விதியின் வழியில்தூக்கம் மறந்த இரவுகளில் இனி....
தூளியாய் தரித்திருக்கும் ஏக்கம்!

பசுஞ் சோலைகளில் பாய் விரித்த தென்றல்
வங்கம் தேடி மறைந்திருக்கும்!

ஹிருதயச் சிறகடிப்பில் கிறங்கிய மனம்
சந்தத் துடிப்புக்களை நிறுத்திட விழையும்!

பாலைவெளிகளில் பாகாய் உருகும் நிஜம்
சோலைக் கனவுகளை கரைத்திட்டு மறையும்!

நீயும் நானும் ஈர் சமாந்திரங்களாய்
நீர்த்திரை விழி மறைக்க பயணிப்போம்!

இழப்புக்கள் வசந்தங்களைத் திரையிட
பாழாய்ப் போன விதியைச் சபித்தபடி நான்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை