மனைவி. -ஏங்க பேயடிச்ச மாதிரி பேப்பர உதறி கீழே போடப் பார்க்கிறீங்க ..
கணவன் - அடீயே.........பேப்பர்ல இருக்கிற நியூஸ் சுடுதப்பா
------------------------------------------------------------ நாம் பணத்தை வீணாகச் செலவளிக்கும் போதுதான்
அப்பணத்தை உழைப்பதற்காக தொழிலாளி சிந்தும் வியர்வைத்துளிகளெல்லாம் .........
நம் கண்ணீர்த்துளிகளாக மாற்றப்படுகின்றது!
-----------------------------------------------------------
நம் எல்லோருக்குள்ளும் குழந்தை மனசும் அன்பும் மென்மையும் உண்டு. அதனைக் குழப்புவதுதான் நமக்குள் முகங் காட்டும்
பகைமை............!
பகைமையானது............
முரண்படும் உள்ளங்களுக்கிடையில் போடப்படும்
முள்வேலி!
மனித முகங்கள் யாவும் ஒரே அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கும் போது, உணர்வுகளில் மட்டும் பன்னிறங்கள்!!
இன்று தொழிலாளர்கள் உணர்வுகள் மதிக்கப்பட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட நாள், நாமும் கடந்து போன கசப்புக்களை மறந்து புது உதயங்களுக்குள் நம்மை இணைப்போமாக!
சொற்ப கால வாழ்வெல்லைக்குள்
எதற்கு பேதங்களும் பகைமைகளும்!!
ஒற்றுமையே பலம்
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பீர்!!
-----------------------------------------------------------
பஞ்சணை மேனியும்
கொஞ்சல் பார்வையும்
மிஞ்சிவிடும் அழகும் - ஆஹா என்
நெஞ்சத்தை கொள்ளை கொள்ளுதே!
------------------------------------------------------------
வாகனமோட்டுவதென்பது ஓர் கலை!
முறையான பயிற்சியும் கவனமும் இல்லாமல் செயற்படுவோர் தம் வாழ்வு முழுதும் வருந்த வேண்டியிருக்கும்!
நிதானமாக வாகனமோட்டுவீர்............
இல்லாவிடில் ....
தானமாகும் உயிர் மரணத்திற்கே!
--------------------------------------------------------- தான் இரையாவது புரியாமல்
தனக்கே இரை தேடும் ஐந்தறிவுகள்!
-----------------------------------------------------------
இழப்புக்கள் கண்டு வருந்தும் உள்ளங்கள் - நம்
வாழ்வைப் பின்தொடரும் அழகான உறவுகள்!
--------------------------------------------------------------
மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!
நம் மனசுக்குள்ள சிறகிருக்கு
கண்ணுக்குள்ள அன்பு இருக்கு
தொட்டுக் கொள்ள நினைவிருக்கு
சின்ன மாமோய்...!
நீ பக்கம் வந்தால் வெட்கம் வரும்
தங்க நிறம் கன்னம் தொடும்
தரணியெல்லாம் மயங்கி நிற்கும்
சின்ன மாமோய்!
மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!
-------------------------------------------------------------
எதிர்பார்ப்புக்கள் எப்பொழுது நட்புக்குள் முகங் காட்டுகின்றதோ
அப்போதே ஏற்றத்தாழ்வுகளும் மனங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.
--------------------------------------------------------------
எழுகின்றது நம்பிக்கை
பேரொளியாய்...............
உதிர்ந்தாலும் மீளப் பிறப்பெடுக்கும்
பசுந்தளிராய் நான்....
- Ms. Jancy Caffoor _