தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!
------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------
Photo: Rajakavi Rahil
மனைவி என்ற தினம் நீ .
என் இளமையை எனக்கு அறிமுகப் படுத்தியவள் நீ
என் உயிரை எனக்கு அடையாளப் படுத்தினாய் நீ .
இல்லற வெளியில் நான் பறப்பதற்கு 
நீ தான் தந்தாய் சிறகு .
உன் வார்த்தைகளின் ஈரத்தில் 
நான் ஊறிக் கசிந்தேன் காதலாக .
உன் பார்வை ஒளியில் 
நிலவில் தெரிகின்ற இருள் நிழலும் மறைந்திடுமே .
மல்லிகை பூக்கின்றது 
உன் கூந்தலுக்காகத்தான் .
இரு மனம் இணைந்த போது திருமணம் வாழ்த்தியது 
நம்மை .
காமத்தின் முகம் நான் பார்க்க திரை நீக்கித் தந்தவள் 
நீ .
காதல் மனதை நான் ஆள 
அன்பு தேசம் பரிசளித்தவள் நீ .
உயிரும் உயிரும் புணர்ந்த போது நம் மூச்சுச் சூட்டில் 
உதித்தன வாரிசுகள் .
உன்னைத் தயாக்கினேன் என்னை நீ 
தந்தையாக்கினாய் .
ரோஜா மொட்டுக்களிடம் உன்னைச் சொன்னேன் 
மலர நீ வேண்டுமாம் .
உயிருள்ள தாஜ்மகால்கள் நீ படைத்த போதும் 
எனது தாஜ்மகால் நீதான் .
நம் வாழ்க்கை ஆரம்பமான நாளை வரவேற்க 
தயாராகி விட்டன 
நிலா 
விண் மீன்கள் .
பூக்களுக்கும் விருப்பமாம் 
உன் சமையல் சாப்பிட .
நீ தொட்ட தண்ணீர் கூட தேனாகி 
இனிக்கிறதே .
நீ போட்ட வித்துக் கூட 
முத்தாகிப் பூக்கிறதே .
காதல் பறவை கடிதம் போட்டிருக்கிறது 
நம் கட்டில் கேட்டு .
என் கண்கள் உன்னை வணங்கின 
முழுதாக உன்னைப் பார்த்த போது .
நீ என் மனைவி என்றேன் 
அமாவாசை அன்றும் நிலா வந்தது .
நீ என் காதலி என்றேன் 
இலைகளும் பூக்களாகி மணத்தன .
நீ என் உயிரின் கடவுள் 
என் காதலின் வணக்கம் .
நம் இல்லறம் வானம் போல நிலைக்க 
கம்பன் கனவில் வந்து தந்தான் 
வாழ்த்துக் கவிதை .
நம் சொர்க்கம் வீட்டுக்குள் வசிக்க 
கடவுள் செய்தான் வணக்கம் .

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!2 comments:

 1. அணுதினமும்!
  நல்லதையே நினைப்போம்!
  நலமுடன் வாழ்வோம்!!

  ReplyDelete
 2. அணுதினமும்!
  நல்லதையே நினைப்போம்!
  நலமுடன் வாழ்வோம்!!

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை