2013/04/10
ஞாபக வேலி
கொல்லைப்புற வேலியோரம்
தலை சிதைந்து நிற்கும் பனை போல்
மனசேனோ
இன்னும் இற்றுத்தான் கிடக்கின்றது!
சுபுஹூ.!
சுகமான மன சிலிர்ப்புக்களுடன்
சுகம் விசாரித்துச் செல்லும் அதானோசைகளுடன்!
பனி உதிரும் விடியல் வெளியில்
இனிமையாய் விழுந்தெறிக்கும் திருவெம்பாவையுடன்!
குவியலாய் மலைத்திருக்கும் மலைமேட்டில்
குஷியாய் தொலைந்திருந்த குழவிப் பருவத்துடன்!
மண்சோறு ஆக்கி சாதம் வடித்து
பரிமாறி களித்த பிள்ளை உள்ளத்துடன்
இன்னும் எத்தனையோ.......எத்தனையோ
நினைவுகளின் அரண்கள் மனவறையில்!
அழகான கனவுகளை அறுத்தெறிந்த - அந்த
கணப்பொழுதுகள்
பாழாய் போன மனசினில் - இன்னும்
அடம்பிடித்துத்தான் கிடக்கின்றது!
ஆட்லெறிகள் காவு கொண்ட றோட்டோரம்
ரோஷம் தொலைத்து எமக்காய் காத்து நின்று
பதுக்கி வைத்த காலடித் தடங்கள்- இன்னும்
செதுக்கித்தான் வைக்கப்பட்டுள்ளன இரத்தக் கறைகளில்!
போர் பார்த்த எம் தேசம் - எம்மை
போக்கிடமின்றி அலைக்கழித்ததால்
நாமோ!
மயானம் தேடும் பிரதிநிதிகளாய்
கானகம் தேடுகின்றோம் அவலத்துடன்!
- Jancy Caffoor-
09.04.2013
மெல்லன
மெல்லன விழுந்தாய் விழியில் - என்
தேடலில் மொழிந்தாய் உன்னை!
விருப்போடிணைந்தாய் அன்று
வீம்போடு மறைந்தாய் இன்று
தொலைவினில் நீ இருந்தாலும்
அழியுமோ உந்தன் மீதுள்ள அன்பு
மாற்றங்கள் நீ தேடிச் செல்லு - அதுதான்
உன் வாழ்வின் ஏற்றப் படிக்கல்லு!
நீ
பறந்துதான் எங்கும் செல்லு - நானும்
விரைந்துதான் வருவேன் கொஞ்சம் நில்லு!
- Jancy Caffoor-
09.04.2013
மார்கரெட் ஹில்டா தாட்சர்
வாழ்க்கை எனும் மைப்புள்ளியை நோக்கி பயணிக்கும் நம் வாழ்வினை பல எதிர்பார்ப்புக்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும் கூட, அவ்வாழ்வில் நாம் சாதிக்கும் சாதனைகள்தான் நம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் அடையாளங்களாகிய நிற்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் என் சிந்தனையில், மறைந்த பிரிட்டிஷ் இரும்புப் பெண்மணி மார்க்கரெட் ஹில்டா தாட்சர்........எட்டிப்பார்க்கின்றார்.
அரசியல் மனிதனை வாழவும் வைக்கின்றது, விழவும் வைக்கின்றது. உலகப் புகழடைய மிகச் சிறந்த வழிமுறையாக அரசியல் விளங்குகின்றது. அந்த அரசியல் உட்பிரவேசமே தாட்சரையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்.
இங்கிலாந்து திருச்சபை மதத்தைச் சேர்ந்த இவர் , 13.08.1925 ல் ஜனனமாகி 13.04.2013 ல் இவ்வுலகை விட்டும் நீங்கியுள்ளார்.
1959 ம் ஆண்டு முதல் அரசியல் பிரவேசமாக இவருக்கு கை கொடுத்தது பின்ச்லே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியாகும். பின்னர் 1970ல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1975 ல் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரானார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் 1979 முதல் 1990 வரை 3 தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அன்னாரின் ஆம்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!
2013/03/11
தளிர் 2
சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்

-----------------------------------------------------
பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!

------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................
அடக்குமுறையின் மொழி!
----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்
-----------------------------------------------------
பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!
------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................
Subscribe to:
Posts (Atom)