மிகச் சிறு நுண்ணங்கியின் பிடியிலின்று இந்த உலகம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. ஊரடங்கு மூலம் நோய்த் தொற்றுக்கான சந்தர்ப்பங்கள் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாடசாலைகள் பல நாட்களாக விடுமுறை. கடமைகளிலிருந்து சற்று ஓய்வு. வீடுகளே...............இப்போ .................பல நாட்களாக நம்மை உள்வாங்கி ஏந்திக் கொண்டிருக்கின்றன.
வழமையான செயல்கள் முடக்கப்பட்டதில் நம்மை நாமே கொஞ்சம் திரும்பிப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கடமையின் பொருட்டு சுழன்று கொண்டிருந்த வாழ்க்கை........ இப்போது கொஞ்சம் வீட்டு வேலைகளிலும் எட்டிப் பார்க்கின்றது.
நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இருந்தும் எல்லோர் மனங்களிலும் கொரோனா பற்றிய அச்சம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.
03.04.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!