உன் அன்பு அழகிய பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!
இந்தப்பூ
தொட்டாற்சுருங்கிப் பூ
நெருங்கி வந்தேன் புரிந்தது - அது
தொட்டாற்சுருங்கிப் பூவென்று!
இந்தக் கவிதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ரசித்த என் கவிதை வரிகள் இவை....எனக்கு மிகவும் பிடித்த அன்புக்காக எழுதிய உயிர்ப்பான வரிகள்!
மலர்கள் மனங்களின் ஈர்ப்பில் உள்வாங்கப்பட்டவை. அதன் நிறமும் அழகும் நறுமணமும் நம் உணர்வின் வருடல்களில் கலந்து நம்மை அடிக்கடி வாசித்துச் செல்பவை. அந்தவகையில்
இந்தப்பூ
தொட்டாற்சுருங்கிப் பூ
இந்தப்பூவை பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் எழுதிய கவிதையும், அதற்கான சந்தர்ப்பமும் ஞாபகத்தில் நிரம்புகின்றது.
தொட்டாற்சுருங்கிப் பூவை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் வீதியோரங்கள், கவனிப்பாரற்ற இடங்களில் இப்பூக்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறுதான் எனக்குள்ளும் அந்த அன்பு அடுத்தவர் பார்வைக்கு பெறுமதியற்றுப் போனாலும், விழிகள் வாசிக்கும் உன்னுருவுடன் கசியும் என்னன்பு ரொம்ப உயர்வானது.
இப்பூ ஊதா நிறம். அழகானது. ரசிக்கத்தக்கது. அவ்வாறுதான் உன்னுடனான என்னன்பும் உணர்வுபூர்வமாக அழகானது.
இப்பூவைச் சூழ மரத்தின் முட்கள் தலைநிமிர்ந்திருக்கும். அப்படித்தான் உன்னன்பும் சினத்தின் தொடுகையுடன் இன்னுமின்னும் அன்பை கூட்டிச் செல்கின்றது.
- Jancy Caffoor-
ரோஜாவும் முள் உள்ள பூ தான் அதற்காக பறிக்காமல் விட்டு விடுவதுண்டா?
ReplyDelete