இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்
வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!
நினைவுச் சாவி திறந்துன்னை.........
களவாய் ரசிக்கையில்
கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்
கன்னம் சிவக்க!
அரிதாரம் பூசப்படும் கனவுகளுக்காய்
கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......
இப்போதெல்லாம் - சில
பிடிவாதங்களின் ஆளுகைக்குள்
பிரவேசிக்கின்றது
ஊடலைத் தெறித்தபடி!
அடுத்தவருக்காய் என்னை நீ
விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........
என்னிடம் தோற்கப் போவதுமில்லை!......
காத்திரு ...............
கணப்பொழுதில்
தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!