About Me

2019/06/15

உன் நிழல் வீழ்த்த

Related image

என்  தனிமை காத்திருக்கின்றது
துணையாக நீ!

 மூங்கிலாக நான்
துளையாக நீ!

என் மனபாத்திரத்தில் - உன்
நினைவு வழிகிறது மதுவாக !

நான் மேகமாக மாறி - உன்னை
சுமந்து கொண்டிருக்கின்றேன் தினமும் !

 என் குரல்வளை நாணுகின்றது
உன் பெயர்  சொல்லும் போதெல்லாம்!

 என் மூச்சு தினமும் வாசிக்கின்றது
உன் பெயரை அழகாக !

என் விழி திறந்தே இருக்கிறது
உன் நிழல் வீழ்த்த! 


- Jancy Caffoor -
  

2019/06/11

எதிர் மறை எண்ணங்கள்

Image result for rosa

கையில் அழகான ரோசா!

இருந்தாலும்
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்
இவ்வாறே வாழ்க்கையும்  எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அலை மோதுகிறது.

- Jancy Caffoor-
   11.06.2019

யதார்த்தம்

Image result for சுயநலம்

இந்த உலகம் எப்போது உருவாக்கப்பட்டதோ, அன்றே மனித வர்க்கமும் சுயநலம் என்ற வலையை தன்னைச் சுற்றி பின்னத் தொடங்கி விட்டது।  வஞ்சகம், பொறாமை, கள்ளம், கபடம் போன்ற நச்சு விதைகளின் இருப்பிடம் அவனது மனமாக மாறி விட்டது। தான், தன் குடும்பம் முதனிலை பெற, அடுத்தவர் தூரமாகினர். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பொதுநலம் மறைந்து போனதில் முரண்பாடுகளின் விளைச்சல் அவனது வார்த்தைகள் மூலமாக உருவாகத் தொடங்கிவிட்டது. அழகான குறுகிய கால வாழ்க்கையில் சந்தோசம் துளியளவு கிடைக்காத மன நிலை நிரந்தர சொத்தாக மாறி விட்டது! உள்ளே குமுறி வெளியே சிரிக்கும் நடிகனாக மனிதன் மாறத் தொடங்கி விட்டான். இயந்திரமயமான இவ் உலகம் இன்று இதயம் இல்லாத மனிதன் கையில்!


- Jancy Caffoor-
   11.06.2019

2019/06/05

Sahrish




















தினமும்
குறும்பை பிழிந்து ஊற்றுகிறாள்
இருளில் - என் 
தனிமைக்குள் தன்  சிரிப்பை உதிர்த்தே
வண்ணக் கலவையாகிறாள்
என்னுள்!

தன்  மலர்க்கரம் வலை வீசி
என்  தோளில் மாலையாகின்றாள்
அன்பு வாசம் தூவி - என்
அன்புத் தூணில் சாய்கிறாள்!

முல்லை பற்கள் உதிர்ந்த
ஏழு எட்டாத அழகு நிலவவள்!
கலகலவென கதை பேசி
காற்றுக்கும் சுவாசம் வீ சுவாள்!

சிறகடிக்கும் சின்ன சிட்டு - என்
உறவுக்கு உயிர் தந்த லட்டு !
அவள் சின்ன குறும்பு சஹ்ரிஸ் !

.
- Jancy Caffoor-
   05.06.2019