தேவதையுடன்


விரல்களின் விருந்தோம்பலில்
கணனித் தட்டச்சு திணறிக் கொண்டிருக்க..
கண்களைக் திரையில் பொறிக்கின்றேன்!
கன்னம் சிவக்க சிரிக்கு முன் முகம்
காணவில்லை
சில நாட்களாய்!

நெஞ்சக்கூட்டைக் குதறிக் கடிக்கும்
உன் நினைவுகளைக் கிள்ளிப் பார்க்கின்றேன் - நீ
தொலைந்து போன ஈரத்தை
இன்னும் பரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன ...........
உன்னை உலர விடாமல் தடுக்க!

தடக்கி விழுந்த போதெல்லாம்
என்னை நிமிர்த்திய வுன் கரங்கள்....
அழுதபோதெல்லாம் அணைத்த வுன்
கரங்கள்......
கவலைகள் துடைத்த வுன் வார்த்தைகள்
இப்போதெல்லாம்...............
அவள் பெயரை ஸ்பரித்தே
என்னை மறந்து போனது!

அன்று....
நீ.....
அன்போடு எழுதிய என் சரிதத்தை............
அவசர  அவசரமாய் முடித்து வைத்தபோது
உன்
அவசரத்தின் அவசியத்திற்காய்
வழி விட்டு நிற்கின்றேன்
மௌன வௌிக்குள்!

என் ஆழ்நிலைச் சுவாசம் பிடுங்கி
நீ ......
தினமும் உயிர்ப்பூட்டும் அவளுக்காய்.....
உனக்காய்.........
இறந்துமுன்னை நேசிக்கின்றேன்!

என் கல்லறைச் சுவர்களாவது
உன்னுடனான என் னன்பை......
புரியவைக்குமென்ற நெகிழ்வுடன்
விடைபெறுகின்றேன்.......

நீயாவது வாழ்ந்துவிடு
உன் தேவதையுடன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை