என்னதான் இணையத்தின் முற்றத்தில் உலகம் சுருங்கிக் கொண்டாலும் கூட வெளிநாட்டு அஞ்சல்களின் பயணப் பாதைகள் இன்னும் தடைப்படவில்லை.
வான் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அனுப்பப்படும் வெளிநாட்டு அஞ்சல்களில் கடிதம், அஞ்சல் அட்டைகள், வான் கடிதம், பொதிகள் மற்றும் சிறிய பைக்கற்றுக்கள் உள்ளடங்குகின்றன.
வெளிநாட்டுக் கடிதங்களின் ஆகக் கூடிய நிறை 2 கிலோ கிராம் ஆகும். இந்தக் கடிதங்களை நடுத்தர உறையைப் பயன்படுத்தி தபாலிட வேண்டும். அஞ்சல் சேவையின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய ஆகக்கூடிய நிறை 30.5 கிலோவாகும்.
வெளிநாடுகள் A,B,C,D,E,F,G,H என 8 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலய நாடுகளுக்கும் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடிதங்களை பதிவு செய்ய முடியும். அவ்வாறே காப்புறுதி அஞ்சலில் ,அஞ்சல் அலுவலக சட்டதிட்டங்களுக்குட்பட்டு வங்கி வரைவு, காசோலை, நாணயங்கள், பணத்தாள்கள், இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள், இலாபச் சீட்டுக்கள், என்பவற்றை அனுப்ப முடியும்.
- Jancy Caffoor-
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!