ஏனடாஇப்பொழுதெல்லாம் நீ
உறக்கம் மறந்த இரவுகளை
என்னுள் எழுதிச் செல்கின்றாய்!

என் உணர்வுகளின் அனல்வெப்பத்தில்
நீ தயாரிக்கும் மின்சாரம்............
ஆயிரம் வாற்று ஏக்கமாய்
கசிந்து மருகின்றது!

உன் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அணுக்களிலும் நானாய்......
நம்புகின்றேன் உன்னை!
இன்னொரு தடவை இம்சிக்காதே வார்த்தையாகி!

சீனப் பெருஞ்சுவராய்
உயர்ந்திருக்கும் உன் உள்ளத்தில்....
சிறு வெடிப்புக்களை யார் தூவியது
நம்மை யழிக்க!

உன் குழந்தை மனசுக்குள்
நானிருக்கின்றேனா...........
ஊடுருவிப் பார்க்கின்றேன் மெல்ல
நம் குழந்தையாய் மீள நீ என்னுள்!

இதுதான் காதலா....!

பிரிவுக்குள் உறவையும்
உறவுக்குள் ஊடலையும் பிசையும்
அழகிய அவஸ்தையாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை