About Me

2014/08/31

அழகு.....



விடா முயற்சி
பிடிவாதம்
அழகு
மென்மை
புன்னகை
அன்பு
கவலை களறியா வாழ்க்கை

இவை குழந்தைகளின் வார்ப்புக்கள்!
உள்ளத்தின் ஊன் கரைத்தால்
இவை யாவும் தாராளமாய் எமக்கும் கிடைக்கும்!
-------------------------------------------------------------------------------------

பெரும்பாலும்...
விட்டுக்கொடுப்புத்தான்
உறவுகளை முறித்து விடாத ஆதாரம்!

ஆனாலும்

அவசரமான வாழ்க்கைக் கோலத்தில்
பலர்
அதனை பின்பற்றாமல் இருப்பதனால்
முறிந்து விடுகின்றது
அன்பின் நம்பிக்கை!


- Jancy Caffoor -

2014/08/19

காதல் வலி




காதல் ஒரு வழிப் பயணம்
உள்ளே நுழைந்தால் உளத்தின் பயணம்
அத்திசை வழியே!
சோகங்களைத் தந்திடும் காதல்
நம் வாழ்வையே மாற்றக்கூடியது!
--------------------------------------------------------------------------

என் தனிமையில் நீதான்
வந்து போகின்றாய்
ஆனால்
நானோ துணையின்றி!
-------------------------------------------------------------------------

காதல்
என்னை உனக்குத் தந்தது
ஆனால்
சாதல்
நீ எனக்குத் தந்தது
------------------------------------------------------------------------

அன்பைத் தேடி அலையும்
அனாதை நான!
அனாதை இல்லம்
என் கூடு!
------------------------------------------------------------------------

நம்பிக்கைத் துரோகங்களின் வலியில்
இற்றுப் போனதென் இதயமின்று


- Jancy Caffoor -

2014/08/18

ஞாபகத் தீ







உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்

கண்ணாடி மனம் உடைந்தால்
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!

அதனால்
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா
ஒட்ட நறுக்குவதா

வார்த்தைகளின் தீர்மானமது!
-----------------------------------------------------------------------------------------

மழை நீரின் வாசம்
மண்ணோடு நேசம் - அவ்
அழகின் சாரல் பிழிதலில்- இன்றைய
இருளின் மயக்கம் கழிந்ததோ!

நீண்ட நாட்களின் பின்னர் இன்று அநுராதபுரத்தில் மழை!

பனித் தூறல்கள் வீழும் இன்றைய இரவில் நரம்புகளைத் துளைத்திடும் இதமான தூக்கம் குளிரின் கொடையால்!
---------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புக்கள்தான் தேவைகளைத் தீர்மானிக்கின்றன. தேவைகள்தான் நமது தேடலைத் தீர்மானிக்கின்றன. அதிக தேடல்கள் சில நேரங்களில் ஆசைகள் வளரவும் காரணமாக இருக்கலாம். அதிக ஆசைகள் நிம்மதியற்ற மனதின் ஆணை எப்பொழுதும்!

- Jancy Caffoor -

2014/08/16

அவள்




அவள்.....
தினமும்
என்னுடன் சண்டையிடும்
செல்ல உறவு!

அவள் ...
என் மனதை வசீகரிக்கும்
காதலிக்கும் மேலானவள்!

உணர்வுகளை ஆகர்ஷிக்கும்
தோழிக்கும் மேலானவள்...

அதனால்தான்....

மானசீகமாக என் மனதில்
மனைவியாக ஜீவிக்கின்றாள்

இதமான அன்பைப் போஷித்து!
எனக்குள் விரியும் கற்பனையுலகில்
அவளென்....
ரெண்டு குழந்தைகளுக்கும்
தாயானவள்!

இருந்தும்...!

அவளுக்கு மூன்று குழந்தைகள்
என்னையும் சேர்த்து!
எனக்கும்
அவள் குழந்தைதான்!

ஏனெனில் .......!

கபடமற்ற அவள் அன்பில்
தினம் மெய்மறந்து...
என்னையும் செதுக்குகின்றேன்
தாய்மையுடன்!

Jancy Caffoor