About Me

2020/11/04

கடைப் பார்வை

1. கடை – விடை -- நடை – மடை 

********************************* 
வீழ்ந்தேன் உன்றன் கடைப் பார்வையினில்/
விடை சொல்லாயோ துளிர்க்கின்ற காதலுக்கே/
நடை சிந்தும் நளினம் கண்டே/
மடை வெள்ளமாக இன்பம் ஊற்றுதடி/

ஜன்ஸி கபூர் - 04.11.2020

 


2020/11/03

வசப்படாத வரிகள்


1.அகவை

*************
எண்ணும் எண்களால்                               
........எண்ணங்கள் புரிந்திடுமோ/
வண்ணமாக மின்னிடும்                              
 .......வாழ்வியல் மாற்றங்களை/
புறத்தோற்றங்களால்  காட்டும் கண்ணாடி/

                                                                                                                         02.11.2020
------------------------------------------- 
2.வசப்படாத வரிகள்

 *********************** 
காற்றில் வசப்படா வரிகள்/
என்னுள் சுவாசமாக/
நீயோ உயிர்க்கின்றாய் தினம்/
என்னிலிருந்தே  காதலாக/

                                                                                                                       - 3.11.2020

-------------------------------------------- 

3. அன்பெனும் சோலையில்

அன்பெனும் சோலைக்குள் உயிர்க்கின்ற உறவுகள்/

சிந்துகின்ற நினைவுகள் மணிமகுடங்களே நமக்கு/

சூடிடுவோம் அழகாக/

 

                                                                                                     ஜன்ஸி கபூர் - 9.11.2020

 



வாழ்க்கை எனும் வரம்




1. வாழ்க்கை எனும் வரம்

**************************** 
இறப்பும் பிறப்புமென்ற 
.......இறைவனின் நியதியில்/
இயற்கையின் வசத்தில் 
......இரம்மியப் பொழுதுகள்/

இரசிக்கின்ற தரிசனங்கள் 
......இழையும் நினைவுகளில்/
இளமையின் வனப்பு 
......இன்பத்தின் உயிர்ப்பே/

இசைந்திடும் வாழ்வில் 
......இன்னல்களை நீக்க/
இணைகின்ற உறவும் 
......இன்பமே மனதிற்கே/

இலக்கதை வகுத்தே 
......இயங்கிடும் ஆற்றலால்/
இனித்திடுமே வருங்காலமும் 
.......இவ்வுலகத் தடத்தினில்/

பருவங்கள் விரிகையில் 
......பரவசம் உணர்வுகளிற்கே/
படர்கின்ற கனவுகள் 
......பற்றுமே வெற்றியை/

பகுத்தறிவுச் சிந்தனையால் 
.....பாரதும் புகழ/
பண்புகளால் செழித்திடுவோம் 
......பக்குவமாக வளர்ந்திடுவோம்/ 

ஆறாம் விரலாய் 
.....அறிவினைப் பொருத்தி/
அகத்தினில் அன்பினை 
.....அழகால் நிறைத்து/

அன்பான உறவுகளால் 
.....ஆனந்தமும் பெற்று/
அருமையாக வாழ்கின்ற 
......வாழ்க்கையும் வரமே/

ஜன்ஸி கபூர் - 3.11.2020


 


பூஞ்சோலை


செவ்விதழ் விரித்தே 

.......செதுக்கும் குரலினில்/

சொக்கித்தான் போனேனே 

......என்றன் சோலைக்கிளியே/


பக்கத்தில் உனையிருத்தி 

........வாழ்கின்ற வாழ்வினில்/

தினமும் காதல் 

........வாசம் வீசுதே/


ஜன்ஸி கபூர் - 7.11.2020

------------------------------
இணைக்கின்றேன் அன்பே உன்னை வாழ்வில்
இதயத்தில் மகிழ்வேற்றி உலாவுகின்றேன் நிதம்
இன்னலும் தடைகளும் புயலென மோதுகையில்
வலிக்குள் மூழ்காமல் காக்கின்றாய் என்னையே

ஜன்ஸி கபூர் - 13.11.2020
-------------------------------------------------------------- 

5.  நினைவெல்லாம் நீயே
************************** 
காலம் ஓடிக்கொண்டேதான் இன்னும் இருக்கின்றது/
ஆனால் நீயோ என்னிலிருந்து தொலைவாகின்றாய்/

தினமும் உன்னை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்/
விரல்களால் என் கண்களைக் குத்துகின்றாய்/

வலிதான என் வலி புரிந்துமா/ 
மௌன முடிச்சுக்குள் ஒளிந்து கொள்கின்றாய்/

தவிப்புக்கள் நீள்கின்றன உனை நோக்கியதாக/
நீயோ தரிசனப் பாதைகளை மறைக்கின்றாய்/

என் கண்ணீரும் தீண்டாமல் காக்கின்றேன்/
விழிக்குள் விம்பமாக மலர்ந்திருக்கின்ற உன்னை/

இருந்தும் காத்திருக்கின்றேன் நீ வருவாயென/
உனதான நினைவுகளைப் பத்திரமாகச் சேமித்தபடி/

ஜன்ஸி கபூர் - 14.11.2020
-------------------------------------------------------- 
6. பண்பாட்டு வாழ்க்கை
***********************
பண்போடு வாழ்ந்திடும் வாழ்வில் என்றுமே/
இன்பமே பெருகும் மனமது மகிழும்/
உறவும் ஊரும் இணைந்தே வாழ்த்தும்/
வரலாறும் நம்மை இணைத்தே பேசும்/

ஜன்ஸி கபூர் - 16.11.2020
-------------------------------------------------------- 




நம்பிக்கை வாழ்வு
-------------------------
நம்பிக்கை கொள்வோர் வாழ்வில் தோற்கார்/
தெம்புடனே ஏற்பார் வாழ்வியல் போராட்டங்களை/
துன்பமும் தடைகளும் தகர்த்தே வெல்வார்/
அன்பும் அறமும் கொண்டே வாழ்ந்திடுவார்/
ஜன்ஸி கபூர்
----------------------------------------------------------------------------------


Azka Sathath
வாழ்ந்திடுவார் என்றுமே சுக வாழ்வினை//
செய்திடுவார் நற் செயல்கள் பல//
வென்றிடுவார் இலக்கு வழிப் பயணங்களை//
கண்டிடுவார் தினம் அன்பான உறவுகளை//
அஸ்கா சதாத்
--------------------------------------------------------------------------------------------------------