About Me

2015/08/25

இதுவும்..............


இடம் - யாழ்ப்பாணம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி தமிழ் மக்களுடன் இனிமையான இடைக்கால தமிழ்ப் பாடல்கள்.  ஆனால் வவுனியா வந்ததும் சிங்களப் பாடல்கள் ஒலிக்கின்றன.
.
இடம் - அநுராதபுரம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி சிங்கள மக்களுடன். சிங்கம் 1 தமிழ்ப்படம்
.
இதுவும் இன ஒற்றுமைதான்.....
--------------------------------------------------------------------------------

நாம் சந்திக்கும் ஏமாற்றுக்காரர்கள்தான் நமக்குள் எச்சரிக்கை உணர்வுகளை விதைக்கின்றார்கள்.
இடம் - கொழும்பு காலிமுகத்திடல்
வீடு திரும்பும் நேரம். அருகில் ஓர் ஆட்டோ நிறுத்தப்படுகின்றது. போக வேண்டிய இடம் சொன்னோம். ஏறுங்களென தமிழில் சொன்னான்.

ஓ முஸ்லிமா!

பயமின்றி ஏறினோம். ஆட்டோ புறப்பட்டது. இலகு பாதை இருக்க வேறு திசைகளில் ஆட்டோ ஓடியது. காரணம் கேட்ட போது  தனக்கு வீதி தெரியாது என போடு போட்டான். கடைசியில் எப்படியோ வீடு சேர்த்தான். ஆட்டோ வாடகை 700 என்றான்.

நான் கொடுக்க வில்லை. உன் தவறுக்கு நாம்.பணம்.தர முடியாதென்றேன். சரி 500 ரூபா தாருங்களென்றான். 1000 ரூபா கொடுத்தேன் மிகுதியை தரும்படி மிகுதி பணத்தை கையிலெடுத்தான்.

ஆனால்....

கண்ணிமைக்கும் நேரத்தில் மிகுதிப் பணத்தை தராமல் ஆட்டோ பறந்தது. சீ    இதெல்லாம் ஒரு பொழைப்பு. அந்த ஆட்டோக் கள்ளனை சபிக்கத்தான்முடிந்தது. அவனது நம்பிக்கைத் துரோகம் சிறந்ததோர் படிப்பினை எனக்கு!

- Jancy Caffoor-
      25.08.2015


ஈத் முபாரக்.

அல்ஹம்துலில்லாஹ்
பல வருடங்களின் பின்னர் யாழ் மண்ணில் நோன்புப் பெருநாள்
மண் வாசனை கமழ
மனதிலோ சந்தோசக் கீற்றுக்களி்ன் வருடல்
ஈத் முபாரக்  July 18, 2015


- Jancy Caffoor-

      25.08.2015


முகநூல்



உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....
----------------------------------------------------------------------------------------------------------------


வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


முகநூல்




வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா
வீழ்கின்றனவே கவிதைகளாய்
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே
பிரியம் வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா
இல்லை
அழகான அன்புக்கா
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்
------------------------------------------------------------

தனிமை
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை
எதிர்பார்ப்புக்கள்தான்
நம்மை ஏமாளிகளாக்குகின்றன
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை
அதனால்தானோ
என்னவோ
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்


- Jancy Caffoor-

      25.08.2015