About Me

2015/09/06

தேர்தல்

 தேர்தல்
தோற்றுப் போகுமிடம்
,
தோற்றவரின்
வெற்றி முழக்க மொலிக்கும்
மேடை

பதவிச் சண்டைகளுக்கான
ஒரு
ஒப்பந்தம்

தேசத்தின் ஓட்டை யடைக்கும்
வரப்பிரசாதம்

சிலர் விதி மாற்றும்
மதி

தீர்ப்புக்களின்றி
கோர்க்கப்பட்ட சட்டம்

வாழ்த்தும்
வீழ்த்தும்
ஆசன வரிகள்


- Jancy Caffoor -
 

முகநூல்



ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!

சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று

ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்
இழப்புக்கள் வரும்போதுதான்
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன

சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்

                                                                                                                         நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்
மெளனம் சிறந்தது
ஏனெனில்
அம்மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!


- Jancy Caffoor -
   09.06.2015

இதயம் கிழிந்து.........

இறந்த பின்னர்தான் பல
இதயங்கள் தட்டப்படுகின்றன
கடலலைகளில்
கிழிந்த மூச்சுச் சத்தத்தில்
பல அழுகை
நிசப்தமாய் போனதுவோ
உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை
பலருக்கு பாடமாக்கியவனாய்
இவனும் பயணிக்கின்றான்
கண்ணீரில்


- Jancy Caffoor -
 

2015/08/30

முகநூல்


ஒருவர் புகழடையும் போதுதான்
அவர்மீதான அடுத்தவர் பார்வையும்
தீவிரமடைகின்றது
ஆக்கினையும்
ஆதரவும்
அவருக்கான கொடுப்பனவாகின்றன!
-------------------------------------------------------------
தன் தவறுகளை உணராதவர்கள்
அடுத்தவர் தவறுகளை விமர்சிப்பதற்கு தகுதியானவர் அல்லர்
--------------------------------------------------------------

கடலோரம்
வெண் மணல் துளைத்து
சங்கெழுதும் இரகஸியமதை
துள்ளி வரும் அலைகள்
மெல்லதை அள்ளி
கால்களைக் கிள்ளி
என்னுள் சொல்கின்றதே!

-----------------------------------------
அமைதியான தேர்தல்
சாமர்த்திய தீர்ப்பு
ஆனால்
அட்டகாசமான மந்திரி பதவி
ஆர்ப்பாட்டங்கள்
அட!
நாடு எங்கேயோ போகுது !
-------------------------------------------
ஆயிரம் நிமிட வேலைப் பழுவின் மத்தியில்
அறுநூறு நிமிடம் நினைப்பது காதல்
அறுபது நிமிடம் நினைப்பது பாசம்
ஆறு நிமிடயாவது நினைப்பது நட்பு
ஆரோ எவரோ
நினைப்பதே யில்லை!


- Jancy Caffoor -
   30.08.2015