இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.
இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.
- Jancy Caffoor-
24.02.2015
வணக்கம்
ReplyDeleteஇந்த பரீட்சையில் ஒவ்வொரு பிள்ளைளும் சித்தியடைய வேண்டும் என்று பலரது ஏக்கம்... அந்த ஏக்கங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
tவணக்கம்
ReplyDeleteசின்ன உதவி ஒன்று 5ம் தரம் மணவர்களுக்கான புலமைப்பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் தங்களிடம் இருக்கும்... என்று நம்புகிறேன் இந்த ஆண்டுக்கான மாதிரி பரீட்சை தாள்களை.. இந்த முகவரிக்கு PDFபயிலாக
இஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா... இதோ முகவரி.
rupanvani@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் விஞ்ஞானப்பாட ஆசிரியை . ஆகவே என்னிடம் இப்பரீட்சை வினாத்தாள்கள் இல்லை. இருந்தும் முயற்சிக்கின்றேன் பிறரிடம். .....கிடைத்தால் அனுப்பி வைக்கின்றேன். நன்றி
Deleteவணக்கம்
Deleteதங்களின் தகவலை பார்த்த போது மகிழ்ச்சியடைந்தேன் தேடினால் எதுவும் கிடைக்கும்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-