About Me

2013/04/10

விழும் துளியாய்


எங்கோ தொலைந்திருந்தேன்
தொடுவானம் தரை நீவும் கடலாய்
அரவணைக்கின்றாய் எனை நீ
இப்போதெல்லாம்!

உனை நான் ஏந்திக் கொண்டதனால்
வான் பிழிந்து உதிர்ந்தோடும்
நீர் முத்துக்கள் கூட தேகம் சுவைக்கின்றன
உன் கரங்களாய் மாறி!


- Jancy Caffoor-
     09.04.2013



மனைவியானவள்



கணவனின் குணமறிந்து
தன் மனதை வழி நடத்துபவளே நல்ல மனைவி.................!

அன்பான மனைவியே
ஆணின் அழகிய சீதனம்!

ஆன்மீகமும் அன்பும் குலைத்து
தன்னுயிராய் ...........
தாலி தந்தவனை
காலம் முழுதும் காதலிப்பவளே
அன்பானே மனைவி.............

வழித்துணை


என் வாழ்க்கைப் பயணத்தின்
வழித் துணையாய் நீ!

காலக் கலண்டரொன்று
நம்மிடம் விட்டுச் செல்கின்றது காதலை!

ஏந்திக் கொள்
ஏந்திழையினி உன்னவளாய்!

எழுதிச் செல்வோமினி
அழகான எதிர்காலமொன்றை!

காத்திருப்புக்களுடன்
எதிர்பார்ப்புக்களுடன் - உன்னுடன்
தொடரட்டுமினி என் பயணம்!

- Jancy Caffoor-
    09.04.2013

நீயா

உரிமை உன்னுள் கொண்டதனால்
உதறினாய் இதயம் கிழித்து
வீழ்ந்தாலும் அழவில்லை என் விழிகள்
மீள் எழுவேன் உன் கரம் பற்ற

காதல் வேடிக்கையல்ல
வேதனை
கற்றுக் கொடுத்தாய் எனக்கும்
குற்றுயிராய் என்னுசிரை நீயும் உறிஞ்சி!

- Jancy Caffoor-
    09.04.2013