30.11.2014
-------------------------------------------
வாழ்க்கை எனும் சோலையில் இன்றைய தினம் வசந்தப் பூக்கள் உங்களுக்காக கரகோஷிக்கின்றன. தென்றலும் இயற்கையும் புன்னகை சிந்தி உங்கள் வளமான வாழ்விற்கான மானசீக ஈர்ப்பை பரப்பிக் கொண்டிருக்கின்றன எம்முடன் இணைந்து!.
ஆம்.........
இன்று உங்கள் பிறந்த தினம்!
உங்கள் முகமின்னும் நான் காணவில்லை. ஆனால் ஓர் தினம் நம் குரல்கள் ஒலியலையில் கலந்து கசிந்திருக்கின்றன. நமக்குள் அதிகம் பரிச்சயமில்லை. ஆனாலும் மனதில் உங்கள் மீதான அன்பின் அதிர்விருக்கின்றது.........
காலங்கள் மாறலாம்......
காட்சிகளும் மாறலாம்.....
ஆனால் மனதில் பதிக்கப்படுகின்றன அன்பும், நட்பும் நிலையானது!
உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களையெல்லாம் அல்லாஹ்வின் அருளால் திறமையுடன் வெற்றி கொண்டு, மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்....
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!