை /

ஜன்ஸி கபூர் - 16.10.2020


--------------------------------------------------------------------------------- 
8. பிணைத்திடும் வாழ்க்கை இணைந்திடும் இறுதிவரை

ஜன்ஸி கபூர் - 20.10.2020


--------------------------------------------------------------------------- 

9. ஓயாத மரணங்கள்
---------------------------------
மரணச் சுழற்சிக்குள்
..........மண்டியிடுகின்றன உயிர்கள்/
பிணிக்குள் தேகம்
.........பிணைக்கின்றதே இழப்புக்களில்/

விபத்தும் அனர்த்தமென்றும்
...........விளையாடுகின்றதே விதியும்/
கொலையும் தற்கொலையும்
..........கொல்கின்றதே நேயத்தினையும்/

கலப்பட உணவும்
..........கலக்கமே ஆரோக்கியத்திற்கே/
ஓலமிடும் இறப்புக்கள்
...........ஓயாது தொடர்கின்றனவே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020

  

--------------------------------------------------------- 
10. நிம்மதி தேடும் மனிதர்கள்
------------------------------------------------
சுருங்குகின்ற வாழ்வில் 
.......விருப்பங்களோ மலைபோல்/
சுகமிழக்கும் உழைப்பு 
.......சுமையோ உடலுக்கே/

உலக மாற்றங்கள் 
.......சுழற்றும் தேவைகள்/
உணர்வுகளுக்கு வலியே 
......உளத்திற்கேது அமைதி/

நவீனத் தேடலின் 
.......நாகரிக வாழ்க்கையில்/
நனைந்திடத் துடிக்கையில் 
......நிம்மதியும் தொலைகிறதே/

ஜன்ஸி கபூர் - 26.10.2020

  
-----------------------------------------------------------
 
11.கொஞ்சும் காதல்
-------------------------------
நெஞ்சத்து அன்பில் கொஞ்சும் காதல்/
அஞ்சாதே வாழ ஆருயிர் தழுவி/
ஆசைகள் வருடும் கனவின் விரல்களை/
அணைக்கின்றேன் தினமும் இனிக்கின்றாய் நினைவாக/

எனை ரசித்தே நீயிடும் திரை/
எழில் வதனம் மையிடும் நாணமாக/ 
கட்டிக்கரும்பே உன்றன் புன்னகையும் அமிர்தமே/
வெட்கப்படும் கண்கள் மின்னுதே மின்னலாக/
 
உணர்வுகள் துடிக்கின்ற இளமைப் பருவம்/
உறவாக்க நினைக்குதே மெய்க்காதல் பண்பினாலே/  

ஜன்ஸி கபூர் - 27.10.2020



--------------------------------------------------------------- 
12.கவிதைக்கு உயிர் கொடுப்போம்
-----------------------------------------------------------
விழிகள் காணுகின்ற  
........யதார்த்தங்களை இணைத்தே/
அழகான எண்ணங்களை 
.......அதில்ப் பிசைந்து/

வழிகின்ற கற்பனைகளால் 
.......அழகினைக் கோர்த்து/
வடிக்கின்ற கருவை 
........உயிர்க்குமே விரல்கள்/

பிறந்திடும் கவியும் 
.......பறந்திடும் உலகில்/
சிறந்த வாழ்வின் 
.......பிம்பமாகி வருடுமே/

ஜன்ஸி கபூர் - 27.10.2020




------------------------------------------------------------------------------------------
13.சோகமான சுமைகள்
-------------------------------------
உருளும் வாழ்வில் 
........உறவுகளின் இழப்புக்கள்/
உணர்வின் வலியே 
.......உள்ளத்தின் சுமையாகும்/

கொரோனாத் தொற்றும் 
........கொல்லுதே வாழ்வை/
கொடூர வறுமையின் 
.........கொடுமையும் தாக்குதே/

வாழ்க்கைப் போராட்டங்கள் 
........சந்திக்கும் சுமைகள்/
விரட்டாதே சோகங்களை 
.......நீளுகின்ற பொழுதுகளில்/

ஜன்ஸி கபூர் - 28.10.2020




--------------------------------------------------------------------------------------------------
14. இணைக்கும் உறவுகள்
----------------------------------------
அணைப்பார் பெற்றவர்
............அன்பால் உவந்தே/
பிணைப்பார் கரங்களை
...........உடன்பிறந்தோரும் கனிந்து/
துணைக்கும் வருவார்
...........நட்பினரும் நிழல்போல்/
பிணக்கும் கொள்ளா
...........சுற்றமும் ஊரும்/
முரண்களைக் கலைத்தே
............தாங்கிடுவார் தூண்களாகி/
இணைக்கும் உறவுகளால்
............இனித்திடுமே வாழ்வும்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020 

--------------------------------------------- 
15. வீழ்ந்தாலும் கலங்காதே 
------------------------------------------- 
வீழ்ந்தாலும் கலங்காதே  
..........விதியென்றே நினைக்காதே/
வீழ்கின்ற பொழுதெல்லாம் 
..........எழுதலே உந்தலாம்/

வாழ்க்கைத் தளத்தில் 
...........ஏற்றமும் இறக்கமும்/
வாழ்வியல் நெறிதானே 
.........உணர்ந்தவர் வென்றிடுவார்/

வீழ்கின்ற பொழுதெல்லாம் 
.........ஊக்கமே உயர்வாம்/
எழுந்திடும் முயற்சியே 
.........ஏற்றத்தின் சுவடாம்/
 
ஜன்ஸி கபூர் - 30.10.2020









நிலாமுற்றக் கவிதைகள்

வாய்மையே வெல்லும்

வாய்மை கொண்டார் வெல்வார் வாழ்வில்/

பொய்மை களைந்தே ஒழுக்கம் அணிவார்/

மெய்ம்மை யுரைக்கும் நாவின் அறமே/

போக்குமே வார்த்தைக் கறையை நம்மில்/

வள்ளுவன் கண்ட நல்லறத் தவத்தில்/

உள்ளத்தை இணைத்தே பெற்றிடலாம் தூய்மையே/

 இன்புறும் பண்பாடு
இன்முகம் காட்டியே இனித்திடும் அன்பில்/
இணையுமே இதயங்கள் நட்பின் புன்னகையில்/
இல்லத்தின் விருந்தோம்பலும் மகிழ்விக்கும் அறுசுவையில்/ 
இன்புறுமே பண்பாடும் உயரிய வாழ்வினில்/  

 
 மானுட சொந்தங்கள்
மாற்றுத் திறனாளிகள் மானுட சொந்தங்களே/
உரிமைதனை வழங்கி உயிர்ப்பிப்போம் வாழ்வுதனை/
வேற்றுமை காட்டாது நெருங்கிடுவோம் அன்பில்/
மறுவாழ்வும் வழங்கி ஏற்றிடுவோம் சமூகத்தினில்/
 கனவாகும் வாழ்க்கை 
கனவுகள் மெய்ப்பட உழைக்கும் வாழ்க்கையில்/
வதைக்குதே நோயும் கலையுதே ஆசைகள்/
வருந்தும் உடலை வேதனைகள் அரித்திட/
துடிக்குதே உணர்வுகளும் தவிக்குதே மனமும்/
நலன்களும் பறந்தோட மரணமும் அருகாக/
ஆரோக்கிய வாழ்வும் இங்கே கனவுதானோ/

  குடும்பம்
கூட்டுக் குடும்பமே/
குவலயத்தில் சிறக்கும்/
பிரிந்து வாழ்கையில்/
வலியதே மிஞ்சும்/
 
 அன்பு வாழ்வினில் 
ஆயுதம் ஏந்தா அன்பு வாழ்வினில்/
பாயுமே இன்பமும் பரவசம் மனதுக்கே/
ஓயுமே சண்டைகள் ஒழியுமே பாதகங்கள்/
சாயுமே வேற்றுமைகள் சக்திமிகுப் புரிந்துணர்வால்/
  
 கனவுகள் தளிர்க்கும்
உதிர்ந்தது அக்னிச் சிறகும் காலனிடம்/
உணர்வுகளின் கதறல்களைச் சேமித்தே பறந்ததே/
உலகிற்கே தேசத்தைப் பறைசாற்றிய நாயகன்/
விதைக்கப்பட்டாரே கண்ணீர்த்துளிகளால் வளர்ந்தாரே வரலாற்றிலும்/  
விரும்பியே ஏற்றிடுவார் இளையோரும் நன்மொழிகளை/
விட்டுச் சென்ற கனவுகளும் தளிர்க்கும்/                             

 கல்வி 
கல்வி கற்றவர்/
உலகில் சுற்றுவார்/
கல்லாதோர் சுருங்குவார்/
தனக்குள் வாழ்வார்/
 
 புது வாழ்க்கை
மறுமலர்ச்சி தந்திடுமே அறிவுப் புரட்சி/
மாற்றங்களையும் காட்டிடுமே பண்பாடும் மலர்ந்தே/
புதுமைகள் படைத்து வளர்ச்சி காணவே/
புத்துணர்ச்சியும் கிடைக்கும் புது வாழ்வினிலே/
 மழலை
புதுவரவு பூத்தது குடும்பத்தில் மழலையென/
புதுஉறவினில் நனைந்தோம் புன்னகையும் உதிர்த்தே/
புது மாற்றங்கள் தவழுமே குடும்பத்திலும்/
புத்துணர்ச்சியும் கொண்டதே உணர்வுகளும் மகிழ்ந்தே/ 

20. இனிக்கும் வாழ்வு
பூமகள் தவழ்ந்தாள் மடியினில் மழலையாகி/
புன்னகைத் தூறலால் வலியும் கரைத்தாள்/
பிஞ்சுக் கரத்தால் கொஞ்சியே நெஞ்சுக்குள்/
பிள்ளை யிவளும் அன்பூற்றுகின்றாள் அழகாய்/
இணைந்தாள் உறவாகி உணர்வும் இனித்திட/
இன்னொரு தாயாகி வாழ்வுக்குள் வந்தாள்/
 தவிப்பு-
தவம் இருந்தே பெற்ற மக்கள்/
தனித்தே விட்டாரே தள்ளாடும் வயதில்/
தவிக்கின்றேன் துணையின்றி தரணிக்கும் சுமையாகி/
தங்கும் நிழலிந்த வயோதிப மடம்தானே/

ஜன்ஸி கபூர் - 29.10.2020