About Me

2013/04/10

துளிகள் - 4

உயிர் தந்தாய் உறவுகள் பிணைந்து.........
உன் ஆத்மாவே என்னுள்ளிறங்கி
கருவாகின்றது நம் குழந்தையாய்!

---------------------------------------------------------------------------------------

உடலின் மேலாடை அழகு
உணர்வின் நீரோடை அன்பு
தவிப்புக்களும் ஏக்கங்களும் நிறைந்த வாழ்வில்
இயற்கை தரும் அழகோ அலாதியானது!
---------------------------------------------------------------------------------------

காமம்............
வாழ்வழகை சிதைக்கும் அகோரம்!

கலை வளர்க்கும் மனிதன் கூட
காமத்தின்மீதுள்ள காதலை.......

சிதைக்கின்றான் உளி முனையில் பதித்து!

இன்றைய உலகின் ஒழுக்கச் சிதைவுக்கு, ஆரோக்கியமற்ற இவ்வாறான சிந்தனைகளே காரணமாய் அமைந்து விடுகின்றது.!

-----------------------------------------------------------------------------------------

துயரமெல்லாம் களைந்து நாம்
துள்ளிப் பள்ளி சென்று
தொட்டு நின்ற வசந்த நாட்களில்..........

நீ பக்கம் வரும் போதெல்லாம்
வெட்கம் தொலைத்து.............
என் மார்போரம் சாய்ந்து எனைத் தாங்கும்
அந்தப் பாசம் இனி வருமோடா.......
--------------------------------------------------------------------------------------

ஏன் வாழ்கின்றோம்..........
எதற்கு வாழ்கின்றோம்..........
எப்படி வாழ்கின்றோம்.........
எங்கே வாழ்கின்றோம்.......

பல கேள்விகளுக்கான விடைகளை நமக்குள் நாம் சேகரிக்கும்போது வாழ்வும் வசந்தத்தின் கூவல்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றது.

"வாழ்க்கை வாழ்வதற்கே"
-------------------------------------------------------------------------------------------

தோல்வி என்பது நாம் விரும்பாததொன்று. எனினும் தோல்வி நம்மைத் தொடலாம் எனும் எதிர்வு கூறலிலும் கூட , ஏதோ தன்னம்பிக்கை கொண்டு வெற்றிக்காக முயற்சிக்கின்றேமே, அந்த முயற்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்........
-------------------------------------------------------------------------------------------

நிலவின் மோகனத்தில்
மோகத்தை பிழியும்.......
கவியாய் "காதல்"
------------------------------------------------------------------------------------------

வாழ்க்கைப் பந்தயத்தில்
எழுதிச் செல்லும் தீர்ப்புக்களாய்........
பரவிக் கொண்டிருக்கின்றன - உன்
நினைவுகள்!
---------------------------------------------------------------------------------------

விழுகின்ற ஒவ்வொரு துளிகளும்
தழுவுகின்றன என்னை நீயாகி.......
கனவுகள் பேசுகின்ற சாரளங்களாய்
சாகாவரம் பெற்றவை
உன்னுடனான "காதல்"
----------------------------------------------------------------------------------------

நாம் ஆராயாமல் அவசரமாய் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளின் இறுதிப் பக்கத்திலும் எஞ்சி நிற்பவை இழப்புக்களும், சோகங்களுமே!
----------------------------------------------------------------------------------------

வாய்ப்பு தானாக வருவதில்லை...
நாமாய் உருவாக்க வேண்டும்!
வாய்ப்பை வாழ்வில் நங்கூரமிடுங்கள்
வெற்றிகள் கரமசைக்கும்
மனமோ..........
மகிழ்வில் சிறகடிக்கும்!
------------------------------------------------------------------------------------------

நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!

வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
------------------------------------------------------------------------------------

நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!

வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.

---------------------------------------------------------------------------------------

போராட்டங்களும் போட்டிகளும் - நம்
பிறப்பைக் கூட விட்டு வைக்கவில்லை!
ஒவ்வொரு சரிதத்தையும் புரட்டிப் பார்த்தால்
முயற்சியாளனே............
சாதனையாளனாய் உரத்து சத்தமிடுகின்றான்.....
வாழ்வில் வெற்றிகளைக் குவித்தவாறு!

----------------------------------------------------------------------------------------
காலம் பொன்னானது...............
நாம் அதனை வீணாய் கரைத்து விட்டு
இழப்புக்களால் எம்மை நிரப்பிக் கொண்டிருக்கின்றோம்!
------------------------------------------------------------------------------------

தனிமையை விடக் கொடுமையானது........
அன்பான நட்பின்றி இருத்தலேயாகும்!
-------------------------------------------------------------------------------------------

உண்மையான காதல் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை. 
காலவோட்டத்தின் எதிர்ப்பலைகளில் 
வெற்றிக் கரம் நீட்டுகின்றது...............
மகிழ்ச்சிப் பூக்களைத் தூவியவாறு!

துளிகள் - 3

இனத் துவேசம் துறந்து வாருங்கள்
இங்கே ..............
மொழி மறந்து கூடுங்கள்.........
அழிக்கும் சாதியை ஒழியுங்கள்.......
மதங்கள் மேல் மதமில்லா
நட்புலகம் நமதாகட்டும்!

------------------------------------------------------------------------------------------

காதல் எவ்வளவு இனிமையோ .............
அதைவிட கொடுமை  பிரிவு வலி!

--------------------------------------------------------------------------------------

நாளைய சிதைவுக்கான..........
இன்றைய ஒத்திகை!

----------------------------------------------------------------------------------------

வலிக்கும் போராட்டங்கள்தான்.........
வழி விடும் பயணப்பாதைக்கு!

----------------------------------------------------------------------------------------

வாலிபன் முதுமையை விரும்ப மாட்டான்.....
அறிஞனோ இளமையை விரும்ப மாட்டான்!

முன்னவன் கவர்ச்சிக்கான வாய்க்கால்
பின்னவனோ அனுபவக் கடல்!

----------------------------------------------------------------------------------------

சுதந்திரமாக இருப்பதாக எண்ணுங்கள்
சுறுசுறுப்பு தானாய் தேடி வரும்!

அதிக ஆசை அடக்கி வாழுங்கள்...
மனம் என்றும் ஆரோக்கியமாய் வாழும்!

-----------------------------------------------------------------------------------

(ஏ)மாற்றங்கள் நிறைந்த வாழ்வினில்
ஏற்றங்கள் தருவன வாழ்வியல் போராட்டங்கள்!
புரிந்தால் சீற்றங்கள் விலகும்..............

------------------------------------------------------------------------------------

பல காத்திருப்புக்களின்
சேமிப்பகம்தான்...........
வாழ்க்கை!

காலங்கள் வீணடிக்கப்படும் போது
வாழ்வும்
தன் பெறுமதியை இழந்து விடுகின்றது!

---------------------------------------------------------------------------------------

தானாய் கிடைப்பதை விட......
போராடிக் கிடைப்பதில்தான் மகிழ்ச்சி குவிகின்றது.

ஏனெனில் அணுவணுவாய் உணர்ந்து போராடும் போது கிடைக்கும் அனுபவம் எப்போதும் வெற்றியை தனதாக்கிக் கொள்ளக் கூடியது!

-----------------------------------------------------------------------------------------

இன்று நாம் நிராகரிக்கும் விடயங்கள்......
எதிர்காலத்தில் நம்மை ஏங்க வைக்கும் வரங்களாகக் கூட இருக்கும்.

இருந்தும்.........................!

நாமோ சூழ்நிலைக் கைதி!
நம் தீர்மானங்களுக்கு சூழ்நிலைகளும் காரணமாக அமைந்து விடலாம்!

------------------------------------------------------------------------------------------

குழந்தையாகவே இருந்திருக்கலாம்.......
குதுகலமும் குறைந்திருக்காது!

கடந்தது திரும்புமோ.............

மனசோரமோ  ஏக்கத்தின் நிழல்களில்
நசிங்கிக் கிடக்கும் நேரம் இந் நேரம்........!!

----------------------------------------------------------------------------------------

நல்ல புத்தகம் மிகச் சிறந்த நண்பர்!
நல்ல நண்பர் - நம்
நற்செயல்களுக்கான கடிவாளம்!

நல்ல நண்பர்களைப் பெற்றோர் வாழ்வில் அதிஷ்டசாலிகளே!

---------------------------------------------------------------------------------------

ஏமாற்றங்கள் மனதின் வலி. ஏமாறுபவர்கள் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்களும் உருவாக்கப்படுகின்றார்கள். ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி ஏமாற்றப்படும்போது மட்டும் மனதில் சுமந்திருக்கும் கவலையெல்லாம் துறந்து வாய்விட்டுச் சிரிக்கின்றோம். செல்லமாய் சினக்கின்றோம்......
உண்மையில் இந்த பேதமைக்குக் காரணம் நட்பு, அன்பின் ஈர்ப்போ.......................................!

எனக்கும் உனக்கும்

காதல் சொல்ல வந்தேன் - உன்னை
மெல்ல அள்ள வந்தேன்!

ஈரம் நனையும் முத்தம் - அதுவுன்
உதடு சிந்தும் சத்தம்!

இத்தனைக்கும்

உனக்கு இருபது!
எனக்கு  அறுபது!!

- Jancy Caffoor-
     09 .04.2013

ஆட்டோ கிராப்

அது.......பதினாறு வயசு நிரம்பிய பருவம்!

வெறும் கனவுக்குள்ளே மனதைக் கிறங்க வைத்து, அழகான உலகத்தில் அமிழ்ந்து வாழ்ந்த காலம். திரைப்படத்தில காணும் அழகான நடிகர்களுடன் ஜோடியாய் இரகஸியமாய் இணைந்து கற்பனை உலகில் சொர்க்கித்துக் கிடந்த காலம்...........................

பின்னால சைட் அடிச்சு திரிஞ்ச பசங்களயெல்லாம், திரும்பி பார்க்காம கொஞ்சம் திமிரோடு நடந்த பருவம்!

வந்த தூதுக்களையெல்லாம் சுக்கு நூறாக்கி துடிக்க வைத்த காலம்................

அந்நாட்களில்...........!

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜஸ்பழக் கடை இருந்தது...அங்கே ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்தான்..என்னை விட அவன் ஆறு வயது மூத்தவன். அவன் ரொம்ப அழகு,............நான் கற்பனையில் லயித்திருந்த அந்த கனவு நாயகனைப் போலவே,

ஆனால் அவன் கூட ஒரு நாளும் பேசியதில்ல......நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு லுக் மட்டும் விடுவான்....
அவன் மீசையோரம் கொஞ்சம் புன்னகைகளையும் சேர்த்து!

அவனும் அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் பொண்ணும் லவ்வுன்னு செய்தி காதுக்கு எட்டின பிறகு (அந்த பொண்ணு என் நண்பி) அவன நான் கொஞ்சம் அதிகமாக வாச் பண்ணினேன்.....

அடப் பாவி.........

அவன் கொஞ்ச நாள்ல என்னையே அவுட் ஆக்கிட்டான்.

(அப்போ அந்த பொண்ணு லவ்..என்னாச்சுன்னு தெரியல)

கொஞ்சம் கொஞ்சமாக அவன்ர பார்வை, சிரிப்பு, அந்த அன்ப நானும் ரசிக்கத் தொடங்கினேன். அவன் யாரு, அவன்ர பின்னணி என்ன எதுவுமே அப்ப தெரியல......
அவனின் பார்வைக்குள் என்னை நாட்ட அடிக்கடி அவன் கடைப் பக்கமாக போவேன்.ஏதாவது பேசுவான்.......
பதில் சொல்ல மாட்டேன்...என் மௌனத்தை அவனும் ரசிப்பான்......இப்படியே ஆறு மாதம்..............!

யாருக்கும் எங்க உணர்வு தெரியாது!

இது லவ்வா......இல்லையா....தெரியல! நாங்க ஒரு வார்ததை கூட பேசினதில்லை...ஆனால் ஒருவர ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.அவனப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல மனசுக்குள்ள பீலிங்ஸா இருக்கும். அவனும் வாசலுக்கு வந்தா எங்க வீட்டு வாசலையே நோட்டம் விட்டுக் கொண்டு நிற்பான்.

எங்க அப்பா ஒரு பொலிஸ்காரர். ஸோ...........ரொம்ப என்னைக் கட்டுப்படுத்தி இருந்தேன்......
ஒருநாள் எங்க வீட்டு கதவில இருக்கிற சிறு துவாரம் வழியாக அவன பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அப்பா வந்துட்டார். வசமாய் மாட்டினேன். நான் ஏறியிருந்த இடத்தில ஏறி அப்பாவும் றோட்ட பார்த்தார்.

அவன்......................

எங்க வீட்டு வாசலப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பா என்கிட்ட ஒரு வார்ததை கூட பேசல....அந்த மௌனம் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திச்சு. அம்மா சாடைமாடையாய் அவனுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு புற கௌரவத்தை எடை போட்டாங்க..

யாரும் எங்க அன்ப புரிஞ்சு கொள்ளல.....அது காதலா இல்ல பருவக் கிளர்ச்சியா........எனக்கும் தெரியல!

மறுநாள் அவன் வேலைக்கு வரல...........

அந்த முதலாளிக்கு அப்பாதான் ஏதோ சொல்லியிருக்கணும். ...

அவன்ர பிரிவு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. சகிக்க முடியல. வெளிப்படையாக அழக் கூட முடியல. அழுதா அப்பா அடிப்பாருன்னு பயம். மௌனமா மனசுக்குள்ள போராடி காலத்தின் போக்குல அந்த துயரத்தில இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். அதுக்குப் பிறகு அவனச் சந்தித்த போது, ஏதோ என் கூட பேச பின்னால விரட்டிக் கொண்டு ஸ்கூல் கேட் வரை வருவான். பட்...நான் அப்பாக்கு பயந்து அவன நிமிர்ந்து கூட பார்க்கல. ஒருநாள் அவன நான் புறக்கணிச்சதால எங்க ஊர விட்டே பொயிட்டான். இந்த செய்தியை அவன் தன் தம்பி மூலமாக எனக்கு சொல்லியனுப்பினான். இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு என்ன நடந்துச்சு என்று எனக்குத் தெரியல..........பட் எப்போதாவது அவன் என் ஞாபகத்தில எட்டிப்பார்த்து விட்டுப் போவான்................

(சேரனுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் எத்தனையோ ஆட்டோ கிராப்கள்)

இது சத்தியமா கற்பனைதான்!