About Me

2015/08/25

மேகம் பிழிந்து

மழை விரல்கள் தீண்டுகின்றன
மேனியோ
செல்லமாய் முறைத்தபடி
சிலிர்க்கின்றதே
.
நீர்த்துளிகளின் ஊர்கோலம்
உடைகின்றதா - பூமிப்
படையில் உருண்டு
குடைத் திரைகளும்
மருள்கின்றதே
.
மேகம் பிழிந்து
சாளரம் வழியே வீசும்
தூவானம்
குளிர் மாலையாய் என்னுள்
அழகு சேர்க்கும்
அதிசயம் சொல்லவா
.
அடடா
இருண்ட திரைக்குள்ளும்
ஓரு கவிதை
உருவாகின்றதே
சிறிதாய்


- Jancy Caffoor-

 

தேர்தல் தீர்ப்பு

நேற்றைய
வெற்றிக் கோஷங்கள்
இன்றைய
நிசப்தத்தின் அழகுக்குள்
.
தேர்தல் தீர்ப்புக்களின்
எழுதுகோல்கள்
வரைந்த சரிதமின்று
.
காலத்தின் புது
சரித்திரம்
ஜனநாயகத்தின் மந்திரம்
அதுவோ
மதவாதிகளின் தரித்திரம்

இனவாதத்தில் தீக்குளித்த சில
மதவாதிகளின்
மயானத்தில்
இனி
சுவடுகளாய்
அஹிம்சை பயணிக்கட்டும்

பிரதமரே
உங்கள்
பொறுமைக்குக் கிடைத்த வெற்றியில்
சிறப்பான நல்லாட்சி
பெருமை கொள்ளட்டும் மன
நிறைவோடு வாழ்த்துகின்றேன்



- Jancy Caffoor-

 

முகநூல்



"அலை அடிச்சா கரைக்கு வரணும் - அது
தரைக்கு வந்தா
மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு கடலுக்குப் போகணும்"
.

இந்த சுழற்சி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்..
தேவைகள் ஏற்பட்டால் அது நிறைவேற ரொம்ப முயற்சிக்கிறோம். ஏனோ அவை நிறைவேறினாலும் மனதில் திருப்தி வருவதில்லை மாறாக எமது எதிர்பார்ப்பு இன்னும் விரிந்து சென்று வேறொரு தேவையைத் தொட்டு நிம்மதியின்மைக்குள் சுருண்டு கொள்கின்றது.
------------------------------------------------------------------------------------------------------

உருகும் பனியும்
திரவமாகும் வெப்பங் கண்டால்
உதிரும் சருகும்
எருவாகும் மண் பற்றிக் கொண்டால்
முயற்சியும் பயிற்சியுமிருந்தால்
உயர்ச்சியும் வாழ்விலுண்டாகும்.


- Jancy Caffoor-
     25.08.2015

சிறகுகள் வேணாம்


நம்மைச் சுற்றி புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை
நாம் தனிமையுலகில் வாழும் அனாதைகள்தான்
-------------------------------------------------------------------------------------------

சிறகுகள் வேணாம்
சிறு கூடே போதுமெனக்கு
-------------------------------------------------------------------------------------------

தினமும் ஒர் சொட்டுக் கண்ணீர் சேமிக்கிறேன்
என் விழிக்கோப்பையில்
ஓர் நாள்
நான் அடையாளமற்றுப் போகும்போது
உலர்ந்து போன
என் இருப்பினைக் காட்டும் சுவடுகளாக
அவை இருக்குமென்பதால்
-----------------------------------------------------------------------------------------

அரசியல் எனக்கு பிடிக்காது, ஆனால்,,,
இப்போதெல்லாமே முகநூல் அரசியல் மேடை ஆகிற்று
தவிர்க்க முடியவில்லை தரிசித்து போகிறேன் சில சுவாரஸ்யங்களை
-----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒர் சுவாரஸ்யமான கலை, ஏனென்றால் பல உணர்ச்சிகளின் உள்ளடக்கமே நாம்
அதனால்தானோ என்னவோ
ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற ஆர்வம், ஆசை, பதற்றம், எதிர்பார்ப்பு அதனை முடிக்கும் தறுவாயில் வருவதில்லை காரணம்
அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற அனுபவங்கள் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , நிதானப்படுத்தி நம்மை முழுமையடையச் செய்கின்றன.
-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் பேருக்கு கூஜா தூக்குவதை விட ஒரு சிலருக்கு ராஜாவாக இருக்கலாம். அப்போதுதான் நம் நல்ல சிந்தனைகளுக்கு அங்கீகாரமும்
செயல் வடிவமும் கிடைக்கும்
------------------------------------------------------------------------------------------

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கும்போது வெறுக்கும் மனசு, அவங்க நம்மை விட்டு பிரிய போறாங்க என்று உள் மனசு சொல்லும்போது மறைஞ்சிருந்த அந்த பாசம் கண்ணீராய் கரைய ஆரம்பிக்கிறது, பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்தான் இழப்பின் வலி.
-------------------------------------------------------------------------------------------

தேர்தல் பரீட்சை முடிஞ்சாச்சு பாஸ் ஆனவங்க பார்ளிமெண்ட் போவாங்க
பெயில் ஆனவங்க அடுத்தவங்க கேலிப் பேச்சுக்குள்ள கொஞ்சக் காலம்
விழுவாங்க ஆனா பள்ளிக்கூட புள்ளைங்கட பரீட்சை இன்னும் முடியலியே

ம்.ம்.....

லீவு முடிஞ்சு நாளைக்கு மீண்டும் ஸ்கூல் பயணம். ஆரம்பிக்குது


- Jancy Caffoor-

     25.08.2015