2012/12/10
2012/12/09
நிலாப் பெண்ணே
அடர் அடவி யோரம்
பாலூற்றும் அருவிச் சாரலில்............
முகம் நனைத்துக் கிறங்கச் செய்யும்
முழுமதியே!
உன் நுதல் மறைக்கும்
மேகக் கேசம் விரட்டி - என்
உதடு பதிக்கத் துடிக்கின்றேன் - நிதமும்
உயரப் பறந்து வானில் பரவி!
நீ யுதிர்க்கும் கீறல் கோர்த்து
ஒளி கொஞ்சம் நானும் நெய்து.............
விளக்கேற்றப் போகின்றேன்
விட்டில்கள் மொய்க்கட்டுமென்
வீட்டுக்குள்ளே!
உன் கன்னப்பருவுடைத்து
கசியும் நீர் கொஞ்சம் சேர்த்து - நானும்
தேகம் நனைக்கப் போகின்றேன் - நீயும்
வேகமாயிங்கு வந்துவிடு!
அஞ்சனம் கொஞ்சமழித்து - நீ
ஊற்றிச் செல்லும் ஒளிக் கசிவுகண்டு
காற்றுக் கூட கண்கூசி - என்
காதோரம் நாணிக் கிடக்கின்றது லேசாய்!
மாதமொரு முறை துகிலுரிந்து - நீ
மறைத்த வுன் மேனி திறந்து..............
தரையில் வாழும் மெம்மை இச்சையாக்கி
இறுமாறிக் கிடக்கின்றாய்
ஏதுமறியா அப்பாவியாய்!
நீ யுடைக்கும் நகத்துண்டுகள்
தொலைக்கு மிடம் தேடித் தேடி................
அலைகின்றேன் கனநாளாய்
காணவில்லையே வெண்ணிலாவே!
இரவுக் குவியலுக்குள்ளே - உன்னை
மாதமொருமுறை நட்டி............
சாதிக்கும் வல்லோன் ஆற்றல் கண்டு
வியக்கின்றேன்
வியர்க்கின்றேன்!
யாழ் சில அடையாளங்கள்
இலங்கை வரைபடத்தில் யாழ்ப்பாணம்
யாழ் வானில் உல்லாசமாய் பறந்து செல்லும் வான் பறவைகள்
நான் கல்வி கற்ற பாடசாலை
யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்
(செம்மா தெரு)
யாழ் பல்கலைக்கழகம்
யாழ் பொது நூலகம்
யாழ் தபாலகம்
நல்லூர் கந்தசுவாமி கோவில்
மொந்தன் வாழைப்பழம்
மாம்பழம்
வாயூறும் கிளிச் சொண்டு மாங்காய் வற்றல்
யாழ் - திராட்சை
யாழ் சுவைமிகு மரக்கறிகள்
அழகான கசுரினா கடற்கரை
நயினாதீவு நாகதீப விஹாரைக்குச் செல்வோர்
நயினா தீவு - நாக தீப விஹாரை
வளமான மண்ணில் புன்னகைக்கும் வயலொன்று
யாழ் தீபகற்பகத்தின் அடையாளமாய் பனை மரங்கள்
கீரிமலை - கேணி
யாழ் பண்ணைக் கடல்
யாழ்ப்பாணக் கோட்டை
யாழ் மணிக்கூட்டுக் கோபுரம்
யாழ்ப்பாண பெரிய கடை பகுதிகள்
ஐஸ் கிறீம் சுவைப்பகம்
யாழ் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணக் கச்சேரி
யாழ்ப்பாணம் சுப்ரமணியப் பூங்கா
யாழ்ப்பாணம்- துரையப்பா விளையாட்டரங்கு
(முற்றவெளி)
Point Pedro - Light House
போர்ச் சுவடுகள்
இறுதிக் கட்ட இராணுவ போர்த் தளபதிகள்
போருக்குப் பின்னரான யாழ் முஸ்லிம் கல்லூரி வீதி
சேதமடைந்துள்ள யாழ்ப்பாண புகையிரத நிலையம்
சேதமடைந்துள்ள பள்ளிவாசல்
வட பகுதியின் அமைவிடங்கள்
யாழ் நகர் - வரைபடம்
Subscribe to:
Posts (Atom)