ஒளித் தூரிகைநீ சொன்னால்..........
பொய்களும் மெய் போலாகும்
நீ என்னவனென்பதால்!


================================================================


அங்கே.............
குடைக்குள் கோடை கழிக்கும்
காளானாய் நீ!

இங்கே.........
மாரிக்குள் ஒப்பாரி வைக்கும்
கிணற்றுத் தவளையாய் நான்!

நம் உணர்வுகள்
மையப் புள்ளியில் சந்திக்க...........
பார்த்தாயா...............
நம் தேசங்கள் நம்மை
வெவ்வேறு துருவங்களாய் மாற்றுகின்றன!

================================================================
"நம்மட சூரியன் பயணிக்கிற பாதையில 12 ராசி இருக்கு, அதில முதலாவது ராசியாக மேடமும் ,  12வது ராசியாக மீனமும் இருக்கு. சூரியன் மீன ராசியில இருந்து மேட ராசிக்கு பயணிக்கிற அந்த நிகழ்வத்தான் புதுவருஷமென்று சொல்லுறம்"

நான் என் வகுப்பு மாணவர்களுக்கு புதுவருடப்பிறப்பினை விஞ்ஞான ரீதியில் விளக்கிக் கொண்டிருக்க, தம் அயல் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியவாறு மாணவர்கள் திருப்தியுடன் தலையாட்டுகின்றனர்...

இதுல உங்களுக்கு ஏதாவது புரியுதா..

புரியலைன்னா பரவாயில்லை..............

நாளை சித்திர வருடப்பிறப்பைக் கொண்டாடும் என் நேசங்களுக்கு முன்கூட்டிய புதுவருட வாழ்த்துக்கள்
===============================================================


நமது வார்த்தைகள் எப்பொழுது பிறர் முன்னிலையில் பெறுமதி இழக்கின்றதோ, அத் தருணமே .....மௌனம் நம் பெறுமதியைக் காக்கும் கேடயமாக மாறி விடுகின்றது!

========================================================================என் கனவுக்கூடுகளில் உன்னை நிரப்பி
போகின்றேன் என் தேசம் தோறும்!
வா.........
வசந்தத்தின் இருக்கைகள் கூட
நாமாகட்டும் !

மயிலிறாகால் வருடும் என்
ரஞ்சிதப் பொழுதுகளெல்லாம் - உன்
அன்பின் விடியலில் மட்டும்
முகம் பார்த்துக் கொள்ளட்டும்!

வா............................
நம்................
தேசத்தில் நாம் மட்டுமே
ஆளுபவர்களாய்!
===========================================================அன்பின் துளிகள் சிந்தும் ஒவ்வொரு இடங்களிலும்
அன்னையே......................
நீயே உன் முகங்காட்டுகின்றாய்!

=============================================================மழை வருது மழை வருது குடை கொண்டு வா.......
இப்படித்தான் இப்ப எங்க ஊரும் பாடிக் கொண்டிருக்கின்றது...மழை வந்தால் நல்லதுதான். ஆனால் இன்னொரு பிரச்சினை இருக்கே!

அது மின்னல்..........

நேற்று ராத்திரி அக்கம் பக்கம் கேட்ட மத்தாப்புக்கள விட, இந்த மின்னலும், இடியும் அட்டகாசமாக கொட்ட ஆரம்பிச்ச நேரம்,

(எங்கேயோ பக்கத்தில விழுந்திருக்கணும்..டியூப் லைட்ட யாரோ உடைக்கிற மாதிரி சத்தமும், வெளிச்சமும்)

எனக்கு வந்த நினைவுதான் இந்தப் பதிவு.....

அருகே கந்தக வாசம் அதாவது தீக்குச்சி எரிக்கிற போது வருகிற வாசம் வந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க.....ஏனென்றால் எங்கேயோ இடி விழப்போகுதுன்னு அர்த்தம்!

சிலர் கோபத்தில தலைல இடி விழட்டும் என்று சொல்வீங்கதானே..........இனி அப்படி சொல்லாதீங்க!
ஏனென்றால் எதிரி கூட கருகிச் சாக வேண்டாமே!


==================================================================உடன்பாடுகளும் , முரண்பாடுகளும் நம் மன எண்ணங்களிலிருந்தே வேர் விடுகின்றன....
வேற்றுமையிலும் ஒற்றுமை காணப் பழகி விட்டால்
நிம்மதியின் நிதர்சனத்தில்  நம் வாழ்வும் இளைப்பாறும்!

===============================================================

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை