About Me

2021/04/24

இயலாமை

இயலாமை என்பது தோற்றுப் போகின்ற வாழ்விற்கான அடையாளம்தான். நம்மிடையே காணப்படுகின்ற பலகீனங்களை கண்டறிந்து, அவற்றை பலமாக்க முயற்சி செய்யாதவரை இயலாமையும் நம்மை மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும். 

இயலும் எனும் மந்திரச் சொல்லால் போராட்ட வாழ்வில்கூட, மகிழ்வின் வாசம் வீசிக் கொண்டேயிருக்கும். நமது பாதையில் குறுக்காகிக் காணப்படுகின்ற தடைகளைப் பார்த்து  தயங்கி நிற்கின்ற இயலாமையை கசக்கி வீசியெறிந்து விட்டு தடைகளைத் தகர்க்கின்ற வழிகளைக் கண்டறிதல் வெற்றியின் பக்கத்தில் நம்மை நிறுத்தும்.

ஜன்ஸி கபூர் - 24.04.2021


பொறாமை

 


பொறாமை எண்ணம்//

பெருமையைக் கொல்லும்//

சிறுமையும் தந்தே//

நம்மையே வருத்தும்//


ஜன்ஸி கபூர் - 24.04.2021


2021/04/23

துரத்தும் கொரோனா

மிரட்டுது வாழ்வை

நாட்டில் மீண்டும் கொரோனா அலை

கைகளை கழுவுங்கள்

முகக் கவசம் அணியுங்கள்

சமூக இடைவெளி பேணுங்கள்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

என எவ்வளவுதான் அறிவுரைகள் தரப்பட்டாலும்,  சிலர் இவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. இவர்களிடத்தில் கொரோனாவே வந்து பயம் காட்டினாலும்கூட, இவர்கள் தமது பிடிமானத்திலிருந்து அசைவதாக இல்லை. மனதால் மானசீகமாக உணராமல் சட்டத்திற்குப் பயந்து பின்பற்றுகின்ற எதுவும் ஆரோக்கியம் தரப்போவதில்லை.

New health guidelines to be followed till 31st May issued (English) 

April 23, 2021 at 6:26 PM

எனும் தொகுப்பிலிருந்து சுருக்கமான தகவல்கள் எனது பார்வையில் இதோ-

  • வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் இருவர் மாத்திரம் வெளியே செல்லலாம்
  • ஆசனங்களுக்கேற்ற இருக்கை – பேருந்து , புகையிரதம்
  • கார் , முச்சக்கர வண்டி - இருவர்
  • நீர்,  மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள்
  • அலுவலகம் - குறைந்தளவு ,அவசியமான ஊழியர்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு
  • கூட்டங்கள் - இருக்கைகளின் அரைவாசிப் பேர்
  • சுப்பர் மார்க்கட், வர்த்தக நிலையங்கள், சலூன், வங்கிகள்,நீதிமன்றம் பாடசாலைகள், முன்பள்ளிகள் 50%  மானோருக்கு அனுமதி
  • நிர்மாணப் பணிப் பகுதிகள்  - அனுமதிக்கப்பட்டுள்ளது
  • பல்கலைக்கழகங்கள் - மூடப்பட்டுள்ளன.
  • தனியார் கல்வி நிறுவனங்கள் - அனுமதியில்லை
  • திருமணம் - 150 பேருக்குள் அழைப்பு
  • மரணச்சடங்கு – 25 பேர் அனுமதி
  • பார்டி – அனுமதியில்லை
  • சினிமா – 25 %
  • இசைக்கச்சேரி, சிறுவர் பூங்கா – அனுமதியில்லை
  • நீச்சல் தடாகம் - மூடப்பட வேண்டும்
  • இரவு விடுதி - மூடப்படல் வேண்டும்
  • உணவு விடுதிகள் - 50 வீதம்

அனைத்திலும் சுகாதார நடைமுறைகள்   கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரோக்கிய வாழ்வினை நாமும் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் வழங்குவோமாக

ஜன்ஸி கபூர்


இரவின் மடியினில்

 இதமான பாடல்கள்

அமைதியால் அழகு பெறுகின்ற ஒவ்வொரு இரவினையும் உரசிச் செல்கின்ற வானொலி இசையை செவிகள் உள்வாங்கும்நேரம் இரசிப்பின் உச்சத்துக்குள் மனம் நுழைந்து விடுகின்றது.

நிசப்தத்திற்குள் மலர்கின்ற அந்தத் தென்றல் இசையோசையில் விழிகள் உறக்கத்திற்குள் தாவுவதும் நமக்குத் தெரிவதில்லைதான்.

அழகான மென் இசைகள் நம்மைத் தாலாட்டும் நேரம் இரவும் மடியாகி நம்மைத் தாங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 23.04.2021