2013/04/29
என்றோ ஒரு நாள்
என்றோ ஒர் நாள்
உரமொன்று உயிர் வழியாய் நழுவிச் சென்றதில்
தவறுதலாய்
களைகள்
கலை வடிவத்தில் என் தேசத்தில்!
தலையறுக்கும் வெறியோடு - என்
குரல்வளை நசுக்க அவை துடிக்கையில்
மிரட்சியோடு ஓடுகின்றேன்
திக்கேதுமறியாமலே!
முட்களுக்கிடையியே
மென் மலரொன்று அணைத்து நிற்கின்றது
மனசோரம்
"நான் உனக்கிருக்கேன்"
- Jancy Caffoor-
28.04.2013
வண்ணாத்தி
இரவொன்றில்...........!
சிறகடித்து பறந்து வந்த வண்ணாத்திப்பூச்சியொன்று தவறுதலாய் என்னறைக்குள் நுழைந்தது...
அதன் பரபரப்பில் என் உறக்கம் அறுந்தது. அடித்து விரட்ட ஆவேசம் கொண்டபோதும் , என்னிடம் சிக்காமல் ஜாலியாய் அறையை நோட்டம் விட்டு பறந்து கொண்டே இருந்தது, நானோ அதனுடன் போராடித் தோற்ற நிலையில் களைத்துறங்கினேன் வண்ணாத்திப்பூச்சியை வெளியே விரட்ட முடியாதவளாய்....!
ஆழ்ந்த உறக்கத்தில் வண்ணாத்திப்பூச்சி மறந்தே போக,
எழுகின்றேன் ஏதுமறியாதவளாய் அதிகாலையில்........
கண்ணெதிரே சிறகிரண்டு பிய்ந்து தரையில் சிதறிக் கிடக்க, பதற்றத்துடன் வண்ணாத்தியைத் தேடுகின்றேன்.
நேற்று சபித்த நான், இன்றோ வேதனையுடன் அச்சிற்றுயிரைத் தேடுபவளாய்.......
நச்....நச்....
பல்லியொன்றின் சப்தம் உரப்போடு என்னருகில் கேட்க,
அறைச் சுவற்றை உற்று நோக்குகின்றேன்...
வண்ணாத்தியின் சுதந்திரம், பல்லியின் இரையாகிக் கொண்டிருந்தது..
"எப்போதும் ஆபத்துக்கள் எம்மை நெருங்கிக் கொண்டுதானிருக்கின்றன. தவிர்ப்பதும், சிக்குவதும் நம் மதி, விதி வசப்பட்டது.
ஊஞ்சல்
மன எண்ணங்கள் நிறைவேறும் போது மகிழ்ச்சி தானாய் வரும். ஆனால் நம் கையை விட்டுப் போன பொருள் திரும்ப எதிர்பாராத நேரத்தில் நம்மை வந்து சேருமாயின் , கிடைக்கும் சந்தோஷத்தை அளவிட வார்த்தைகள் கிடையாது!
----------------------------------------------------------------
புகழ்ச்சி என்பது சாத்தானின் வேதம்....
அடுத்தவர் அளவின்றிப் புகழ்ந்தால், கொஞ்சம் அவதானமாக இருங்கள்..
அவர் உங்களிடம் எதையோ எதிர்பார்க்கின்றார்
-------------------------------------------------------------
சித்திரை முழக்கம்..............
நித்திரை குழப்புது!
யாத்திரை போகும் மழையோ
மாத்திரை யாகுது விழித்திரைக்கு!
மழையோ...மழை!
அதுவும் ஐஸ்கட்டி மழை!
ஹய்யா.....ஒரே குளிரடிக்குது!
------------------------------------------------------------
உயிர்மெய்யில் உன் பெயர்........
என் மெய்யில் நீ உயிராய் இருப்பதனால்!
--------------------------------------------------------------------
அழகான இதயம்....
அழுகிப் போகும்...
விழிகள் வீங்கிப் போகும்
பழி சொல்லும் உறவுகள்!!
---------------------------------------------------------------
உணர்வுகள் , உள்ளத்தின் குரல்கள்......!
அதுவே குரல்களாக, எழுத்துக்களாக வெளி வருகின்றன. !!
பிறருக்கு பாதிப்பு வராமல் தனி மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை.
அளவோடு பேசுங்கள்....ஆனந்தம் நம்மை விட்டு சிதறிப் போகாது!
கருத்துச் சுதந்திரம் இருப்பதற்காக பண்பற்ற ரீதியில் ஒருவர் செயற்படுபவராக இருந்தால் அவரைக் கண்டிக்கும் முதல் ஆள் நான்தான். அதே நேரம் பிறர் மனதை புண்படுத்தாமல் வெளிப்படுத்தும் கருத்துக்களை ஆதரிக்கும் முதல் ஆளும் நான்தான்......
Add caption |
நாணயத்தின் முன்பு சிலவேளை "நாணயம்" கூட தோற்றுப் போகும்,
புழக்கத்திலுள்ள எமது இலங்கை நாணயம் இது . இதிலும் தமிழ் உண்டு
-----------------------------------------------------------
மன்னிப்பு என்பது மேலும் தவறுகள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்களாகும்.
தவறுகளை தண்டிக்கும் போது, உரியவர் அதனை உணர்தல் வேண்டும். மௌனம் அந்த உணர்தலை புரிய வைக்கும்.
--------------------------------------------------------- நாம் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்
அடுத்தவர் தமக்குள் பற்றிக் கொள்ளும் அற்புத தருணங்கள்!
-----------------------------------------------------------
தங்கத்தை உரசி அதன் தரம் அறியலாம்...
மனிதனை , அவன் வார்த்தைகளை
ஒளியில் விழுந்து கிடக்கின்றேன்
விட்டிலாய்........
விலகிச் செல்கின்றாய் நீ - என்
முறிந்து கிடக்கும் சிறகைக் கூட சீர் செய்யாது!
----------------------------------------------------------
வெத்திலை பாக்கு சுண்ணாம்பு
வெளுத்து வாங்கிறார் சின்னப்பு- அட
கொக்கு காத்திருக்கு மீனுக்கு
சொக்கு பொடி போட்டு மயக்கினது யாருக்கு!
---------------------------------------------------------
வரையெல்லாம் கடந்து.......
சிறை மீட்பாய் என்றிருந்தேன்...நீயோ
இரையானாய் பிரிவுக்கே- நமை
திரையிட்டு மறைத்ததும் யாதோ!
------------------------------------------------------------
சில நேரங்களில் நாம் விடும் சிறு தவறுகள் கூட .......
நீண்டகால நன்மைக்காக நமக்காக உருவாக்கப்பட்ட விளைநிலமாகக் கூட இருக்கலாம்.
- Ms. Jancy Caffoor -
ஏனடா
இப்பொழுதெல்லாம் நீ
உறக்கம் மறந்த இரவுகளை
என்னுள் எழுதிச் செல்கின்றாய்!
என் உணர்வுகளின் அனல்வெப்பத்தில்
நீ தயாரிக்கும் மின்சாரம்............
ஆயிரம் வாற்று ஏக்கமாய்
கசிந்து மருகின்றது!
உன் பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு அணுக்களிலும் நானாய்......
நம்புகின்றேன் உன்னை!
இன்னொரு தடவை இம்சிக்காதே வார்த்தையாகி!
சீனப் பெருஞ்சுவராய்
உயர்ந்திருக்கும் உன் உள்ளத்தில்....
சிறு வெடிப்புக்களை யார் தூவியது
நம்மை யழிக்க!
உன் குழந்தை மனசுக்குள்
நானிருக்கின்றேனா...........
ஊடுருவிப் பார்க்கின்றேன் மெல்ல
நம் குழந்தையாய் மீள நீ என்னுள்!
இதுதான் காதலா....!
பிரிவுக்குள் உறவையும்
உறவுக்குள் ஊடலையும் பிசையும்
அழகிய அவஸ்தையாய்!
Subscribe to:
Posts (Atom)