உயிர் தந்தாய் உறவுகள் பிணைந்து.........
உன் ஆத்மாவே என்னுள்ளிறங்கி
கருவாகின்றது நம் குழந்தையாய்!
---------------------------------------------------------------------------------------
உடலின் மேலாடை அழகு
உணர்வின் நீரோடை அன்பு
தவிப்புக்களும் ஏக்கங்களும் நிறைந்த வாழ்வில்
இயற்கை தரும் அழகோ அலாதியானது!
---------------------------------------------------------------------------------------
காமம்............
வாழ்வழகை சிதைக்கும் அகோரம்!
கலை வளர்க்கும் மனிதன் கூட
காமத்தின்மீதுள்ள காதலை.......
சிதைக்கின்றான் உளி முனையில் பதித்து!
இன்றைய உலகின் ஒழுக்கச் சிதைவுக்கு, ஆரோக்கியமற்ற இவ்வாறான சிந்தனைகளே காரணமாய் அமைந்து விடுகின்றது.!
-----------------------------------------------------------------------------------------
துயரமெல்லாம் களைந்து நாம்
துள்ளிப் பள்ளி சென்று
தொட்டு நின்ற வசந்த நாட்களில்..........
நீ பக்கம் வரும் போதெல்லாம்
வெட்கம் தொலைத்து.............
என் மார்போரம் சாய்ந்து எனைத் தாங்கும்
அந்தப் பாசம் இனி வருமோடா.......
--------------------------------------------------------------------------------------
ஏன் வாழ்கின்றோம்..........
எதற்கு வாழ்கின்றோம்..........
எப்படி வாழ்கின்றோம்.........
எங்கே வாழ்கின்றோம்.......
பல கேள்விகளுக்கான விடைகளை நமக்குள் நாம் சேகரிக்கும்போது வாழ்வும் வசந்தத்தின் கூவல்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றது.
"வாழ்க்கை வாழ்வதற்கே"
-------------------------------------------------------------------------------------------
தோல்வி என்பது நாம் விரும்பாததொன்று. எனினும் தோல்வி நம்மைத் தொடலாம் எனும் எதிர்வு கூறலிலும் கூட , ஏதோ தன்னம்பிக்கை கொண்டு வெற்றிக்காக முயற்சிக்கின்றேமே, அந்த முயற்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்........
-------------------------------------------------------------------------------------------
நிலவின் மோகனத்தில்
மோகத்தை பிழியும்.......
கவியாய் "காதல்"
------------------------------------------------------------------------------------------
வாழ்க்கைப் பந்தயத்தில்
எழுதிச் செல்லும் தீர்ப்புக்களாய்........
பரவிக் கொண்டிருக்கின்றன - உன்
நினைவுகள்!
---------------------------------------------------------------------------------------
தழுவுகின்றன என்னை நீயாகி.......
கனவுகள் பேசுகின்ற சாரளங்களாய்
சாகாவரம் பெற்றவை
உன்னுடனான "காதல்"
----------------------------------------------------------------------------------------
நாம் ஆராயாமல் அவசரமாய் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளின் இறுதிப் பக்கத்திலும் எஞ்சி நிற்பவை இழப்புக்களும், சோகங்களுமே!
----------------------------------------------------------------------------------------
வாய்ப்பு தானாக வருவதில்லை...
நாமாய் உருவாக்க வேண்டும்!
வாய்ப்பை வாழ்வில் நங்கூரமிடுங்கள்
வெற்றிகள் கரமசைக்கும்
மனமோ..........
மகிழ்வில் சிறகடிக்கும்!
------------------------------------------------------------------------------------------
நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!
வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
------------------------------------------------------------------------------------
நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!
வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
---------------------------------------------------------------------------------------
போராட்டங்களும் போட்டிகளும் - நம்
பிறப்பைக் கூட விட்டு வைக்கவில்லை!
ஒவ்வொரு சரிதத்தையும் புரட்டிப் பார்த்தால்
முயற்சியாளனே............
சாதனையாளனாய் உரத்து சத்தமிடுகின்றான்.....
வாழ்வில் வெற்றிகளைக் குவித்தவாறு!
----------------------------------------------------------------------------------------
காலம் பொன்னானது...............
நாம் அதனை வீணாய் கரைத்து விட்டு
இழப்புக்களால் எம்மை நிரப்பிக் கொண்டிருக்கின்றோம்!
------------------------------------------------------------------------------------
தனிமையை விடக் கொடுமையானது........
அன்பான நட்பின்றி இருத்தலேயாகும்!
-------------------------------------------------------------------------------------------
உண்மையான காதல் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.
காலவோட்டத்தின் எதிர்ப்பலைகளில்
வெற்றிக் கரம் நீட்டுகின்றது...............
மகிழ்ச்சிப் பூக்களைத் தூவியவாறு!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!