1. நீ மழைத்துளியா
உன்னைத் தேடினேன்
என் முகவரி அழிந்துவிட்டது
2. தீயில்
எரிந்து கொண்டிருக்கின்றேன்
சாம்பர்மேட்டில்
பூக்கின்றன உன்னினைவுகள்
3. காணாமல்போன என்னை
காட்டிக்கொடுக்கின்றன
உன் கண்கள்
4. உன்னை
மௌனமாக வாசிக்கின்றேன்
திரை விரிக்கின்றது
கண்ணீர்
5. தீபமேந்தியவளாக நிற்கின்றாய்
நானோ
கரிந்த சிறகுகளுடன்
உன்னைச் சுற்றுகின்றேன்
6. நாம் மயக்கத்தில் கிடக்கின்றோம்
சுவாசமாகக் கிடைக்கின்றது
காதல்
7. என்னை உன்னில் ஒளித்துவிட்டேன்
பிரிவே
இனி என்ன செய்வாய்
8. என்னைக் கொஞ்சம் அழவிடு
கவிதைகள்
எனக்குள் உயிர்க்கட்டும்
9. என் கண்ணீரைச் சேமிக்கின்றாய்
உன் புன்னகையை ஈரப்படுத்த
10 நான்
உறங்க வேண்டும்
கனவுகளால்
என்னைப் போர்த்திவிடு
ஜன்ஸி கபூர் - 12.11.2020
Kesavadhas
ஜன்ஸி கபூர் அட்டஹாஸமான கஜலகளின் ஊர்வலம்!
ஒவ்வொரு கவிதையும் ஒரு வராகன்!
வாழ்த்துகள் கவிஞரே!
-----------------------------------------------------------------------------------