About Me

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

2015/02/24

சித்திரமும் கைப்பழக்கமும்


ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சித்திரம் வரைதல் மிக விருப்பமானதொன்று.

சித்திரம் என்பது மனதில் எழுதும் கருத்துக்களை ரேகைகளாக்கி அவற்றுக்கு நிறங்களைப் பயன்படுத்தி வௌிப்படுத்தும் வௌிப்பாடாகும், ரேகைகளை வரைதல், வடிவங்களை ஆக்குதல், நிறப் பயன்பாடு என்பன சித்திரம் வரைதலின் முக்கிய நிலைகளாகும்.

ஒருவர் தனது உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளுக்கு கருத்து வடிவம் கொடுக்கும்போது அது அவரின் அனுபவம், கலையார்வம், ஆற்றலின் பிரதிபலிப்பாக வௌிவருகின்றது.

ஆரம்ப காலங்களில் எண்ணங்களை வௌிப்படுத்த மட்டுமன்றி, செய்திகள், கண்டுபிடிப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தவும் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

- Jancy Caffoor-
  24.02.2015

மறை வழியில் கல்வி



கல்வியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் அறிவே மனித வாழ்வை வழி நடத்திச் செல்லும் காட்டியாகும். இவ்வறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களின் பொன் வரிகள் சில -

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ த h வு த்  அஹ்மத்)

--------------------------------------------------------
குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

-------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ


- Jancy Caffoor-
  24.02.2015

பரீட்சைச் சுமை



இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.

இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.

- Jancy Caffoor-
  24.02.2015

ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778)


கல்வியென்பது பல தத்துவங்களினடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு ஒப்பந்தம். கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) போற்றப்படுகின்றார். இவர் தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கியவர் என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர்.

பிள்ளைகளின் சூழலில் பாதிதான் பாடசாலையில் கழிகின்றது. மிகுதி வீட்டில்தான். பெற்றோர் பிள்ளை பற்றிய உளவியலை அறியாதவர்களாக இருக்கும்போது பிள்ளையின் இயல்பான கற்றலை விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.

இதோ ரூஸோவின் சில கருத்துக்கள்

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார்.

பிள்ளை வேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை தானாகவே கற்றல் - கற்பித்தலின்போது கற்றல் சாதனங்களினைப் பயன்படுத்தி பெறும் அனுபவம்சார் கல்விக்கு வலியுறுத்தும் ரூஸோவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனலாம்.

- Jancy Caffoor-
  24.02.2015

நிஜத்தின் நிழல்கள்


கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் 

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும், வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி  இவர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்.
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....
-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக் கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்.
-------------------------------------------
பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை, மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்.
-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது.
------------------------------------------

சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்.

- Jancy Caffoor-
  24.02.2015




அ/ ஸாஹிரா மகா வித்தியாலயம்


சமபோஷா கால்ப்பந்தாட்ட சாம்பியன் அணி - 2014
15 வயதுக்கு கீழ்பட்ட ஸாஹிரா மாணவர் கால்ப்பந்தாட்ட அணியினர் அ/மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி போன்ற பிரபல்ய பாடசாலை மாணவ அணியினர்களை வெற்றியீட்டி இன்று (23.10.2014) சாம்பியன் பட்டத்தை தமதாக்கினார்கள். 
இவர்களின் வெற்றிக்குழைத்த பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் இம்மாணவர்களுக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

பாராட்டுக்கள் இவர்களுக்கு
---------------------------------------------

Australian National Chemistry Quiz - 2014
-------------------------------------------------------
மேற்படி போட்டியில் அ/ ஸாஹிரா  மகா  வித்தியாலய  மாணவர்களும் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்கள். அவர்களையும்,  அவர்களை  வழிப்படுத்திய ரமீஹா ஆசிரியையும் பாராட்டுவோம்

மாணவர்கள் விபரம்
-----------------------------
தரம் 11 (2014)
-----------------------------
1. M. Shalik - High Distinction
2. I. Hafeel - Credit
3. A. Waseema - Participation
4. N. Fayaza - Participation

க.பொ.த உ/த
--------------------
1.A. Ayisha   - Distinction
2. M. Rasna  - Distinction
3. S. Rinoosa  -  Credit
4. T. Simaya   -   Credit
5. A. Fazna  - Participation
6. F. Faseeha  - Participation
7. H. Thansila banu - Participation
8. N. Niroskhan  - Participation
9. R. Rozana - Participation
10. S. Sameema - Participation
11. T. Hisafa - Participation
---------------------------------------------------------------------

வலய மட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம் தரம் 7 சீ மாணவன் M.U.M. பாலிஹ் மாகாண மட்டத்திற்குச்செல்லும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். இவரை நாமும் வாழ்த்துவோம்

---------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அவர்கள் விபரம் -

1.. M.F.Aadhil Ahamed...............  ( marks 182)
2. .M.V.Sameeha......................... .......... (177)
3..M.M.M. Akeel............................. .........(172)
4..N.Ashfan Ahamed...................... .........(167)
5..A.A.H.Nisha .........................................(165)
6.. N.Aysha.............................................. (162)
7..M.R.F.Salha......................................... (159)
8..S.H.Hafri ..............................................(158)
9..A.H.F.Rasheeka.................................. (158)
10..A.S.Shahama...................................... (158)
11..T.F.Sahara............................... ...........(156)

-------------------------------------------------------------------------------
 க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறுகளில் (2013 டிசம்பர்) அதிக கூடிய பெறுபேறுகளைப் பெற்ற அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவிகள் விபரம் -

C.M.Fathima Risla - 9 A
s. Fathima Sashna - 8A, 1 B
M.S. Fathima Aasra - 8A , 1 C
M.R.Hasheena - 8A , 1 C

-------------------------------------------------------------
சமூகக்கல்வி வினா- விடைப் போட்டி வருடாவருடம் நடத்தப்படும் போதெல்லாம் கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


- Jancy Caffoor-
  24.02.2015



2014/12/02

Action Research


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான ஆய்வு மாணியங்கள் (Research Grants) - 2013
-------------------------------------------------------------------------------------------
இசுருபாய, கல்வி அமைச்சின் கட்டிடத்தில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டம் தமிழ், சிங்கள , ஆங்கில மொழிகளில் 29 ஜூலை தொடக்கம் 24 திசெம்பர் வரை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

தமிழ்மொழியில்  தெரிவு செய்யப்பட்ட 20 பேர்களில் நானும் ஒருத்தி என்பது மகிழ்வுக்குரிய செய்தியே!  இக்காலப்பகுதியில் எமக்கான வழிகாட்டலும், ஆலோசனைகளும் -

பேராசிரியர்  எம். கருணாநிதி அவர்கள்
பேராசிரியர் T. தனராஜ் அவர்கள்
டாக்டர் எஸ் குகமூர்த்தி அவர்கள்
டாக்டர் ரீ கலாமணி அவர்கள் 

என்போரால் சிறப்பாகக் கிடைத்தன. இவற்றுடன் சிறப்பான போசன உபசரிப்பு, தங்குமிட வசதி என்பவற்றுடன் செயல்வழி ஆய்வுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் ரூபா ஐயாயிரமும் வழங்கப்பட்டது.

எங்கள் கற்பித்தல் சேவையில் எழுகின்ற பிரச்சினைகளை நாமே திட்டமிட்டுத் தீர்த்து வைக்கின்ற உளப்பாங்கும், பிள்ளைகளின் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பட, பொருத்தமான கற்பித்தல் உபகரணங்கள், கற்பித்தல் முறைகளை நாமே தயாரித்து வழங்கக்கூடிய ஆற்றலும், மாணவர்களை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கும் மாணவர் அபிவிருத்தி கல்விமுறையை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஆளுமையும் எமக்குக் கிடைத்தன என்றால் மிகையில்லை....

இச்செயல்வழி ஆய்வின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 28. 11.2014 ந்திகதி இசுருபாய, பத்தரமுல்ல கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்....

தமிழ்மொழியிலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் பேராசிரியர் T. தனராஜ் , ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களுடன்...........


  கல்வி அமைச்சின் கேட்போர் கூடம்




எனது தந்தை



இச்செயல்வழி ஆய்விற்காக என்னால் கண்டறியப்பட்ட கற்பித்தற் செயற்பாடுகளுக்கான சில புகைப்படங்கள்..

தலைப்பு - 
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் தரம் 9 வகுப்பிலுள்ள மாணவர்களின் மூலகக்குறியீடுகளை எழுதும் திறனை மேம்படுத்தல்

பங்குபற்றிய மாணவிகள்


மூலகக்குறியீடுகள் - கிளே ஆக்கம் ( மாணவர்கள்)



அணுவெண்களை வழங்கி மூலகங்களைக் கண்டறியும்
 செயற்பாடு


மூலகங்களை வழங்கி அணுவெண்களைக்  கண்டறியும் 
 செயற்பாடு



மூலகங்களைக் கண்டறியும் லூடோ விளையாட்டு
(நான் கண்டறிந்த விளையாட்டு )



கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள்


எனது செயல்வழி ஆய்வு சிறப்பாக வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றிகள்...

- Ms. Jancy Caffoor -







2014/09/27

கற்றல் பெறுபேறு B. Ed

கடந்த 25.09.2014 அன்று எனது கல்விமானிப் பட்டப் பரீட்சை இறுதி வருடப்​பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ்!

இப்பெறுபேறுகள் எனக்குக் கிடைக்க  ஆசியளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் நன்றியைப் பகிர்ந்தவளாய், கற்றலுக்கு ஊக்கமளித்த குடும்பத்தார், வழிகாட்டல் தந்த ஆசான்கள் மற்றும் என்னுடன் கற்றலில் இணந்த வவுனியா கற்கை நிலைய ஆசிரிய நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்  உரித்தாகட்டும்




2014/07/26

இறால் பண்ணை

எனது கல்விமாணி மூன்றாம் வருட, விலங்கியல் ஒப்படைக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட இறால் பண்ணை கற்றல் அனுபவம்

இடம் - புத்தளம்

பார்வையிட அனுமதி பெற்றுத் தந்தோர்
 சகோதரி டாக்டர் ஜனொஸ்+ சதாத் மச்சான்



இடப்படும் சுண்ணாம்பு


இடப்படும் உணவுகள்




பாசி நீக்க


இறால்ப் பண்ணை வயல்

(பறவைகளிலிருந்து இறால் குஞ்சுகளைப் பாதுகாக்க மேலே கம்பிகள் இடப்பட்டுள்ளன)


உணவூட்டும் மேடை


மீன்குஞ்சுகள் விடப்படும் வாய்க்கால்



காற்றூட்டும் ஒட்சிசன் சிலிண்டர்கள்


ஒட்சிசன் கலக்கப்படல்


அறுவடைக்காக இறால் பிடித்தல்


இறால் குஞ்சு பிடிக்கும் மேடை



இறால் குஞ்சின் வளர்ச்சி, நோய் நிலைமை அவதானித்தல்
                                                                     

                                                                             
விற்பனையாளர்கள் பரிசோதித்தல்


இறால் அறுவடையின் பின்னர் வயல்


















எனது கல்விச் செயல் திட்டம்

பாடசாலை
அநு/ ஸாஹிரா மகா வித்தியாலயம்

தெரிவு செய்யப்பட்ட மாணவர் தரம் 
9

செயல்வழி ஆய்வு நடத்திய நிறுவனம் 
 கல்வி அமைச்சு, இசுருபாய

செயல்வழி ஆய்வுத் தலைப்பு
தரம் 9 மாணவர்களின் மூலகக் குறியீடுகள் எழுதும் திறனை மேம்படுத்தல்

மூலகக்குறியீடுகளை இலகுவில் கண்டறிய நான் தயாரித்த லூடோ


கூறப்படும் மூலகங்களைக் கண்டறிதல் செயற்பாடு



                                                   கற்பிக்கப்பட்ட சில மூலகங்கள்


மாணவிகள் செயற்பாடுகளினூடாகப் பெற்ற அறிவைச் சோதித்தல்


தாம் கற்ற மூலகக்குறியீடுகளின் அமைப்பை க்ளே யில் செய்தல்



                                  ஆவர்த்தன அட்டவணையில் மூலகங்களின் நிலை


மாணவர் சில செயற்பாடுகள்
















மாணவர்கள் தம் பெற்றோர்களுடன்



செயல்வழி ஆய்வு காலம் 
1 வருடம்

முடிவு 
தெரிவு செய்யப்பட்ட 15 மாணவிகளிடமும் கற்றல் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது.

ஊக்குவிப்பு 
கல்வி அமைச்சு செயற்றிட்டப் பிரிவால் 5000 ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டது.