எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை,சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, பிம்பிள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்தோ, அல்லது எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்தோ கழுவ வேண்டும்
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம்
வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்
சூரியகாந்தி விதை
இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள்
காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம்
வெள்ளையாவதைக் காணலாம்.
எலுமிச்சை சாறு
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு
நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம்
பொலிவோடு காணப்படும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.
குளிர்ந்த பால் கொண்டு தினமும் முகத்தை துடைத்து எடுத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் காட்டனை பாலில் நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
மாம்பழம்
மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.
தேங்காய் தண்ணீரைக் கொண்டு
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
தண்ணீர்
முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.
தக்காளி
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்
உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்
ஆரஞ்சு பழம்
தற்போது ஆரஞ்சு பழம் அதிகம் கிடைப்பதால்,அதன் சாற்றினை கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவி வந்தால் கருவளையம் மறைந்து, கண்கள் அழகாக காட்சியளிக்கும்
தர்பூசணி
தர்பூசணி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும், வறட்சியுடனும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள
கரும்புள்ளிகளை நீக்கும். எனவே இதன் சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வருவது, கோடையில் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.
கற்றாழை
கற்றாழையில் இருக்கும் திரவம் உங்கள் சருமத்தில் இருக்கும் நச்சு கிருமிகளை கொல்கிறது, முக சுருக்கங்கள் மறைய உதவுகிறது மற்றும் சருமத்தில் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்துகிறது.
வேப்பிலை
இயற்கை நிவாரணத்தில் மிகவும் நல்ல தீர்வு அளிப்பது வேப்பிலை ஆகும். இது முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளையும் சரி செய்ய வெகுவாக உதவுகிறது. சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது வேப்பிலை.
மஞ்சள்
மற்றுமொரு சிறந்த இயற்கை நிவாரணி மஞ்சள் ஆகும். இது, மாசு மரு, கருவளையம், கரும்புள்ளிகள் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கிறது.
ரோஜா
முகத்தின் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதில் ரோஜா பெரியளவில் பங்கு
வகிக்கிறது. யங்கள் சருமம் பொலிவடைய ரோஜா இதழ்கள் நல்ல பயன் தரும்
குங்குமப்பூ
முகப்பொலிவு பெற குங்குமப்பூ மிக சிறந்த பொருள் ஆகும். இவை முகப்பருக்களை போக்குவதிலும் நல்ல வல்லமை கொண்டது. இது
உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கும் மற்றும் வலிமைடைய செய்யும்.
சந்தனம்
சந்தனம் குளிர்ச்சி உடையது. இது சரும அலற்சிகளுக்கு தீர்வளிக்கும், சருமத்தை மென்மையடைய செய்யும் மற்றும் சருமத்தின் வலிமையை அதிகரிக்கும்.
தயிர்
பிம்பிளை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? அப்படியெனில் தயிர் மிகவும் சிறப்பான பொருள். இதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு இதனை
அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு, முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.
பூண்டு
பூண்டு கூட பிம்பிளைப் போக்கும். மேலும் பூண்டு உடலினுள் மட்டுமின்றி சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். அதற்கு ஒரு பூண்டு பல்லை எடுத்து தட்டியோ அல்லது சாறு எடுத்தோ, பிம்பிள் மீது வைத்தால்
பிம்பிள் உடனே நீங்கும்.
பெரும்பாலானோர் வெந்தயத்தின் பயன்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இது முடி உதிர்வை குறைத்து கூந்தல் நன்கு வளர உதவுவது மட்டும் இல்லாமல் பொடுகு பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.
கருஞ்சீரக விதை
கருஞ்சீரக விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதோடு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பஞ்சின் மூலம் உச்சந்தலையில் தேய்த்து உபயோகப்படுத்தினால், பொடுகு தொல்லை முழுவதுமாகத் தீரும் மற்றும் தலைமுடி நன்கு வளர தொடங்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, ஆலிவ் ஆயில் சருமத்துளைகளை சுத்தம் செய்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வருவது
நல்லது.
வால்நட்ஸ்
வால்நட்ஸ் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பசையுடனும், ஆரோக்கியமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே
இதனை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அதனை அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
தேவாதாரு மர இலை
தேவாதாரு மர இலை (Cedar Tree)
தலை முடி நன்கு ஆயுள் பெற்று வளர தேவாதாரு மர இலைகள் நல்ல பயன் தருகிறது. தலையில் நன்கு முடி வளர தேவாதாரு மர இலைகள் ஊட்டம் அளிக்கின்றது. தேவாதாரு மர இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உபயோகப்படுத்துவதன் மூலம் உங்களது தலைமுடி நல்ல வலுவடையும்.
தைம் - மூலிகைச் செடி
தைம் மூலிகை செடியில் உயர்ரக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த
மூலிகையை நீங்கள் உச்சந்தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறையும் மற்றும் உங்களது முடி நன்கு அடர்த்தியாய் வளர
உதவும்.
கொத்தமல்லி
தலை முடி வளர்வதற்கு கொத்தமல்லி ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும். மல்லியை அரைத்து நீங்கள் தலைக்கு உபயோகிக்கும் எண்ணெயில் கலந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளர்வது மட்டுமின்றி முடியின் வேர்களுக்கும் ஊட்டம் அளிக்கும்
சேஜ் - மூலிகை இலை
இந்த மூலிகையின் நற்பண்புகள் சொட்டை வராமல் இருக்க உதவுகிறது. இதை உபயோகிப்பதன் மூலம் கூந்தலின் மயிர்கால்கள் வலுவடைவதால்
முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த மூலிகையை நீங்கள் தலைக்கு குளிக்கும் போது உபயோகிக்கும் ஷாம்புவோடும் கலந்தும்
பயன்படுத்தலாம்
தூக்கம் மிகவும் இன்றியமையாதது. இரவில் தாமதமாக தூங்கினாலோ அல்லது மிகவும் குறைவான அளவு தூக்கத்தை மேற்கொண்டாலோ கருவளையம் வரும். ஆகவே தினமும் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்ளுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.
யோகா
மன அழுத்தத்தின் காரணமாக கருவளையம் வர வாய்ப்புள்ளது. எனவே தினமும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா அல்லது தியானம் செய்து வந்தால், மனம் அமைதியாகி மெதுவாக கருவளையங்களும் மறைய ஆரம்பிக்கும்.
- Jancy Caffoor-