About Me

2020/06/07

வெற்றிப்படிகள்

 மண் துளைக்கும் வேரின் பலத்தால்/
விண் முகம் நோக்கும் மரங்கள்/
பாறைகளில் மோதும் காற்றின் உற்சாகம்/
பூகோளத்தின் உயிர்கள் வாழும் நிலமாகும்//

குழிகளும் நிமிர்ந்தால் சிகரம் தொடும்/
கடலும் எழுந்தால் மழையாய் பூக்கும்/
அன்றில்கள் முயன்றால் மேகங்கள் பறிக்கும்/
இலக்குடன் உழைத்தால் முன்னேற்றம் வசமாகும்//

உணர்வாகும் அனுபவங்கள் வழிகாட்டும் சாதிக்க/
ரணமாகும் காயங்கள் உரமாகும் முயற்சியால்/
சறுக்கும் உதைப்புக்கள் ஏற்றும் கரங்களாகும்/
உடைந்த தோல்விகளே வெற்றிகளாய் சேரும்//

தடைகளை உடைக்கும் உறுதியும் வலிமையும்/
மனதின் போராட்டங்களை மாற்றங்களாய் மாற்றும்/
வலிகளை அறுத்திடும் சக்தியுண்டு புன்னகைக்கே/
தன்னம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றிப்படிகள் அருகில்//

ஜன்ஸி கபூர்

பண்பாட்டுக் கோலங்கள்

முன்னோர் பண்பாட்டுக் கோலங்களின் குறிகாட்டிகள்/1
சிந்தையில் மனிதம் மொழிந்த பாசக்காரர்கள்/
இயற்கையோடு இசைந்து வாழ்ந்த அனுபவசாலிகள்/
நம்மை நலப்படுத்த வழிகாட்டும் முதுசொம்கள்/4

ஜன்ஸி கபூர்
 

# அழகே அன்பே அமுதே

அறிவே அறமே அரணே/
அநீதி அலையா அகமே/
அக்கு அணல் அழகே/
அலர் அதம் அமுதே/
அருகே அமர் அருளே/
அவதி அச்சு அண்டா/
அமைதி அருமை அன்னை/
அழியா அன்பு அவளே/

ஜன்ஸி கபூர்

2020/06/05

வாழும் வாழ்க்கையால்

புன்னகை பூக்களே புரட்சிப் பாக்களே/
நவீன தேடலுள் நாகரிகம் புகுத்தி/
சோம்பல் உதறி உழைப்பால் உயர்ந்து/
அன்பில் கலந்து உறவுகளோடு இணைந்து/
வன்முறைகள் கொன்று ஒற்றுமையாய் கூடி/
வாழும் வாழ்க்கையால் பூமியை வெல்வோம்/

ஜன்ஸி கபூர்