யாரோவெடிக்கின்றது மேகம்
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!

புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்......
தோற்றது யார் காற்றா நாற்றா !

புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !

இங்கோ..........மழையோ மழை!!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!

1 comment:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை