2012/12/17
கனவே கலையாதே!
இருள்ச் சலனத்தில்
விழிக்கின்றாய் கனவாய்....!
அல்லி மோகித்த நிலாவில்......
அலைகின்றாய் ஒளியாய் !
நாணத்தில் மூடிக் கிடந்தவுன்
பார்வைகள்....................
மெல்லத் துடிக்கின்றன
எனுள் படரும் வரமாய்த் தாவ..........
வெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!
சேலையவிழ்த்த மரவிடுக்கில்- உன்
விரல் நுழைத்து நீ வரையும்
நம் பெயரோ................
தரை தொடும் காற்றில் தள்ளாடிக் கிடக்க!
விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!
இருள் இன்னும் கவிழ்ந்துதான்
கிடக்கின்றது- நீயோ
விடியலுக்கஞ்சி மெல்ல விழி நழுவுகின்றாய் - என்
கனவிலிருந்து விலகி!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
Ba Singaravelu Dft
ReplyDeleteவெண்முகில்களால்
துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்மீன்கள்........
அவசரமாய் விழுகின்றன - உன்
முத்தத்துக்குள் மின்னொளி பாய்ச்ச!.......nice
Isac Jcp wow! very cute
Sanjay Thamilnila
விழி நிமிர்த்திப் பார்க்கின்றேன்- ஏக்க
மொழி சற்றுப் பிசைந்து..........
சிம்பொனியாய் நழுவுகின்றாய்
என் மூச்சுக்குள் உன்னை நிறைத்து!
nice acca