About Me

2012/09/17

அன்பூ உனக்காய் !


வந்து வந்து போகின்றன
இரவுகளும்..........!
விழிகள் உறிஞ்சிய கனவுகள் மட்டுமின்னும்........
விழித்திரை கிழித்து
நிஜங்களாய் தரிசிக்கவேயில்லை!

நீயோ வுன்
மௌனக் கிறக்கத்தில்............
மயங்கிக் கிடக்கின்றாயென்னை
மறந்தும் சுகமுமாய்!

நீ கிறுக்கிப் போன எழுத்துக்களை
கோர்க்கின்றேன்................உன்
இம்சை யினாக்கிரமிப்பில் அவையும்
திணறிக் கொண்டுதானிருக்கின்றன!

பாறைச் சிதறல்களா லுன் மனம் பூட்டி
மிரட்டினாயன்று..........!
புரிந்ததின்று
நீயும் மெழுகுத்துண்டென்று!

இருந்தும்...............
அடுத்தவருக்காய் .........
எனைக் கிழித்தெறிவதில்
சளைக்காத சாகஸக்காரி நீ!

என் மன விசாரிப்புக்களில்
அடிக்கடி
எட்டிப்பார்க்குமுன்னை.......
கன்னம் வைத்தேன் சிறைப்பிடிக்க
நழுவியோடுகின்றாய் - உன்
கண்ணீர்ப்படைத் துணையுடன்!

நீயென் சொந்தமென
உணர்வுகளில் ஒப்பந்தமிட்டு - ஒவ்வொரு
கணப்பொழுதும் காத்திருக்கின்றேன்.........
உன் நேசம் கலந்தவென்
உயிரை மீட்டு காதல் நெய்ய!

வெட்டவெளியில் வெட்கித்துக் கிடந்த
காற்றலையில்- நீ
கலந்த சுவாசத்தின் வாசத்தில்
மோகித்துக் கிடக்கின்றதே - என்
மூச்சுக்காற்றும் உன்னை நினைந்து!

நீ நடந்து போன சுவடுகளை
சுரண்டியெடுத்தேன் ரகஸியமாய்.........
முத்தம் பதித்த ரோசாக்களின் எச்சங்கள்
சத்தமின்றியென்னை ஏளனம் செய்தே
மிரட்டுகின்றன!

உன்...............
வார்த்தை கேட்டு வரட்சி விரட்டி
பாலைவனங்கள் ஈரமாகிக் கசிகையில் ...
பாதகம் செய்கின்றாயே எனக்கு மட்டுமுன்
புன்னகையை மறைத்தே!

என் தொடுவிரலின் சிறைப்படுத்தலில் - உன்
அடர்கேஷம் பிடித்திழுத்து
சில்மிஷம் பண்ண நினைக்கையில் - உன்
நாணப்பூக்களின்
அக்கினிவேட்டைக்குள்ளென்னை வீழ்த்தி
இம்சிக்கின்றாயே பாதகியாய்!

இருந்தும்...........
பசுமை நிரப்பியுன் விழி கடைந்து
தினம் தினம் காதல் கோர்த்தே...........
கிறங்கச் செய்யுமுன் பார்வைக்காய்
காத்திருக்கின்றனவென் நிழற்பொழுதுகள்
ஏக்கத்துடன்!

உதிர்ந்துருகும் சருகுகளில்
உருண்டு பிரளும் காதலின்றி.............
இதயத்திலன்பு நிறைப்பாய்
காயமில்லாமல்!
காத்திருப்பேனுனக்காய்!

என்றோவொரு நாள் ......!
உன்னைச் சுற்றித் திரியும் - என்
நினைவலைகளைச் சுருட்டி......நீ
புனைந்திடுவாய் கவிதையொன்று  - அதுவே
எனக்கான வுன் நினைவஞ்சலி!

2012/09/15

வண்ணத்துப்பூச்சி


 

குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு...........

தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும், பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள்...அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர். அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்!

குழந்தை மனம் வெண்களி போன்றது. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்  அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தி யின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும். குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்

  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 

காரணமாக இருக்கின்றோம்

குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும். பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

- Ms. Jancy Caffoor -


குழந்தை



குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு. தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும் , பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள். அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர்...அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்..........!

குழந்தை மனம் வெண்களி போன்றது.. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்....அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தியின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப்பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து.. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும் குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்
  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 
காரணமாக இருக்கின்றோம்
குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும் பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

Ms. Jancy Caffoor -


2012/09/14

காதலும் உறுதிமொழிகளும்


காதல்......... !

விழிகளின் சந்திப்பில் உருவாகும் அழகான மொழி! 
ஆனால் இப்பொழுதெல்லாம் அக்காதல் மலிவான உணர்வாகிவிட்டதால், யதார்த்த வெளிகளில் துணிச்சலுடனும், நம்பகரத்துடனும் நீடிக்கும் தன்மை மறைந்து விடுகின்றது.

"நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்.
காதலியுங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வீர்கள்"

ஆனால் நமக்குள் பரவசம் தந்து, இருதயத்தைப் போஷிக்கும் இக்காதலின் ஜீவன் இன்னும் உயிர்வாழ்கின்றதா என்றால், அது நூற்றில் பத்துவீதமாகவே இருக்கின்றது.

"கண்டதும், தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசியதும், கட்டியணைத்து முத்தமிட்டதும், காதல் முகிழ்க்குமா! மனசின் அன்பின் தழுவலும், ஊடலும், சிலிர்ப்புமல்லவா காதலின் நாகரீகம்! இக் காதல்தானே திருமணத்தின் நிழல் தேடி தன்னைப் பொறுத்திக் கொள்ளும்.

இப்பொழுதெல்லாம் வாலிபங்கள் தம் நேரங்கடத்தலுக்கென ஓர் ஜோடியைத் தேடி, தமது திருமண நாட்கள் வரும் வரை காலம் கழிப்பதே காதலின் சிறப்பாகிக் கிடக்கின்றது. அவர்களின் எண்ணங்களைப் போஷிக்கும் ஊடகங்களாக தொலைபேசிகள் முதலிடம் வகிக்கின்றன. எஸ். எம். எஸ் கள் மூலமாகவே பெரும்பாலான காதல் தூதுக்கள் உரப்பேற்றப்படுகின்றன. ஆனால் எத்தனை காதல் நிஜக்காதலாய் யதார்த்தத்தில் பதியப்படுகின்றன.

இப்பொழுதெல்லாம் காதலின் அரிச்சுவடி (பெரும்பாலும்) முத்தத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. இவ்வுஷ்ணமூட்டலினால் தன்னை மொத்தமாக இழக்கும் பரிதாபமான நிலை பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுகின்றது. ஏனெனில் பெண் சுமக்கும் களங்கம், அவள் கல்லறையிலும் நிரந்தரப் பதிவாகி, விமர்சனமாகி கிடக்கும்! பெண் தன்னையிழந்தால் அவள் பாவத்தின் அடையாளமாகி நிற்பாள்..இயற்கையின் எச்சரிக்கையிது! இறைவன் செதுக்கிய உடற்கூறின் ரகஸியமிது.

ஆண்கள் காதல் தூதிட்டதும், தன்னை மறந்தவர்களாக பெண்கள், அவர்களைச் சந்திப்பதும், அலைபேசியில் கொஞ்சிக் குலாவுவதும், ஜோடியாக அரவணைத்துத் திரிவதும், பார்க், பீர்ச் எல்லாம் தம்மை நிரப்புவதும், ஈற்றில் மொத்தமாக தம்மையிழப்பதும் காதலின் பல அத்தியாயங்களாக இவ்யுகத்தில் முகங்காட்டி நிற்கின்றன.

காதல் போயின் சாதல்...........!

இது அந்தக்கால காதலின் துடிப்பான நிலைமை! ஆனாலின்றோ,
ஒரு காதலி இருக்கும் போதே, வேறு பலருக்கும் தூதுவிடும் காதலர்களே பெரும்பாலுமுண்டு (ஒரு சில பெண்களுமுண்டு. மறுக்கவில்லை)

இவ் வானவில் காதலில் ஆண்களால் பெரும்பாலும் பரிமாறப்படும் சில ஆயுள் குறைந்த வாக்குறுதிகள் இவற்றைக் கருதலாம்-

  • நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்
  • ஒருபோதும் அழவே விட மாட்டேன்
  • சத்தியமாக உன்னை நம்புவேன்
  • உன்னைக் கண்ணியப்படுத்துவேன்
  • உன்னை துன்புறுத்த மாட்டேன்
  • உனக்கு ஒருநாளும் பொய் சொல்ல மாட்டேன்
  • நல்லதையே உனக்கு செய்வேன்
  • இவ்வுலகம் அழியும் வரை உன்னைப் பிரியவே மாட்டேன்
  • என் மூச்சிருக்கும் வரை உன்னை காதலிப்பேன்
ஆஹா..............
அழகான இப்பொன்மொழிகள் காதலர்களால் நியாயமாக நிறைவேற்றப்பட்டாலே,  காதலில் துயரும் பிரிவும் ஏது?

இப்பொழுதெல்லாம் I Love You எனும் வார்த்தைகளே வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கிற்காக உதிர்க்கப்படுகின்றனவே தவிர, உள்ளார்த்தமான அன்பினாலல்ல!

காதல் பொய்மை...........திருமணம் நிஜம்!

காதலர்களே!
பொய்மையான காதலை வார்ப்பதாக, செயல் காட்டி மறு மனதில் ஏமாற்றங்களை  திணிப்பதை விட, சற்று தள்ளிநில்லுங்கள் பாவத்தினராகாமல்!

காதலியுங்கள். தவறல்ல. திருமணமாகிய மனைவியை, அவள் தரும் உங்கள் வாரிசை, அவள் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை காதலியுங்கள்...அப்பொழுதே வாழ்க்கையெனும் பாடம் உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கும்!

- Jancy Caffoor-


ஏனோ இப்படி


இன்று தொழில்கூடத்தில் ஓர் பெண் ஆசிரியையால் நான் எதிர்நோக்கிய சம்பவமே  இதனை பதிவிடக் காரணமாகிக் கிடக்கின்றது....

மாணவர்களின் கற்றலடைவை பரீட்சைகள் மூலம் பரீட்சித்து, மாணவர் பெற்ற அறிவு, ஆற்றலை பெற்றோருக்குக் காட்சிப்படுத்த மாணவர் தேர்ச்சியறிக்கையை ஆசிரியர்கள் பதிவிட்டு, பெற்றோருக்கு அதனை அனுப்பி வைப்பதுண்டு.. அதற்காக நாங்கள் பரீட்சைப்புள்ளிகளைப் பதிவிட, அதற்கான படிவங்களைப் பயன்படுத்துவதுண்டு!

சென்றமாதம் முடிவுற்ற இரண்டாம் தவணைப் பரீட்சைப் புள்ளிப் படிவங்களைப் பதிவிட்டு உரிய பகுதித் தலைவரிடம் ஒப்படைத்தேன். வழமையாக நான் யாரிடமும் எந்தப் படிவமும் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையெழுத்தினைப் பெறுவதுண்டு. ஏனெனில் பல தடவைகள் நான் ஒப்படைத்தவற்றை தரவில்லையென்று முரண்பட்ட என் சக ஊழியர்கள் சிலர் தந்த அனுபவப்பாடங்களால் நான் கற்றுக் கொண்ட படிப்பினையே இது! இருந்தும் அன்றேனோ ஏதோ ஓர் அவசரத்தில் நான் ஒப்படைத்த படிவத்திற்கான கையொப்பத்தை பெற மறந்து விட்டேன்......!

அன்று கொடுத்த அந்தப்படிவத்தினை  உரிய பகுதித் தலைவரிடம் திருப்பிக் கேட்ட போது, அடித்துச் சொன்னார் தன்னிடம் தரவில்லையென்று ....நானும் சூடானேன்.....மனிதர்களுக்கு மறதி இயல்புதான் .அதிலும் வயது அதிகரித்த நிலையில் மறதி தவிர்க்கமுடியாத இயல்பொன்றே..ஆனால் அந்த ஆசிரியை
தன் மறதிக்கு நியாயம் தேடய செயலை என்னால் மன்னிக்க முடியவில்லை, என் வெறுப்பில் வீழ்ந்த அந்த மூத்தாசிரியை எனக்கு தந்த மனவழுத்தத்தில் இன்று எனது கற்பிக்கும் மனநிலையையே மாறியது. சில நியாயங்கள் அநியாயக்காரர்களால் சமாதியாகின்றன.

என்னிடம் திரட்டூக்கம் சிறுவயதிலிருந்தே அதிகமாகக் காணப்பட்டதனால் எப் பொருளையும் நான் உடனே வீசுவதில்லை. பிறகு தேவைப்படும் என சேகரித்து வைத்திருப்பேன். அத்தன்மையால், இப் புள்ளிகளின் பதிவுகளின் மூலப்பிரதி என் வசமிருந்ததால், எனக்குரிய பாடசாலைக் கடமையை தடையின்றி  பிறர் விமர்சனம் தவிர்த்துச் செய்து முடித்தேன்..

பிறரை நம்புவதால், எனக்கேற்ற துன்பத்தால் நானின்று மானசீகத் தீர்மானமெடுத்தேன்...

"இனி எப் பொருள், படிவத்தை பிறரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையொப்பத்தை கட்டாயம் பெற வேண்டும்"

மனிதர் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதி, சுயநலவாதி, தம்மை நியாயப்படுத்தவே காலத்தைப் பயன்படுத்துகின்றனர். இம் மனிதர்களின் செயல்களே அவர்களை நம்முள் அடையாளப்படுத்துகின்றன. முரண்களை வெளிப்படுத்தும்  மனிதர்களிலிருந்து, நாம் ஒதுங்கிக் கொள்ளும் போது, பிரச்சினைகளும் விலகியோடுகின்றன...

ஒருசிலரின் இவ்வாறான செயற்பாடுகளால், நண்பர்கள்.........உறவுகள் யாருமற்ற வெட்ட வெளியில் என் சிறகுகள் பயணிப்பதைப் போன்றவுணர்வு ஏற்படுகின்றது இப்போதெல்லாம்......

பிரச்சினைகள் காணப்படாத இந்தத் தனிமை ரொம்பப் பிடிக்கின்றது. இத் தனிமைக்குள் வீழ்ந்து கிடக்கும் முயற்சியில் என் பயணச்சுவடு தனக்கான தேசத்தை தேடலில் கண்டறிந்துள்ளது.

இந்தத் தனிமை தேசம் எனக்குப் போதும்......இந்தவுலகில் பிறர் இம்சைகள் களையப்பட்டுள்ளன. சோகத்தை வடிக்கும் இதமான கண்ணீரும், மனதை சிவக்க வைக்கும் துன்பங்களும் என்னுறவாக, தனிமைக்குள் நடை பயில இதோ புறப்பட்டேன்.................

நானும் பெண்தானே!