புதிய மோட்டார் வாகனச் சட்டம்
நவீனத்துக்குள் நாடும் மக்களும் உள்வாங்கப்படும் போது அவர்களின் வாழ்க்கையும் வசதியும் அதிகரிக்கின்றது. இத்தாக்கத்தின் பிரதிபலிப்பிலொன்றுதான் வாகனங்கள் அதிகரிப்புக்கள். முறையற்ற வாகன நகர்வின் மூலம் ஏற்படுகின்ற வாகன விபத்துக்கள் மூலம் அதிகரிக்கின்ற விபத்துக்கள் இதற்கு சான்று பகிர்கின்றது.

13.09.2015 முதல் அமுலுக்கு வரும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் இந்நிலையை மாற்றுமா...........

 வாகனம் வைத்திருப்பவர்கள் இதனைக் கட்டாயம் படியுங்கள் !

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் , அத்துடன் முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை தடுத்து  நிறுத்தும் அதிகாரமும் சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.  இது தவிர வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி மூலம் கைப்பற்றப்படுமாயின்  14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரமும் வழங்கப்பட வேண்டுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது..
-------------------------------------------
-------  தண்டப்பண விபரம்-   ----
-------------------------------------------
*****சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
*****புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
*****இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
*****வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 +
****** ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000
********அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
********3 முறைக்குமேல் அபராதம் விதித்தால்  2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.
********இதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமாக  ரத்துசெய்யபடும்.
******* வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

மோனா மோனாஎன்னைக் கிள்ளிக் கொள்கிறேன்
மென் மேனி நரம்புகள்
உன் பெயர்த் துலங்களில்
பாசம்  கொண்டதுவோ....
.
அதனாற்றான்.......
நீ அழைக்கும் போதெல்லாம்
களைக்காத என் வார்த்தைகள்
கலையாகிப் போகின்றதுவோ.....என்
கைபேசியில்.......
.
உருண்டு திரளும்- இந்துக்
கரையோர அலைகளினி - தினமும்
இரையாமல் ரசிக்குமெம்மை
நரையாகாத நம் அன்பை ருசித்தபடி......
.
திசை விரிந்தாலும்
உள்ளத்தோசையில்
இசைந்து போன நம் மன்பை.....
கரமசைத்து வாழ்த்தட்டும்
காலமும் நிறைவாய்............
.
உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்

02.09.2015

அளிக்கப்பட்ட பிறந்த தின உபசரிப்பில்
-----------------------------------------------------------
ஜாதி,மத பேதமின்றி பயணிக்கும் நட்புச் சுவட்டில் நான் தரிசித்த அழகான  அன்பளிப்பிது,,,,, நன்றி சுபத்திரா---------------------------------------------------------------------------------
யாரோ எவரோ எனும் நிலை அறிமுகத்தில் இல்லாமற் போகின்றது,,,,,
அறிமுகம் அன்பெனும் ஈர்ப்புக்குள் தள்ளி விட,,,காலமும் சந்தர்ப்பங்களும் நம்மீது உண்மையான நட்பு, பாசம், அன்பை உணர்த்தி விடுகின்றது,,,
இன்று என் பிறந்தநாளை இன்முகத்துடன் வரவேற்ற என் பாடசாலை மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் வாழ்த்துக்கள் அன்பு கலந்த அன்பளிப்புக்களில் நனைந்து உவகையுடன் நிற்கின்றேன்,,,,,நேசித்தவர்கள் தொலைந்து போவதும்,,,தொலைவில் நிற்போர் அருகில் வருவதும்,,,,,
மாற்றமான வாழ்வில் ஒர் துளியே,,,,,கண்டு கொண்டேன்,,,,

இன்று!

கதீஜா பெண்கள் கல்லூரி மாணவிகளின் வாழ்த்தட்டைகள் சில .....................


----------------------------------------------------------------------------------------------
முகநூலில் வாழ்த்தியோர்

Mullai Amuthan ---------------
                          Happy Birthday


Nisad Kuvais    ---------------
                         Happy Birthday

Mohamed Fazaal -----------
                        Happy Birthday Jan

Vathiri C Raveendran-------
                        Happy Birthday to u Madam

Kailaiyar Sellanainar Sivakumaran ---- 
                          Please accept my blessings on your birthday Enjoy with your family and friends


Shifka Sanaதேர்தல்
தேசியப் பட்டியல்
:::::::::::::::::::::::::::::::::
தேர்தல்
தோற்றுப் போகுமிடம்,,,
,
தோற்றவரின்
வெற்றி முழக்க மொலிக்கும்
மேடை

பதவிச் சண்டைகளுக்கான
ஒரு
ஒப்பந்தம்,,,

தேசத்தின் ஓட்டை யடைக்கும்
வரப்பிரசாதம்,,,,,

சிலர் விதி மாற்றும்
மதி,,,,

தீர்ப்புக்களின்றி
கோர்க்கப்பட்ட சட்டம்,,,,

வாழ்த்தும்
வீழ்த்தும்
ஆசன வரிகள்,,,

முகநூல்
ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை,,,,
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல,,,,
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு,,,,
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று,,,


ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்,,,,
இழப்புக்கள் வரும்போதுதான்,,,
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன,,சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன,,,
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்,,,,
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்,,,நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்,,,,
மெளனம் சிறந்தது,,,,
ஏனெனில்
அம் மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!

திருமறை