மனசு
பொழுதின் புலர்வினில்
இருள் துடைக்கும் சூரியனாய் நீ!

தனி வழிப்பயணத்தில் - என்
கரந்தொடுக்கும் வழித்துணையாய் நீ!

படிக்க அமர்கையில் - வந்தமரும்
மனப்பாட வரிகளாய் நீ !

என் கைபேசி அழைப்பினில்
ஒலிக்கும் குரலாய் நீ !

கண்ணாடி முன்னின்றால்
கண்ணடிக்கும் விம்பமாய் நீ!

இப்போதெல்லாம் நான்
உன் விதி வழி நகர்வில் தான்!

இத்தனைக்கும் நீ.........
என் மனசு !
2 comments:

  1. மனசை மிக லாவன்யமாக சொல்லியிருக்கிறீங்க.
    முடிவே தலைப்பை விழிக்க வைக்கின்றது.

    ReplyDelete
  2. நன்றி ரவீந்திரன் sir

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை