About Me

2013/05/21

பொய்த்துப் போன வாழ்க்கை



வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........

அவள்.......

இளந்தாய்......

மூன்று பிள்ளைகளின் தாய்......

இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........

பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........

தற்கொலை!

தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து  இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......

இனி தனது நேரம்..............

தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............

கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!

அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!

3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?

அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!

2013/05/20

தடையில்லையினி


யாரறுத்தார் நம் சிறகுகளை
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!

இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!

உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம்
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!

நேற்று
கற்றுத் தந்தேன் காதலை
இன்று நீயோ
இன்னொருத்தியின் உணர்வாய்!

உன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!

விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!

அன்பும் பொய்த்தது
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!

- Jancy Caffoor-
      20.05.2013

தாயே



தாயே..........!
உங்களுக்கு சூரியன் கீழிறங்கி
குடை பிடிக்கும்!

சந்திரன் சத்தமிட்டு வாழ்த்துமுங்களை
உங்கள் வார்த்தையில் ஒட்டிக் கிடக்கும்
தன் குளிர்மையை ஏந்திக் கிடப்பதற்காய்!

மலர்கள் சரம் தொடுத்து
கரமசைக்கும் உங்களைக் கண்டு!
தம் மேனி மென்மையை
உங்கள் மனதினில் கொஞ்சம் ரசித்து!

தாயே!
தலை சாய்கின்றேன் நாணலாய்
என்றும் உங்கள் அன்புக்கு!

- Jancy Caffoor-
      20.05.2013

2013/05/15

வர்ணம்



உன் அன்பு எப்பொழுதும் என் மனசோரம்.....
அதுவோ எந்நாளும் எனக்குக் கிடைத்த வரம்!
------------------------------------------------------------ 



நம்மை அறிபவன் நல்ல நண்பன்.....
நம்மை வழி நடத்துபவன் சிறந்த நண்பன்!
------------------------------------------------------- 


நம்மைச் சூழவுள்ளோரின் குணத்தை மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவர் குணத்தை அவரது பிறப்பும், சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளோரில் நல்ல நண்பர்களை மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு என்பது நம் மனதைச் சார்ந்தது.

---------------------------------------------------------- 


புன்னகை ஒன்றே போதும்.......
அன்பை அழகாக வெளிப்படுத்தி விடும்!
அன்பினை ஆழ்வோர் எந்நாளும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர் அழகான உதயத்தை தம் வாழ்வில்!
----------------------------------------------------------------- 



வீழ்த்தப்படும்போது தோற்றுத்தான் போகின்றேன்...
மீள எழும்பும்போது ............
வலியுடன் வெற்றிக்கான வழியும் என் பாதையாய்!
-------------------------------------------------------- 



அக்கினிக்குள் வெந்து போகலாம் உடல்
அவனி விட்டு கருகிடுமோ உணர்வுகள்!
சாம்பர் மேட்டில் விதைக்கப்படும் உயிர்கள்
சரித்திரத்தின் கதையாகி சாகாவரம் பெற்றவை!
-------------------------------------------------- 


கொட்டிக் கிடக்கும் பனித்துளிக்குள்
பத்திரமாய் நீ!
உலராத உன் நினைவுகள் - எனக்கென்றும்
ஈரலிப்பே!
------------------------------------------------------ 


விண் பிளந்து மண் தொடும் வேர்கள்
----------------------------------------------------------- 



சில மௌனங்கள்
மூச்சுக்காற்றை சுருக்கிடும் கயிறுகள்!

புரிதலும் பிரிதலும்
அன்பின் யாசகங்கள் ஆனதில்.........
கண்ணீருறிஞ்சும் கைக்குட்டையாய் நீ
------------------------------------------------------- 


நம் விழிகள் நான்கும் சந்திக்கையில்
உதடுகள் உச்சரிக்கும் கவிதை "முத்தம்"

சத்தங்கள் சந்தமாகும் போது
மனங்களில் மகிழ்வூறி.........

இசையொன்று ஓசையெழுப்பும் அன்பை
ஆழ் நினைவுக்குள்  நகர்த்தி!


- Ms. Jancy Caffoor -

2013/05/07

மருதம்


மனைவி. -ஏங்க பேயடிச்ச மாதிரி பேப்பர உதறி கீழே போடப் பார்க்கிறீங்க ..
கணவன் - அடீயே.........பேப்பர்ல இருக்கிற நியூஸ் சுடுதப்பா
------------------------------------------------------------ 


நாம் பணத்தை வீணாகச் செலவளிக்கும் போதுதான்
அப்பணத்தை உழைப்பதற்காக தொழிலாளி சிந்தும் வியர்வைத்துளிகளெல்லாம்  .........
நம் கண்ணீர்த்துளிகளாக மாற்றப்படுகின்றது!
----------------------------------------------------------- 


நம் எல்லோருக்குள்ளும் குழந்தை மனசும் அன்பும் மென்மையும் உண்டு. அதனைக் குழப்புவதுதான் நமக்குள் முகங் காட்டும்
பகைமை............!

பகைமையானது............
முரண்படும் உள்ளங்களுக்கிடையில் போடப்படும்
முள்வேலி!

மனித முகங்கள் யாவும் ஒரே அடிப்படையில் படைக்கப்பட்டிருக்கும் போது, உணர்வுகளில் மட்டும் பன்னிறங்கள்!!

இன்று தொழிலாளர்கள் உணர்வுகள் மதிக்கப்பட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட நாள், நாமும் கடந்து போன கசப்புக்களை மறந்து புது உதயங்களுக்குள் நம்மை இணைப்போமாக!

சொற்ப கால வாழ்வெல்லைக்குள்
எதற்கு பேதங்களும் பகைமைகளும்!!
ஒற்றுமையே பலம்
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பீர்!!

----------------------------------------------------------- 

பஞ்சணை மேனியும்
கொஞ்சல் பார்வையும்
மிஞ்சிவிடும் அழகும் - ஆஹா என்
நெஞ்சத்தை கொள்ளை கொள்ளுதே!
------------------------------------------------------------ 


வாகனமோட்டுவதென்பது ஓர் கலை!
முறையான பயிற்சியும் கவனமும் இல்லாமல் செயற்படுவோர் தம் வாழ்வு முழுதும் வருந்த வேண்டியிருக்கும்!

நிதானமாக வாகனமோட்டுவீர்............
இல்லாவிடில் ....
தானமாகும் உயிர் மரணத்திற்கே!
--------------------------------------------------------- 


தான் இரையாவது புரியாமல்
தனக்கே இரை தேடும் ஐந்தறிவுகள்!
----------------------------------------------------------- 


இழப்புக்கள் கண்டு வருந்தும் உள்ளங்கள் - நம்
வாழ்வைப் பின்தொடரும் அழகான உறவுகள்!
-------------------------------------------------------------- 


மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!

நம் மனசுக்குள்ள சிறகிருக்கு
கண்ணுக்குள்ள அன்பு இருக்கு
தொட்டுக் கொள்ள நினைவிருக்கு
சின்ன மாமோய்...!

நீ பக்கம் வந்தால் வெட்கம் வரும்
தங்க நிறம் கன்னம் தொடும்
தரணியெல்லாம் மயங்கி நிற்கும்
சின்ன மாமோய்!

மாமோய்......மாமோய்......மாமோய்.......
ஆமா ஆமா ஆமா!!
------------------------------------------------------------- 


எதிர்பார்ப்புக்கள் எப்பொழுது நட்புக்குள் முகங் காட்டுகின்றதோ
அப்போதே ஏற்றத்தாழ்வுகளும் மனங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

-------------------------------------------------------------- 

எழுகின்றது நம்பிக்கை
பேரொளியாய்...............
உதிர்ந்தாலும் மீளப் பிறப்பெடுக்கும்
பசுந்தளிராய் நான்....



- Ms. Jancy Caffoor _