கவிதாயினி
உணர்வின் நெருடல்களிவை !!
About Me
kavithaini
Jaffna, Sri Lanka
View my complete profile
2020/07/29
முற்றத்தின் அழகு
முற்றம் கூடியோர் சுற்றம் போற்றவே
நற்கவி இயற்றியே பொற்கவி ஆகினர்
தோற்றப் பொழிவுடன் நிலா முற்றமாம்
கொற்றவன் ஆயினார் நிறுவனர் மாறனார்
ஜன்ஸி கபூர் - 29.07.2020
அகவை வாழ்த்து
அகவை ஆறினில் பதித்திட்ட தளத்தில்/
ஆனந்தக் கீற்றுக்கள் தேனூற்றி மகிழும்/
அகம் நுழையு முந்தன் கவிதனில்/
அமிர்தச் சுவையூற்றாய் தமிழும் நனையும்/
ஆக்கமும் ஊக்கமும் எமக்களிக்கும் நிலா முற்றமே/
ஆற்றலுடன் வளர்கின்றாய் அன்னைக் குழுமமாய்/
ஆர்வத்துடன் உனை செதுக்கிய நிறுவனர்க்கும்/
அழகாய் உனக்குள் உயிரூட்டும் குழுமத்திற்கும்/
அழகு சான்றிதழ்களும் அணைத்திட/
அற்புதத் தளமானாய் எம் பயணத்திற்கே/
அன்பான வாழ்த்துக்கள் அகம் மகிழ/
ஆயிரம் வருடங்கள் ஒளிர்ந்திடு அகிலத்தினுள்/
-
ஜன்ஸி கபூர் - 28.07.2020
2020/07/28
வாழ்க்கை
வறுமையும் தொலைத்ததோ குறும்பின் குறுநகை
சிறகடிக்கும் விழிகளிலோ பசித் துடிப்பு
சிறு ரூபாய்க்குள் முடங்குகின்றதே வாழ்க்கை
ஜன்ஸி கபூர் -28.07.2020
கவிப் பயணம்
நிலாவில் கவி வடித்தேன் நித்தமும்
உலாவியே நனைந்தேன் அமிர்தத் தமிழில்
கனவுக்குள்ளும் உணர்வு பிழியும் கவியுமானேன்
கற்பனைச் சாரலுக்குள்ளும் காதல் நனைத்தேன்
சொற் சுவைதனில் சிந்தையும் மகிழ
அற்புதத் தளமாம் முற்றத்தில் பயணிப்போம்
ஜன்ஸி கபூர்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)